சளி, இருமல், உடல் வலியை போக்கும் திப்பிலி ரசம் செய்வது எப்படி?

Advertisement

How to make Thippili Rasam in Tamil!

அன்றாட வாழ்வில் நமக்கு திடிரென்று ஏற்படுகின்ற நோய்களை குணப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிப்பது ரசம் தான். ரசத்தில் பலவகைகள் இருக்கின்றன. அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகை நோய்களை குணப்படுத்துகின்றன. அந்த வகையில் இருமல், சளி, உடல்வலியை போக்கும் ரசம் தான்  திப்பிலி ரசம்.  இந்த திப்பிலி ரசத்தினை எப்படி எளிதில் தயார் செய்யலாம் என்பதனை பற்றி இப்பதிவில் தெரிந்துக்கொள்வோம்!

தேவையான பொருட்கள்:

  • துவரம் பருப்பு – 2 டீஸ்பூன
  • மிளகு – 1 டீஸ்பூன்
  • கொத்த மல்லி – 1 டீஸ்பூன்
  • திப்பிலி – 6
  • சீரகம் – 3/4 டீஸ்பூன்
  • புளி- தேவைக்கேற்ப சிறிதளவு
  • பழுத்த தக்காளி – 1
  • பூண்டு – 5 பல்
  • நல்லெண்ணெய் – 2 ஸ்பூன்
  • வர மிளகாய் – 1

இதையும் படியுங்கள் ⇒தினமும் ரசம் சாப்பிடுவது நல்லதா? கெட்டதா? கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!

செய்முறை:

ஸ்டேப் 1:

புளியை ஊறவைத்து கொள்ள வேண்டும்.

பூண்டினை தோலுடன் லேசாக தட்டி எடுத்துக்கொள்ள வேண்டும்.

ஸ்டேப் 2:

 thippili rasam tamil

ஒரு கடையில் துவரம் பருப்பு, கொத்த மல்லி, திப்பிலி, சீரகம் இவற்றை மிதமான  சூட்டில் நிறம் மாறும் வரை லேசாக வறுத்து எடுத்துக்கொள்ளவும்.

ஸ்டேப் 3:

அதனை சூடு ஆறியதும் மிக்ஸியில் போட்டு கொர கொர பதத்திற்கு அரைத்து தனியாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

ஸ்டேப் 4:

 thippili rasam tamil

 

ஊற வைத்துள்ள புளியின் கரைசலை எடுத்துக்கொள்ள வேண்டும். புளிக்கரைசலுடன் முழு தக்காளியையும் சேர்த்து கைகளால் நன்கு மசித்து விடவேண்டும்.

 thippili rasam tamil

இதையும் படியுங்கள் ⇒ரசம் பொடி செய்ய தேவையான பொருட்கள் என்னென்ன தெரியுமா.?

ஸ்டேப் 5:

ஒரு கடாயில் நல்லெண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் சூடானதும் சிறிது கடுகு, உளுத்தம் பருப்பு, வெந்தயம் சேர்க்க வேண்டும். அவை நன்கு பொரிந்ததும் வர மிளகாய் மற்றும் கருவேப்பிலை சேர்க்க வேண்டும். அதனுடன் தட்டி வைத்துள்ள பூண்டையும் சேர்த்து வதக்க வேண்டும்.

 how to make thippili rasam in tamil

ஸ்டேப் 7:

அதனுடன் புளி, தக்காளி கரைசலை ஊற்ற வேண்டும். பின் அதனுடன்  தேவைக்கேற்ப தண்ணீர், சிறிது மஞ்சள், சிறுது பெருங்காய தூள் மற்றும் ரசத்திற்கு தேவையான அளவு உப்பு சேர்க்க வேண்டும். அதனை நன்கு கலந்து விட வேண்டும்.

ஸ்டேப் 8:

 how to make thippili rasam in tamil

ரசத்தினை கொதிக்க விடாமல் நுரை பொங்கி வரும்போது அதனுடன் அரைத்து வைத்துள்ள ரச பொடியினை காரத்திற்கேற்ப சேர்க்க வேண்டும். பின் ரசத்தினை சிறுது கொதிக்க விட்டு இறக்கி விட வேண்டும். சூடான மிளகு, திப்பிலி ரசம் ரெடி.

இதையும் படியுங்கள் ⇒மழைக்காலத்தில் ஏற்படும் சளி,இருமலை போக்க இந்தமாதிரி தூதுவளை ரசம் செய்து பாருங்கள்..!

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> சமையல் குறிப்புகள்

 

 

 

 

Advertisement