How to Make Tea Recipe in Tamil | டீ போடுவது எப்படி?
ஹாய் பிரண்ட்ஸ் வணக்கம்.. எல்லார் வீட்டுலேயும் கண்டிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் டீ போட்டு குடிப்போம். இருந்தாலும் ஒரு நாள் டீ சுவையாக இருக்கும், இன்னொரு நாள் டீ சுவையாக இருக்காது. அதற்கு என்ன காரணமா இருக்கும்னு என்றாவது யோசித்தது உண்டா.. பொதுவாக நாம் டீ போடுவதில் நிறைய மிஷ்டேக் செய்திருப்போம். அந்த மிஸ்டேக்கை சரி தாலே போதும் தினமும் அருமையான சுவையில் ஆண்கள், பெண்கள் என்று யார் வேண்டுமானலும் டீயை போட்டுவிடலாம். சரி வாங்க சரியான முறையில் டீ எப்படி போட வேண்டும் என்று இப்பொழுது பார்த்துவிடுவோம்.
தேவையான பொருட்கள்:
நான்கு நபருக்கு டீ போடுவதற்கான அளவு:
- பால் – இரண்டு கிளாஸ்
- டீத்தூள் – ஒரு டேபிள்ஸ்பூன்
- ஜீனி – தேவையான அளவு
- தண்ணீர் – இரண்டு கிளாஸ்
குறிப்பு: (பால் நன்கு திக்காக இருந்தால் 2 டம்ளர் தண்ணீர் தாராளமாக ஊற்றலாம் அதுவே பால் கொஞ்சம் தண்ணியாக இருந்தால் பாலின் அளவை அதிகரித்துக்கொள்ளுங்கள், தண்ணீரின் அளவை குறைத்துக்கொள்ளுங்கள்.)
டீ போடுவது எப்படி? செய்முறை விளக்கம்:
அடுப்பில் பால் பாத்திரத்தை வைத்து இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடுங்கள்.
தண்ணீர் நன்கு கொதித்து வந்ததும் ஒரு டேபிள் ஸ்பூன் டீத்தூள் சேர்த்து நன்றாக கொத்திக்கவிடுங்கள். 3 நிமிடம் கழித்த பிறகு தேவையான அளவு சர்க்கரை சேர்த்து கொதிக்கவிடங்கள்.
சர்க்கரை சேர்த்தபிறகு 3 நிமிடம் வரை காத்திருக்கவும், பிறகு இரண்டு டம்ளர் பால் சேர்த்து 5 முதல் 10 நிமிடம் வரை கொதிக்க வைக்க வேண்டும். இந்த சமையம் அடுப்பை குறைவான தீயில் வைத்துவிடுங்கள். விருப்பம் இருந்தால் அதனுடன் இஞ்சி அல்லது ஏலக்காய் செய்துகொள்ளலாம் அது உங்கள் விருப்பம்.
10 நிமிடம் கழித்து டீயை அடுப்பில் இருந்து இறக்கி வடிகட்டில் உங்களுக்கு இதமான சூட்டில் தீயை ஆற்றி அருந்தலாம். இந்த டீ முன்போல் இருக்கும் டீயின் சுவையை விட மிகவும் அருமையான சுவையில் இருக்கும்.
டீயை இந்த முறையில் தான் போடவேண்டும். அனைத்து பொருட்களையும் ஒன்றாக கலந்து டீயை கொதிக்கவிடக்கூடாது. இந்த முறையை ஒரு முறை ட்ரை செய்து பாருங்கள் நன்றி வணக்கம்.
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | சமையல் குறிப்புகள் |