லிக்யுட் பரோட்டா செய்முறை | Instant Soft Parotta in Tamil
பரோட்டா என்றாலே அனைவருக்கும் மிகவும் பிடித்த உணவு என்று சொல்லலாம். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடக்கூடிய ஒன்று. இந்த பரோட்டாவிற்கு சிக்கன் கிரேவி தொட்டுக்கொண்டு சாப்பிட்ட சுவை அப்படி இருக்கும். இருந்தாலும் கடையில் செய்ததை வாங்கி சாப்பிடுவதை விட. உங்கள் வீட்டிலேயே செய்து சாப்பிடுவது மிகவும் நல்லது. பரோட்டாவுக்கு மாவு பிசைவது பெரிய வேலை என்று யோசிக்கிரங்களா.. அப்படின்னா அந்த கவலையை இந்த பதிவை முழுமையாக படித்துவிட்டு விட்டு விடுங்கள். ஆமாங்க இனி பரோட்டா செய்ய மாவு பிசைய வேண்டாம் இந்த ட்ரிக்கை மட்டும் ஒரு முறை ட்ரை பண்ணுங்க. சரி வாங்க அது என்ன ட்ரிக் என்று இப்பொழுது நாம் பார்க்கலாம்.
Liquid Paratha Recipe in Tamil
தேவையான பொருட்கள்:
- மைதா – இரண்டு கப்
- தண்ணீர் – இரண்டு கப்
- சக்கரை – ஒரு ஸ்பூன்
- உப்பு – 1/4 ஸ்பூன்
- பேக்கிங் சோடா – இரண்டு சிட்டிகை
- சமையல் எண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன்
- முட்டை – ஒன்று
- ஒரு – வாட்டர் பாட்டில்
லிக்யுட் பரோட்டா செய்முறை:
ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக் கொள்ளுங்கள், அவற்றில் மேல் கூறப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும், குறிப்பிடப்பட்டுள்ள அளவுடன் சேர்த்து நன்றாக ஒரு நிமிடம் அரைத்து எடுத்துக்கொள்ளுங்கள்.
ஏன் எப்படி மிக்ஸியில் அரைக்க வேண்டும் என்றால் அப்பொழுது தான் மைதா மாவு கட்டிகள் இல்லாமல் நன்றாக கரைந்து வரும்.
மிக்ஸியில் அரைத்த மாவை ஒரு பவுலில் மாற்றி கொள்ளுங்கள். பின் ஒரு வாட்டர் பாட்டிலில் அந்த மாவை ஊற்றி கொள்ளுங்கள், அந்த பாட்டிலின் மூடியில் ஓட்டை போட்டு கொள்ளுங்கள்.
பின் அடுப்பில் ஒரு தோசை கல்லைக்வைத்து நன்றாக சூடுபடுத்திக்கொள்ளுங்கள். பாட்டிலில் உள்ள மாவை மேல் படித்தால் காட்டியுள்ளது போல் ஒற்றி கொள்ளுங்கள்.
பின் பரோட்டாவை சுற்றி சமையல் எண்ணெயை ஊற்றி கொள்ளுங்கள். இரண்டு நிமிடம் கழித்து பரோட்டாவை பிரட்டி போட்டு மாரு பக்கத்தையும் வேகவைக்க வேண்டும்.
அவ்வளவு தான் லிக்யுட் பரோட்டா தயார்.
இந்த லிக்யுட் பரோட்டா 50 சதவீதம் பரோட்டா சுவையில் இருக்கும், விருப்பம் இருந்தால் ஒரு முறை பற்றி செய்து பாருங்கள். இந்த லிக்யுட் பரோடாவிற்கு காரசாரமாக சிக்கன் கிரேவி, மட்டன் குழம்பு, இறால் கிரேவி தொட்டு கொள்வதற்கு மிகவும் சுவையாக இருக்கும் ஒரு முறை பற்றி செய்து பாருங்கள்.
குறைப்பு:
பாட்டிலில் உள்ள மாவு சில நேரம் ஓட்டையில் அடைத்துக்கொள்ளலாம் ஆகவே அப்படி இருந்தால் பாட்டிலை ஒரு முறை நன்றாக குளிக்கிக்கொள்ளுங்கள்.
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Samayal kurippu tamil |