அரிசி பாயாசம் செய்வது எப்படி..! Kheer Recipe in Tamil..!
ஹாய் ஃப்ரண்ட்ஸ்..! இன்றைய பொதுநலம் பதிவில் ஒரு புது ரெசிபி பார்க்க போறோம். அப்புடி என்ன புது ரெசிப்பினு யோசிக்கிறீங்களா..! அரிசியில் பாயாசம்(Kheer Rice) செய்வது எப்படின்னு பார்க்கலாம் வாங்க..!
கோதுமை மாவில் பத்தே நிமிடத்தில் சுவையான ஸ்வீட் செய்முறை..! Sweet Recipes in Tamil ..! Wheat Flour Snacks Recipes..! |
அரிசி பாயாசம் செய்வது எப்படி / Kheer Rice – தேவையான பொருட்கள்:
- நெய் – 2 டீஸ்பூன்
- ஏலக்காய் – 3
- கிராம்பு – 3
- பால் – 1 லிட்டர்
- அரிசி – 1 கப்
- தண்ணீர் – 2 கிளாஸ் அளவு
- khoya – 1/2 கப்
- சர்க்கரை – 2 கப்
- மில்க்மேட் – 3 டீஸ்பூன்
- எல்லோ புட் கலர் – தேவையான அளவு
- நறுக்கிய முந்திரி – சிறிதளவு
- நறுக்கிய பிஸ்தா – சிறிதளவு
- நறுக்கிய பாதாம் – சிறிதளவு
- திராட்சை – சிறிதளவு
அரிசி பாயாசம் செய்வது எப்படி / Kheer Recipe in Tamil – செய்முறை விளக்கம் 1:
முதலில் கடாயில் நெய் 2 டீஸ்பூன் எடுத்துக்கொள்ளவும். அடுத்து ஏலக்காய் 3, கிராம்பு 3 சேர்க்கவும்.
மூன்றையும் சேர்த்து நெய்யுடன் நன்றாக வதக்கி கொள்ளவும்.
அரிசி பாயாசம் செய்வது எப்படி / Kheer Rice – செய்முறை விளக்கம் 2:
நன்றாக வதக்கிய பின் பால் 1 லிட்டர் சேர்த்துக்கொள்ளவும். பாலை நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.
பால் நன்றாக கொதித்த பிறகு அரிசி 1 கப் சேர்த்துக்கொள்ளவேண்டும்.
அரிசி பாயாசம் செய்வது எப்படி / Kheer Recipe in Tamil – செய்முறை விளக்கம் 3:
அரிசியை நன்றாக கிளறிவிட வேண்டும். அரிசி வெந்தபிறகு தண்ணீர் 2 கிளாஸ் அளவிற்கு சேர்த்துக்கொள்ள வேண்டும்.
தண்ணீர் சேர்த்துவிட்டு நன்றாக கொதிக்கவைக்க வேண்டும்.
அரிசி பாயாசம் செய்வது எப்படி / Kheer Rice – செய்முறை விளக்கம் 4:
அதன்பிறகு khoya 1/2 கப் சேர்க்க வேண்டும். சேர்த்தபிறகு நன்றாக கரண்டியால் வைத்து மசித்துவிட வேண்டும்.
இதனுடன் 2 கப் சர்க்கரை சேர்த்து நன்றாக கலக்கவும்.
அரிசி பாயாசம் செய்வது எப்படி / Kheer Recipe in Tamil – செய்முறை விளக்கம் 5:
சர்க்கரை சேர்த்த பிறகு நன்றாக கொதித்து வரும் நிலையில் மில்க்மேட் 3 டீஸ்பூன் சேர்க்கவும்.
மில்க்மேட் சேர்த்தப்பின் நன்றாக கலக்கவும்.
இட்லி மாவில் பகோடா செய்வது எப்படி..! Evening Snacks Recipes..! Tea Time Snacks..! |
அரிசி பாயாசம் செய்வது எப்படி / Kheer Rice – செய்முறை விளக்கம் 6:
அடுத்ததாக மில்க்மேட் நன்றாக கொதித்தபிறகு எல்லோ புட் கலர் தேவையான அளவு சேர்த்து கொள்ளவும்.
எல்லோ புட் கலர் சேர்ந்தவுடன் நன்றாக மிக்ஸ் பண்ணவும்.
அரிசி பாயாசம் செய்வது எப்படி / Kheer Recipe in Tamil – செய்முறை விளக்கம் 7:
எல்லோ புட் கலரை சேர்த்து நன்றாக கொதித்த பின் தனியாக ஒரு கடாயில் 1 ஸ்பூன் நெய் ஊற்றிக்கொள்ளவும்.
நெய்யுடன் நறுக்கிய முந்திரி சிறிதளவு சேர்த்து வதக்கி கொள்ளவும்.
அரிசி பாயாசம் செய்வது எப்படி / Kheer Rice – செய்முறை விளக்கம் 8:
அடுத்ததாக நெய்யுடன் நறுக்கிய பிஸ்தா சிறிதளவு சேர்த்து வதக்கவும்.
பிஸ்தா சேர்த்தபிறகு அதனுடன் நறுக்கிய பாதாம் சிறிதளவு சேர்த்து நன்றாக நெய்யுடன் வதக்கவும்.
அரிசி பாயாசம் செய்வது எப்படி / Kheer Recipe in Tamil – செய்முறை விளக்கம் 9:
கடைசியாக நெய்யில் திராட்சை சிறிதளவு சேர்த்து எல்லாவற்றையும் பழுப்பு நிறம் வரும் அளவிற்கு நன்றாக வதக்கி கொள்ளவும்.
நன்றாக வதக்கிய பின் தனி பிளேட்டில் வதக்கியதை எடுத்துக்கொள்ளவும்.
அரிசி பாயாசம் செய்வது எப்படி / Kheer Rice – செய்முறை விளக்கம் 10:
அடுத்ததாக கடாயில் உள்ள அரிசி பாயாசத்தில் நெய்யில் வதக்கி வைத்துள்ளதை சேர்த்துக்கொள்ளவும்.
சேர்த்தப்பிறகு பாயாசத்தை நன்றாக கிளற வேண்டும்.
அவ்ளோதாங்க இந்த சுவையான அரிசி பாயாசம் ரெடி. இந்த பதிவில் கூறியுள்ள அரிசி பாயாசம்(Rice Kheer in Tamil) டிப்ஸை எல்லாரும் படித்து கண்டிப்பா ட்ரை பண்ணி பாருங்க..!
சுவையான முட்டைகோஸ் கறி சமையல்..! Cabbage curry in tamil..! |
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Samayal Kurippugal |