ஐயர் வீட்டு பருப்பு ரசம் | Iyer Veetu Paruppu Rasam
தினமும் சாப்பிடும் போது சாம்பார், புளிக்குழம்பு, வத்த குழம்பு, மோர் குழம்பு ஏன் உருண்டை குழம்பு என எத்தனை வகையான ரெசிபியினை சாப்பிட்டாலும் கூட நாம் சாப்பிடும் ரசம் சாப்பாட்டிற்கு ஈடாக முடியாது என்பார்கள். அதனால் தினமும் ஏதோ ஒரு வகையான ரசத்தினை ஒரு சிலர் வீட்டில் கட்டாயமாக வைத்து விடுவார்கள். இத்தகைய ரசத்திலும் சில ஸ்பெஷல் ரசம் என்பதும் இருக்கிறது. நாம் இப்படி எத்தனை விதமான ஸ்பெஷல் ரசத்தினை சாப்பிட்டாலும் கூட ஐயர் வீட்டில் செய்யும் பருப்பு ரசம் தான் சிலர்க்கு மிகவும் பிடித்த ஒன்றாக இருக்கும். அதனால் இன்றைய பொதுநலம்.காம் பதிவில் சமையல்குறிப்பு பிரிவில் ஐயர் வீட்டு பருப்பு ரசம் சுவை தூக்கலாகவும் மற்றும் வாசனையாகவும் செய்வது எப்படி என்று தெரிந்துக்கொள்ள போகிறோம். எனவே பதிவினை தெளிவாக தொடர்ந்து வாசித்தால் மட்டுமே பருப்பு ரசத்தினை எந்த விதமான குழப்பமும் இல்லாமல் வைக்கலாம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇https://bit.ly/3Bfc0Gl
Paruppu Rasam Seivathu Eppadi:
ஐயர் வீட்டு பருப்பு ரசத்தினை செய்யும் முறை பற்றியும் அதற்கு தேவைப்படும் பொருட்கள் பற்றியும் ஒன்றன் கீழ் ஒன்றாக கொடுக்கப்பட்டுள்ளது.
என்னென்ன பொருட்கள் தேவை:
- துவரம் பருப்பு- 1/4 கப்
- தக்காளி- 2 பெரியது
- புளி- 1 கைப்பிடி அளவு
- மிளகு- 1 ஸ்பூன்
- சீரகம்- 1 ஸ்பூன்
- பூண்டு- 5 பற்கள்
- கடுகு- 1/4 ஸ்பூன்
- பெருங்காயம் தூள்- 1/4 ஸ்பூன்
- வெந்தயம்- மிகசிறிதளவு
- காய்ந்த மிளகாய்- 3
- பச்சை மிளகாய்- 2
- கறிவேப்பிலை- சிறிதளவு
- கொத்தமல்லி- சிறிதளவு
- உப்பு- தேவையான அளவு
- எண்ணெய்- தேவையான அளவு
இதையும் படியுங்கள்👇👇 ஐயர் வீட்டு சுவையான இட்லி பொடி செய்வது எப்படி தெரியுமா..
பருப்பு ரசம் செய்வது எப்படி..?
பருப்பினை வேக வைத்தல்:
முதலில் எடுத்துவைத்துள்ள துவரம் பருப்பினை சுத்தமாக தண்ணீரில் அலசி கொள்ளுங்கள். அதன் பிறகு அலசிய பருப்பினை குக்கரில் சேர்த்து அதனுடன் 1 1/2 கப் அளவு தண்ணீர் வைத்து நன்றாக வேக வைத்து தனியாக கொள்ளுங்கள்.
புளி கரைசல் தயாரித்தல்:
இப்போது எடுத்து வைத்துள்ள புளியினை போதுமான அளவு தண்ணீர் சேர்த்து 15 நிமிடம் ஊற வைத்து விடுங்கள். 15 நிமிடம் கழித்த பிறகு புளி கரைசலினை தயார் செய்து விடுங்கள்.
தக்காளி கரைசல்:
அடுத்து 2 பெரிய பழுத்த தக்காளியினை எடுத்துக்கொண்டு அலசிய பிறகு ஒரு பவுலில் 2 தக்காளியினையும் உங்களுடைய கைகளால் மசித்து கொள்ளுங்கள்.
பவுலில் பொருட்களை சேர்த்தல்:
ஒரு பவுலில் மஞ்சள் தூள், புளி கரைசல், பருப்பு தண்ணீர், மசித்த தக்காளி, தேவையான அளவு உப்பு மற்றும் பெருங்காயம் தூள் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். அவ்வளவு தான் ரசம் செய்ய கரைசல் தயார்.
மிக்சி ஜாரில் பொருட்கள் சேர்த்தல்:
அதன் பிறகு மிக்சி ஜாரில் எடுத்துவைத்துள்ள சீரகம், மிளகு, பூண்டு ஆகியவற்றையினை சேர்த்து கொரகொரப்பாக அரைத்து விடுங்கள்.
அடுப்பில் கடாயினை வைத்தல்:
கடைசியாக அடுப்பில் ஒரு கடாயினை வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்த பிறகு நறுக்கிய பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், கடுகு மற்றும் வெந்தயம் ஆகியவற்றை சேர்த்து 5 நிமிடம் தாளித்து கொள்ளுங்கள்.
ரசம் தயார்:
பின்பு சிறிது நேரம் கழித்த பிறகு கடாயில் பவுலில் வைத்துள்ள ரசக் கரைசலினை 5 முதல் 7 நிமிடம் வரை கொதிக்க விட்டு இறக்கி அதன் மேலே கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி தூவினால் போதும் தாறுமாறானா சுவையில் ஐயர் வீட்டு பருப்பு ரசம் தயார்.
இதையும் படியுங்கள்👇👇 இந்த ஒரு பொருளை சேர்ப்பதால் தான் ஐயர் வீட்டு தக்காளி சாதம் ருசியாக இருக்கிறது…
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Samayal Kurippugal |