சுவையான மத்தி மீன் குழம்பு செய்வது எப்படி? | Mathi Meen Kulambu Seivathu Eppadi
வணக்கம் நண்பர்களே இன்றைக்கு சூப்பரான சுவையான வித்தியாசமான மத்தி மீன் குழம்பு செய்வது எப்படி என்பதை இந்த பதில் பார்க்க போகிறோம். பொதுவாக மீன் குழம்பு என்றால் எல்லாருக்கும் பிடிக்கும். அதுவும் மத்தி மீன் குழம்பு என்றால் எப்படி இருக்கும். மத்தி மீனில் அதிகம் முள் இருந்தாலும் இதன் ருசி எப்போதும் தனித்துவமாக இருக்கும். வாங்க இப்பொது தேங்காய்பால் ஊற்றி புதுமையான மத்தி மீன் குழம்பு எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருள்:
- கடுகு -1 ஸ்பூன்
- வெங்காயம் -3
- வெந்தயம் 1/2 ஸ்பூன்
- பூண்டு -10 பல்
- கறிவேப்பிலை
- கல் உப்பு
- தக்காளி -3 அரைத்தது
- மஞ்சள்தூள் -1 /4
- மிளகாய்த்தூள் -2 ஸ்பூன்.
- குழம்பு தூள் – 4 ஸ்பூன்.
- புளி கரைசல் -50 கிராம்
- தேங்காய்பால் – 1/2 மூடி
- சுத்தம் செய்த மத்தி மீன் – 1/2 கிலோ.
மத்தி மீன் குழம்பு செய்யும் முறை | Mathi Meen Kulambu Seimurai Tamil
ஸ்டேப்: 1
- ஒரு கடாயில் 1/4 எண்ணெய் உற்றி அதில் கடுகு 2 ஸ்பூன், வெந்தயம் 1/2 ஸ்பூன். நறுக்கிய பூண்டு 10 பல் போட்டு பொரிந்தவுடன் அதில் வெங்காயம் கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.
ஸ்டேப்: 2
- நன்றாக வதங்கிய பின் அதில் அரைத்த வைத்த தக்காளி போட்டு அதனுடன் மஞ்சள்தூள் 1/4 ஸ்பூன், மிளகாய்த்தூள் 2 ஸ்பூன், குழம்பு தூள் 4 ஸ்பூன் போடவும்.
ஸ்டேப்: 3
- பின் அதில் உள்ள பச்சை தன்மை போகும் வரை நன்றாக வதக்கவும்.
நெய் மீன் குழம்பு வைப்பது எப்படி |
ஸ்டேப்: 4
- பின்பு அதனுடன் புளி கரைசல் 50 கிராம் ஊற்றி அதில் தண்ணிர் திட்டமாக ஊற்றி கொள்ளவும்.
ஸ்டேப்: 5
- பின்பு 10 நிமிடம் குழம்பை கொதிக்க விடவும். பிறகு அதில் எடுத்து வைத்த தேங்காய்பால் 1/2 மூடி ஊற்றவும்.
ஸ்டேப்: 6
- தேங்காய் பால் ஊற்றி கொதித்த பிறகு மத்தி மீன்னை அதில் போடவும். மீனை போடும் பொழுது அதில் தண்ணிர் இல்லாமல் போடவும்.
ஸ்டேப்: 7
- மீனை போட்ட பிறகு வேக வைக்க 3 நிமிடம் போதும். பிறகு உங்களுக்கு பிடித்த சுவையான தேங்காய்ப்பால் மத்தி மீன் குழம்பு ரெடி.
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | சமையல் குறிப்புகள் |