கோவில் ஸ்டைலில் சாம்பார் சாதம் செய்வது எப்படி.?

Advertisement

சாம்பார் சாதம் செய்வது எப்படி.? | ஐயர் வீட்டு சாம்பார் சாதம் செய்வது எப்படி

வணக்கம் நண்பர்களே.! சாம்பார் என்றால் பலருக்கும் பிடித்தமான குழம்பு. அதிலும் கோவிலில் கொடுக்கும் சாம்பார் சாதம் என்றால் விரும்பி சாப்பிடுவார்கள். கோவிலில் கொடுக்கும் சாம்பார் சாதத்திற்காகவே பலரும் கோவிலுக்கு செல்வார்கள். வீட்டில் வைக்கும் சாம்பார் சாதத்தை விட அப்படி என்ன கோவிலில் கொடுக்கும் சாம்பார் சாதம் எப்படி ருசியாக இருக்கிறது என்று பலரும் யோசித்திருப்பீர்கள். அப்படி யோசிப்பவர்களுக்கு இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும். வாங்க கோவிலில் வைக்கும் சாம்பார் சாதம் போலவே வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்வோம்.

Kovil Sambar Sadam Recipe in Tamil:

Kovil Sambar Sadam Recipe in Tamil

சாம்பார் சாதம் செய்ய தேவையான பொருட்கள்:

  1. பருப்பு- 1/2 கப் 
  2. அரிசி- 3/4 கப்
  3. கடலை பருப்பு – 1 தேக்கரண்டி 
  4. மல்லி – 1 தேக்கரண்டி 
  5. மிளகு – 2 தேக்கரண்டி 
  6. உளுத்தப்பருப்பு – 1 தேக்கரண்டி 
  7. சோம்பு –1 தேக்கரண்டி 
  8. சீரகம் – 1 தேக்கரண்டி 
  9. காய்ந்த மிளகாய் – 1 தேக்கரண்டி 
  10. துருவிய தேங்காய் – 2 தேக்கரண்டி
  11. நெய் –4 தேக்கரண்டி 
  12. கேரட் – தேவையான அளவு
  13. கத்திரிக்காய் –தேவையான அளவு 
  14. சின்ன வெங்காயம் – 10 
  15. தக்காளி –2 தேவையான அளவு
  16. பச்சை பட்டாணி – தேவையான அளவு
  17. முருங்கைக்காய் – தேவையான அளவு

இதையும் படியுங்கள் ⇒சாம்பார் பொடி செய்வதற்கு தேவையான பொருட்களின் அளவுகள் தெரியுமா.?

கோவில் சாம்பார் சாதம் செய்வது எப்படி.? 

ஸ்டேப்:1 

முதலில் குக்கரை எடுத்து கொள்ளவும். அதில் 3/4 கப் அரிசியும், 1/2 கப் பருப்பு இரண்டையும் கழுவி விட்டு சேர்த்து கொள்ளவும். அதனுடன் 4 கப் தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்.  அடுப்பை மிதமான தீயிலே வைத்து 4 விசில் வர வேண்டும்.

ஸ்டேப்:2

அடுத்து ஒரு கடாய் வைத்து கொள்ளுங்கள். அதில் எண்ணெய் ஊற்றி கொள்ளுங்கள். எண்ணெய் சூடானதும் கடலை பருப்பு 1 தேக்கரண்டி, 1 தேக்கரண்டி மல்லி, 2 தேக்கரண்டி மிளகு, 1 தேக்கரண்டி உளுத்தப்பருப்பு, சோம்பு 1 தேக்கரண்டி, சீரகம் 1 தேக்கரண்டி, 5 காய்ந்த மிளகாய் சேர்த்து சிவந்த நிறம் வரும் வரை வதக்கி கொள்ளுங்கள். பின் துருவிய தேங்காய் 2 தேக்கரண்டி சேர்த்து வதக்கி கொள்ளுங்கள். வதக்கிய பொருட்கள் ஆறியதும் மிக்சியில் சேர்த்து அரைத்து கொள்ளுங்கள்.

ஸ்டேப்:3

பின் அடுப்பை பற்ற வைத்து ஒரு பாத்திரத்தை வைத்து கொள்ளுங்கள். அதில் 1 தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து கொள்ளுங்கள். எண்ணெய் சூடானதும் மஞ்சள் தூள் 1/2 தேக்கரண்டி, 1/4 தேக்கரண்டி பெருங்காய தூள், பச்சை மிளகாய் 3, சின்ன வெங்காயம் 10 சேர்த்து வதக்கி கொள்ளுங்கள்.

ஸ்டேப்:4

பின் நறுக்கி வைத்த கேரட், உருளைக்கிழங்கு, பீன்ஸ், வெள்ளரிக்காய், கத்தரிக்காய், முருங்கைக்காய் பச்சை பட்டாணி, தக்காளி 2, அரைத்து வைத்த மசாலா சேர்த்து வதக்கி கொள்ளுங்கள். காய்கறி வேகின்ற அலர்விற்கு தண்ணீர் ஊற்றி வேக வைத்து கொள்ளுங்கள். காய்கறி வெந்ததும் புளி கரைசலை சேர்த்து கொள்ளுங்கள். தேவையான அளவு உப்பு சேர்த்து அதனுடன் வேக வைத்த பருப்பு மற்றும் சாதத்தையும் சேர்த்து கட்டி இல்லாமல் கலந்து விடுங்கள். பின் 5 நிமிடம் வேக வைத்து கொள்ளுங்கள். கொஞ்சம் இளகிய பதம் இருக்கும் போதே அடுப்பை அணைத்து விடுங்கள்.

ஸ்டேப்:5

அடுத்து தாளிப்பதற்கு ஒரு கடாய் வைத்து கொள்ளுங்கள். 2 தேக்கரண்டி நெய் சேர்த்து கொள்ளுங்கள். நெய் உருகியதும் முந்திரி பருப்பு 5 சேர்த்து வதக்கி தனியாக எடுத்து கொள்ளுங்கள். அதே நெய்யில் கடுகு சிறிதளவு, வெந்தயம் சிறிதளவு, கறிவேப்பிலை சிறிதளவு, காய்ந்த மிளகாய் 2 சேர்த்து வதக்கி கொள்ளுங்கள்.

ஸ்டேப்:6

பிறகு வதக்கி வைத்த பொருட்களை செய்து வைத்துள்ள சாதத்தில் சேர்த்து கலந்து விடவும். அவ்ளோ தாங்க சுவையான கோவில்  ஸ்டைல் சாம்பார் சாதம் ரெடி.! ருசிக்கலாம் வாங்க..!

இதையும் படியுங்கள் ⇒  சின்ன வெங்காய சாம்பார் இப்படி செய்து பாருங்கள்.!

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> samayal kurippugal in tamil

 

Advertisement