இட்லி, தோசை, சப்பாத்தி அனைத்திற்கும் ஏற்ற கருவேப்பிலை கார தொக்கு ஒரு முறை ட்ரை செய்து பாருங்கள்..!

Karuveppilai Thokku in Tamil

கருவேப்பிலை தொக்கு செய்வது எப்படி?  – Karuveppilai Thokku in Tamil

ஹாய் பிரண்ட்ஸ் வணக்கம் பொதுவாக சமையலுக்கு பயன்படுத்தும் பொருட்களில் ஒன்று தான் கருவேப்பிலை.. ஆனால் யாருமே கருவேப்பிலையை சாப்பிடமாட்டார்கள். கருவேப்பிலையை ஏராளமான சத்துக்கள் உள்ளது. ஆக கருவேப்பிலையில் உள்ள முழு சத்துக்களையும் பெற கருவேப்பிலையில் ஒரு அருமையான கார தொக்கு செய்வது எப்படி என்று இந்த பதவியால் நாம் பார்க்கலாம். இந்த கருவேப்பிலை கார தொக்குடன் இட்லி, தோசை, சப்பாத்தி, சாதம் என அனைத்து உணவுகளுக்கும் தொட்டு கொள்வதற்கு மிகவும் சுவையாக இருக்கும். சரி வாங்க அது எப்படி செய்யணும்னு இப்பொழுது பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

எண்ணெய் – தேவையான அளவு
வெந்தயம் – 1/2 தேக்கரண்டி
கடலை பருப்பு – ஒரு தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு – ஓரு தேக்கரண்டி
வேர்க்கடலை – இரண்டு தேக்கரண்டி 
சீரகம் – ஒரு தேக்கரண்டி 
மல்லி – 1 1/2 கரண்டி 
வரமிளகாய் – காரத்திற்கு ஏற்ப 
பெருங்காயம் – 1/2 ஸ்பூன் 
கருவேப்பிலை – இரண்டு காப்பு  
புளி – சிறிதளவு 
கடுகு – ஒரு ஸ்பூன் 
பூண்டு – 8 இடித்தது 
மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன் 
உப்பு – தேவையான அளவு 

கருவேப்பிலை தொக்கு செய்முறை – Karuveppilai Thokku Recipe in Tamil:

ஸ்டேப்: 1

அடுப்பில் ஒரு வாணலியை வைத்து அவற்றில் இரண்டு டேபிள் ஸ்பூன் சமையல் எண்ணெயை ஊற்றிக்கொள்ளுங்கள். எண்ணெய் சூடானதும் அடுப்பை மிதமான சூட்டில் வைத்து கொள்ளுங்கள்.

ஸ்டேப்: 2

பிறகு அவற்றில் 1/2 ஸ்பூன் வெந்தயம், கடலை பருப்பு ஒரு ஸ்பூன், பச்சை வேர்கடலையாக இருந்தால் இதனுடன் சேர்த்து வறுத்துக்கொள்ளுங்கள். வறுத்த வேர்கடலையாக இருந்தால் கடைசியாக சேர்த்து வருது கொள்ளுங்கள்.

ஸ்டேப்: 3

கடலை பருப்பு, வெந்தயம், வேர்க்கடலை நிறம் பொன்னிறமாகும் வரை வறுக்க வேண்டும், பின் அதனுடன் ஒரு ஸ்பூன் சீரகம், 1 1/2 ஸ்பூன் மல்லி, பெருங்காயம் தூள் 1/4 சிட்டிகை, மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன் மற்றும் கரத்திற்கேற்ப வரமிளகாய் சேர்த்து வதக்க வேண்டும்.

ஸ்டேப்: 4

வறுத்த இந்த கலவையை எண்ணெய் இல்லாமல் ஒரு பிளேட்டில் எடுத்து நன்றாக ஆறவிடுங்கள். பிறகு அதே வாணலியில் ஓராண்டு கைப்பிடியளவு வருவேப்பிலையை மிதமான சூட்டில் ஒரு நிமிடம் மட்டும் வதக்கி எடுத்து கொள்ளுங்கள். பின்  கறிவேப்பிலையில் நன்றாக ஆறவிடுங்கள்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👉👉 வீட்டில் தினமும் இட்லி தோசையா அப்போ இதை ட்ரை பண்ணுங்க

ஸ்டேப்: 4

பிறகு ஒரு பவுலில் சிறிய நெல்லிக்காய் அளவு புளியை எடுத்து மூன்று ஸ்பூன் வெந்நீர் சேர்த்து நன்றாக 5 நிமிடம் ஊறவைத்துக்கொள்ளுங்கள்.

ஸ்டேப்: 5

இப்பொழுது மிக்ஸி ஜாரில் முதலில் வறுத்து வைத்த கடலை பருப்பு, வேர்க்கடலை, உளுத்தம்பருப்பு, மல்லி, மிளகாய் ஆகியவற்றை செய்து தண்ணீர் ஊற்றாமல் நன்றாக அரைத்துக்கொள்ளுங்கள்.

ஸ்டேப்: 6

பிறகு அதனுடன் வறுத்த கருவேப்பிலை, தேவையான அளவு உப்பு, ஊறவைத்த புளியை அந்த தண்ணீருடன் சேர்த்து நன்றாக துவையல் பதத்திற்கு அரைத்துக்கொள்ளுங்கள்.

ஸ்டேப்: 7

பிறகு அடுப்பில் ஒரு வாணலியை வைத்து இரண்டு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து எண்ணெய் சூடேறியதும் கடுகு, உளுத்தப்பருப்பு செய்து தாளிக்கவும்.

ஸ்டேப்: 8

பின் அதனுடன் இடித்த பூண்டை செய்து நன்றாக 2 நிமிடம் வதக்கிக்கொள்ளுங்கள் பிறகு அரைத்து வைத்துள்ள கலவையை இதனுடன் சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கினால் சுவையான மற்றும் அருமையான கருவேப்பிலை கார தொக்கு தயார்.

இந்த கருவேப்பிலையை அனைத்து உணவுகளுக்கும் தொட்டு கொண்டு சாப்பிடுவதற்கு மிகவும் நன்றாக இருக்கும் ஒரு முறை ட்ரை செய்து பாருங்கள்.

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Samayal kurippu tamil