இட்லி மாவில் வடை சுடுவது எப்படி? | Idli Mavil Vadai Seivathu Eppadi?
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பு சாப்பிடக்கூடிய ஸ்னாக்ஸ் வடை. இந்த வடையில் பல வகைகள் இருக்கிறது. ஒவ்வொன்றும் ஒவ்வொரு சுவையில் இருக்கும். வடையில் பல வகைகள் இருந்தாலும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய வடை மெதுவடை. இதனை உளுந்து வடை என்றும் சொல்வார்கள். சிறிய குழந்தைகள் இதனை கேலியாக ஓட்டை வடை என்று சொல்வார்கள். இந்த மெதுவடையை முறையாக செய்ய வேண்டும் என்றால் மாவை சரியான பக்குவத்தில் அரைக்க வேண்டும். இதன் காரணமாகவே மெது வடை செய்ய பெண்கள் தயங்குவார்கள். இனி கவலையோ, பயமோ தேவை இல்லை. மெது வடையை நீங்கள் இட்லி மாவை பயன்படுத்தி மிகவும் சுவையாகவும், மொறுமொறுப்பாகவும் செய்து அசத்தலாம். சரி வாங்க இந்த பதிவில் இட்லி மாவை பயன்படுத்தி மிகவும் சுவையாகவும், மொறுமொறுன்னு வடை செய்து எப்படி என்பதை பற்றி பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
- இட்லி மாவு – ஒரு கப்
- வெங்காயம் பொடிதாக நறுக்கியது – 1/2 கப்
- ரவை – 1 1/2 ஸ்பூன்
- கடலை மாவு அல்லது மைதா மாவு – 3 ஸ்பூன்
- மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை
- தேவையான அளவு – உப்பு
- பேக்கிங் சோடா – சிறிதளவு
- கொத்தமல்லி இலை – சிறிதளவு
- கருவேப்பிலை – சிறிதளவு
- பச்சைமிளகாய் – 2 (நறுக்கியது)
- அரிசி மாவு – 1/2 ஸ்பூன்
- சமையல் எண்ணெய் – 1/2 லிட்டர்
- மிளகு – ஒரு ஸ்பூன்
செய்முறை:
ஸ்டேப்: 1
ஒரு சுத்தமான பவுலில் ஒரு கப் இட்லி மாவினை எடுத்துக்கொள்ளுங்கள். அவற்றில் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாய், கருவேப்பிலை ஆகியவற்றை சேர்க்க வேண்டும்.
ஸ்டேப்: 2
பின் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள், கடலை மாவு 3 ஸ்பூன், அரிசி மாவு ஒரு ஸ்பூன், மிளகு ஒரு ஸ்பூன், பேக்கிங் சோடா சிறிதளவு, உப்பு தேவையான அளவு ஆகியவற்றை சேர்த்து நன்றாக பிசையவும்.
ஸ்டேப்: 3
இப்பொழுது வடை மாவு தயார். அடுப்பில் ஒரு கடாய் வைத்து 1/2 லிட்டர் எண்ணெய் சேர்த்து நன்றாக சூடேற்றவும். எண்ணெய் நன்கு சூடேறியதும் அடுப்பை மிதமான சூட்டில் வைத்து மீடியம் சைசில் வடை தட்டி எண்ணெயில் சேர்த்து பொரிக்கவும். அவ்வளவு தான் சூடான சுவையான மற்றும் மொறுமொறுப்பான மெது வடை தயார்.
ஒருமுறை ட்ரை செய்து பாருங்கள், மீண்டும் மீண்டும் சாப்பிட தோன்றும்.
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி..! |
இட்லி மாவில் சுவையான தேன் மிட்டாய் செய்வது எப்படி..! |
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Samayal Kurippugal |