தோசை மாவு அரைக்க வேண்டாம் 10 நிமிடத்தில் தோசை ரெடி | Instant Dosa Recipe in Tamil
ஹாய் பிரண்ட்ஸ் வணக்கம்.. பொதுவாக எல்லார் வீட்டுலயும் இட்லி தோசை மாவை எப்பொழுதுமே காலை மற்றும் இரவு உணவுக்காக அரைத்து வைத்திருப்பார்கள். சில சமையம் ஏதாவது காரணத்தினால் இட்லி, தோசை மாவு அரைக்க நேரம் இருந்திருக்காது. அப்போது பலர் கடைகளில் விற்கும் மாவை வாங்கிட்டு வந்து பயன்படுத்துவாங்க. இனி அப்படிலாம் கடைக்கி சென்று தோசை மாவை வாங்க வேண்டாம். இந்த இண்டன்ட் தோசையை ஒருமுறை ட்ரை செய்து பாருங்கள். சுவை அருமையாக இருக்கும், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பிசாப்பிடுவார்கள். குறிப்பாக இதற்கு மாவு அரையாக்க வேண்டிய எந்த ஒரு அவசியமும் இருக்காது. சரி வாங்க இன்டன்ட் தோசை ரெசிபி செய்வது எப்படி என்று இப்பொழுது நாம் பார்த்துவிடலாம்.
தேவையான பொருட்கள்:
- அரிசி மாவு – ஒரு கப்
- ரவை – இரண்டு டேபிள் ஸ்பூன்
- தயிர் – 1/4 கப் (அரிசி மாவை எந்த கப்பை பயன்படுத்தி அளவாக எடுத்தீர்களோ அந்த கப்பில் 1/4 கப்)
- மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன்
- பச்சை மிளகாய் – 2 அல்லது மூன்று (பொடிதாக நறுக்கியது)
- உப்பு – தேவையான அளவு
- தண்ணீர் – 1 3/4 முக்கால் கப்
- சின்ன வெங்காயம் – நறுக்கியது ஒரு கைப்பிடி அளவு
- துருவிய கேரட் – ஒரு கைப்பிடி அளவு
- கருகப்பிலை – பொடிதாக நறுக்கியது ஒரு கொத்து
- கொத்தமல்லி – பொடிதாக நறுக்கியது சிறிதளவு
இன்சடன்ட் தோசை செய்முறை:
ஒரு பவுலை படுத்துக்கொள்ளுங்கள் அவற்றில் ஒரு கப் அரிசி மாவு, இரண்டு டேபிள் ஸ்பூன் ரவை, 1/4 கப் தயிர் மற்றும் 1 3/4 கப் தண்ணீர் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கட்டிகள் இல்லாதவாறு கலந்துகொள்ளுங்கள்.
பிறகு நறுக்கி வைத்துள்ள சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், கேரட், கருவேப்பிலை, கொத்தமல்லி ஆகியவற்றை செய்து நன்றாக கலந்துகொள்ளுங்கள்.
பிறகு 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவுக்கு உப்பு சேர்த்து மறுபடியும் நன்றாக மிக்ஸ் கொள்ளுங்கள்.
மிக்ஸ் செய்தபிறகு 1/2 மணி நேரம் நன்றாக ஊறவைக்கவும். 1/2 மணி நேரம் கழித்து தோசை ஊற்ற மாவை பயன்படுத்தலாம்.
மாவனது ரவை தோசை போன்று நன்றாக தண்ணியாகவே கலந்து கொள்ளுங்கள்.
பொழுது அடுப்பில் ஒரு தோசை கல்லை வைத்து சூடேற்றுங்கள், தோசை கல் சூடேறியது தயார் செய்து வைத்துள்ள மாவை இரண்டு கரண்டி எடுத்து தோசை முழுவது பரப்பி ஊற்றிவிடுங்கள் கேப் உள்ள இடத்திலும் மாவை ஊற்றி சுற்றி எண்ணெய் ஊற்றுங்கள்.
தோசை வெந்ததும் தோசை கல்லில் இருந்து தோசையை எடுத்துவிடுங்கள். இந்த தோசையை திருப்பிப்போட்டு வேக வைக்கவேண்டிய அவசியம் இருக்காது. ஒரு பக்க வெந்தாலே போதும் தோசை மிகவும் மொறு மொறுப்பாகவும் சுவையாகவும் இருக்கும். ஒரு முறை வீட்டில் ட்ரை செய்து பாருங்கள் நன்றி வணக்கம்..!
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👉👉 இட்லி, தோசை, சப்பாத்தி அனைத்திற்கும் ஏற்ற கருவேப்பிலை கார தொக்கு ஒரு முறை ட்ரை செய்து பாருங்கள்..!
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Samayal kurippu tamil |