இந்த மாதிரி செய்து கொடுத்தால் கோதுமை தோசை வேண்டாம் என்றே சொல்ல மாட்டார்கள்.!

godhumai maavu dosai in tamil

கோதுமை தோசை செய்வது எப்படி..?

கோதுமை தோசை என்றாலே பலருக்கும் பிடிக்காத ஒன்று. ஆனால் சப்பாத்தி செய்து கொடுத்தால் சாப்பிடுவார்கள். ஏனென்றால் கோதுமை தோசை மொறுமொறுவென்று இருக்காது. ருசியாகவும் இருக்காது. அதுமட்டுமில்லாமல் கோதுமையின் வாசம் தோசை சுடும் போது வரும். அதனாலேயே இந்த தோசையை விரும்ப மாட்டார்கள். இந்த பதிவில் கூறியுள்ளது போல் கோதுமை தோசை செய்து கொடுத்தால் கோதுமை தோசை வேண்டாம் என்றே சொல்ல மாட்டார்கள். வாங்க எப்படி செய்வது என்று தெரிந்து கொள்வோம்.

இதையும் படியுங்கள் ⇒ ஒரே மாவில் 5 வையான தோசை ரெசிபி செய்முறை..!

கோதுமை தோசை செய்ய தேவையான பொருட்கள்:

 1. கோதுமை மாவு – 1 1/2 கப்
 2. அரிசி மாவு – 1/4  கப்
 3.  உப்பு – தேவையான அளவு
 4. சமையல் எண்ணெய் – 1 தேக்கரண்டி
 5. கடுகு – 1/2 தேக்கரண்டி
 6. சீரகம் – 1/2 தேக்கரண்டி
 7. பச்சை மிளகாய் – 3
 8. நறுக்கிய  இஞ்சி – 1/2 தேக்கரண்டி
 9. கருவேப்பிலை – சிறிதளவு
 10. நறுக்கிய பெரிய வெங்காயம் – 1
 11. நறுக்கிய சிறிய தக்காளி – 1
 12. நறுக்கிய கொத்தமல்லி தழை – சிறிதளவு

தோசை செய்முறை:

ஸ்டேப்:1

முதலில் ஒரு கிண்ணத்தில் 1 1/2 கோதுமை மாவு சேர்த்து கொள்ளுங்கள். அதனோடு அரசி மாவு 1/4 கப் சேர்த்து கொள்ளுங்கள். அரசி மாவு சேர்ப்பதால் தோசை மொறுமொறுவென்று இருக்கும். பின் அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து கட்டி இல்லாமல் கலந்து கொள்ளவும். கோதுமை தோசைக்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கலந்து கொள்ளவும். மாவு கலந்த பிறகு அப்படியே ஒரு 15 நிமிடம் இருக்கட்டும். 

ஸ்டேப்:2

அடுத்து அடுப்பை பற்ற வைத்து கடாயை வைத்து கொள்ளுங்கள். அதில் தாளிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி கொள்ளுங்கள். எண்ணெய் காய்ந்ததும் கடுகு சேர்த்து கொள்ளுங்கள். கடுகு பொரிந்ததும் சீரகம், நறுக்கிய பச்சை மிளகாய், நறுக்கிய வெங்காயம், நறுக்கிய இஞ்சி, கருவேப்பிலை சிறிதளவு சேர்த்து வதக்குங்கள். 

ஸ்டேப்:3

வெங்காயம் சிவந்த நிறம் வந்தவுடன் நறுக்கிய தக்காளியை சேர்த்து வதக்குங்கள். தக்காளி சுருங்கிய பதம் வந்தவுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்குங்கள். அதனுடன் நறுக்கிய கொத்தமல்லி தழை சேர்த்து அடுப்பை அணைத்து விடுங்கள். 

ஸ்டேப்:4

இப்போது கோதுமை மாவுடன் வதக்கி வைத்த கலவையை சேர்த்து கொள்ளுங்கள். அடுத்து அடுப்பில் தோசை கல்லை வைத்து கலந்து வைத்த மாவை தோசையாக ஊற்றுங்கள்.

இந்த தோசையை சாப்பிட்டு பாருங்கள் சும்மா மொறுமொறுன்னு அப்படி ஒரு டேஸ்ட் இருக்கும்.

இதையும் படியுங்கள் ⇒ மிகவும் ருசியான சோயா பீன்ஸ் தோசை செய்வது எப்படி..?

இதுபோன்ற சுவைசுவையான சமையல் குறிப்புகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> சுவைசுவையான சமையல் குறிப்புகள்