இட்லி பவுடர் ரெசிபி செய்முறை | Idli Premix Recipe in Tamil
பலருக்கு இப்போது எல்லாம் இட்லி மாவு சரியான பக்குவத்தில் அரைக்க தெரிவதில்லை. இதன் காரணமாக பலர் இப்பொழுது கடைகளில் விற்கப்படும் இட்லி மாவை வாங்கி பயன்படுத்துகின்றன. அந்த அவையும் ஒரு நாளுக்கு மேல் பயன்படுத்த முடியாது. அடுத்தநாளே நன்றாக புளித்துவிடும். அதனை வீணாக கீழே கொடுப்பவர்களும் உண்டு. இந்த பிரச்சனைக்கு சிறந்த தீர்வளிக்கும் வகையில் இந்த பதிவு இருக்கும். ஆம் நண்பர்களே இட்லி மாவு அரைக்க இனி கவலைப்பட வேண்டியது இல்லை.. நீங்கள் Idli Premix Recipe-ஐ வீட்டிலேயே தயார் செய்து கொண்டால் போதும். உங்களுக்கு எப்பொழுது இட்லி ஊற்ற மாவு தேவைப்படுகிறதோ.. அப்பொழுது இந்த Idli Premix Recipe-ஐ தேவையான அளவு எடுத்து தண்ணீர் ஊற்றி மற்றும் தேவையான அளவு உப்பு செய்து கலந்து இட்லி ஊற்றி கொள்ளலாம். இட்லியும் நன்கு பஞ்சி போன்று மிகவும் சாப்டாக இருக்கும். இந்த பவுடர் எப்படி தயார் செய்யலாம் என்பதை பற்றி பொழுது நாம் பார்க்கலாம் வாங்க.
தேவையான பொருட்கள்:
இந்த பவுடர் செய்வதற்கு இட்லி மாவிற்கு தேவைப்படும் பொருட்கள் தான் தேவைப்படும். இருப்பினும் இந்த பவுடர் செய்ய சரியான அளவுகோலை இப்பொழுது காணலாம்.
- இட்லி – அரிசி ஒரு கப்
- முழு உளுந்து – 1/2 கப்
- மாவு ஜவ்வரிசி – 1/4 கப்
- வெள்ளை அவல் – 3/4 கப்
- வெந்தியம் – ஒரு ஸ்பூன்
Idli Premix செய்முறை:
முதலில் இட்லி அரிசியை நன்கு சுத்தமாக அலசிவிட்டு. தண்ணீரை முழுமையாக வடித்தெடுத்துவிடுங்கள்.
பிறகு ஒரு சுத்தமான கார்டன் துணியை விரித்து அவற்றில் இட்லி அரிசியை சேர்த்து நன்றாக பரப்பிவிட்டு வெயிலில் காயவைத்துக்கொள்ளவும்.
தண்ணீர் முழுமையாக வற்றியது அந்த அரிசியை ஒரு அகலமான கடாயிக்கு மாற்றிக்கொள்ளுங்கள்.
பின் அடுப்பை மிதமான தீயில் வைத்து அரிசியை 3 நிமிடங்கள் மட்டும் வறுக்கவும்.
வறுத்த அரிசியை ஒரு அகலமான பிளேட்டில் மாற்றி நன்கு ஆறவிடவும்.
அரிசி நன்கு ஆறியதும் ஒரு மிக்ஸி ஜாரில் மாற்றி கொள்ளுங்கள் பிறகு நைசாக பவுடர் போல் அரைக்காமல் கொரகொரப்பாக ரவா பதத்திற்கு தண்ணீர் ஊற்றாமல் அரைத்துக்கொள்ளுங்கள்.
அதன் பிறகு 1/2 கப் முழு உளுந்தை ஒரு அகலமான கடாயில் சேர்த்து 5 நிமிடம் வறுத்துக்கொள்ளுங்கள். அந்த சாமையை அடுப்பை மிதமான தீயில் தான் வைத்துக்கொள்ள வேண்டும். உளுந்தின் நிறம் மாறிவிட கூடாது. நிறம் மாறாமல் வறுத்துக்கொள்ளுங்கள்.
5 நிமிடம் கழித்து 1/4 கப் மாவு ஜவ்வரிசி, 3/4 கப் வெள்ளை அவல் ஆகியவரை இதனுடன் சேர்த்து வருக வேண்டும். 3 நிமிடங்கள் மட்டும் வறுத்தால் போதும் அதாவது அவல், ஜவ்வரிசி, உளுந்து இவற்றின் வாசனை வர ஆரம்பித்துவிட்டது என்றாலே போதும் அடுப்பை அணைத்து விடலாம்.
பிறகு அவற்றையும் ஒரு அகலமான பிளேட்டில் மாற்றி நன்றாக ஆறவைத்துக்கொள்ளுங்கள்.
பொருட்கள் அனைத்தும் ஆறியதும் மிக்ஸி ஜாரில் சேர்த்து அதனுடன் ஒரு ஸ்பூன் வெந்தியம் சேர்த்து நன்றாக பவுடர் போல் அரைத்து சல்லடையில் சலித்துக்கொள்ளுங்கள்.
இந்த மாவையும் நன்றாக ஆறவைத்து கொள்ளுங்கள். மாவு நன்றாக ஆறியதும் ஏற்கனவே அரைத்து வைத்துள்ள அரிசி மாவையும் இதனுடன் செய்து நன்றாக கலந்து ஒரு காற்றுப்புகாத பாட்டிலில் அடித்துக்கொள்ளலாம்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
ஒரே மாவில் 5 வையான தோசை ரெசிபி செய்முறை..!
பயன்படுத்தும் முறை:
நீங்கள் தயார் செய்த இட்லி பவுடரை காலை உணவுக்கு இட்லி மாவு வேண்டும் என்றால் முதல் நாள் இரவு இந்த இட்லி மாவை தேவையான அளவு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளுங்கள்.
பிறகு உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்றாக இட்லி மாவு கரைப்பது போல் கட்டிகள் இல்லாமல் உங்கள் கைகளை பயன்படுத்தி நன்றாக மாவை கரைத்து இரவு முழுவது மாவை புளிக்க வைக்க வேண்டும்.
பிறகு மறுநாள் காலை மாவை திறந்து பார்த்தால் மாவு அருமையாக புளித்து வந்திருக்கும் நீங்கள் எப்பொழுதும் போல இட்லி ஊற்றிக்கொள்ளலாம். இட்லி மிகவும் சாப்டாக பஞ்சிபோல் இருக்கும்.
இதுபோன்ற சுவைசுவையான சமையல் குறிப்புகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | சுவைசுவையான சமையல் குறிப்புகள் |