சேமியாவில் மிக்சர் செய்வது எப்படி.?

Advertisement

சேமியா மிக்சர் 

அனைவருக்கும் இனிய வணக்கங்கள் நண்பர்களே..! இன்றைய பதிவில் நாம் பார்க்கப்போவது சேமியாவை வைத்து ஸ்னாக்ஸ் ரெசிபி. அப்படி என்ன ஸ்னாக்ஸ் ரெசிபி என்றுதானே யோசிக்கிறீர்கள் சேமியா மிக்சர். இதுவரை நாம் அனைவரும் சேமியாவை வைத்து பாயாசம், கிச்சடி, கேசரி போன்றவற்றை தான் செய்து சாப்பிட்டிருப்போம் ஆனால் சேமியாவை வைத்து மிக்சர் செய்வது எப்படி.? என்பதை பற்றித்தான் பார்க்கப்போகிறோம். இந்த பதிவை முழுதாக படித்து பயன்பெறுங்கள்.

இதையும் படியுங்கள் => மாலை நேரத்தில் டீயுடன் இந்த ஸ்னாக்ஸ் செஞ்சி சாப்பிட்டு பாருங்க..!

தேவையான பொருட்கள்:

முதலில் சேமியா மிக்சர் செய்ய தேவையான பொருட்களை பார்ப்போம்.

  • சேமியா – 200 கிராம் 
  • வெண்ணெய் – 1 டீஸ்பூன் 
  • அரிசிமாவு – 1/2 கப் 
  • சோளமாவு(cornflour) – 1/2 கப் 
  • எண்ணெய் – சேமியாவை பொறிக்க தேவையான அளவு 
  • பொட்டுக்கடலை – 1/4 கப் 
  • பூண்டுப்பல்  – 8
  • வேர்க்கடலை – 1/4 கப் 
  • கருவேப்பிலை – 1/4 கப் 
  • மிளகாய்த்தூள் – 1 1/2 டீஸ்பூன்  
  • தண்ணீர் – 1/2 லிட்டர் 
  • உப்பு – தேவையான அளவு 

செய்முறை:

ஸ்டேப் – 1

how to make mixer snacks in tamil

முதலில் அடுப்பை பற்ற வைக்கவும்.  அதில் ஒரு கடாயை வைத்து அதில் 1/2 லிட்டர்  தண்ணீர் ஊற்றவும். அதில் சேமியாவிற்கு தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.  அதனுடன் 1 டீஸ்பூன் வெண்ணெயை சேர்த்து இந்த தண்ணீர் நன்றாக கொதித்தவுடன் அதில் நாம் எடுத்து வைத்திருக்கும் 200 கிராம் சேமியாவை இரண்டாக உடைத்து சேர்த்துக் கொள்ளவும். அது நன்கு வெந்தவுடன் அதனை தண்ணீர் இல்லாமல் நன்கு வடிகட்டி தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.

ஸ்டேப் – 2

mixer seivathu eppadi

அடுத்து ஒரு பாத்திரத்தில் நாம் எடுத்துவைத்திருக்கும் 1/2 கப் அரிசிமாவு மற்றும் 1/2 கப் சோளமாவு(cornflour) சேர்த்து அதனுடன் நாம் வேகவைத்து வடிகட்டி  வைத்திருக்கும் சேமியாவை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

ஸ்டேப் – 3

 mixture snacks recipe in tamil

பின்பு அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் சேமியாவை பொறிக்க தேவையான அளவு எண்ணெயை ஊற்ற வேண்டும்.   அதில் நாம் கலந்து வைத்திருக்கும் சேமியாவை இரண்டு பிரிவாக போட்டு பொரித்து கொள்ளவும்.

ஸ்டேப் – 4

 semiya mixer snacks in tamil

அதே எண்ணெயில் 8 பூண்டுபல், 1/4 கப் வேர்க்கடலை மற்றும் 1/4 கப் கருவேப்பிலை இவை அனைத்தையும் பொரித்து எடுத்து கொள்ளவும்.

ஸ்டேப் – 5

 semiya snacks in tamil

பிறகு ஒரு பாத்திரத்தில் நாம் முன்பு வறுத்து எடுத்து வைத்திருந்த சேமியாவுடன் 1/4 கப் பொட்டுக்கடலை, நாம் வறுத்து வைத்திருந்த 8 பூண்டுப்பல் , 1/4 கப் வேர்க்கடலை மற்றும் 1/4 கப் கருவேப்பிலை, 1 1/2 டீஸ்பூன் மிளகாய்த்தூள், சிறிதளவு உப்பு இவை அனைத்தையும் சேர்த்து நன்கு கலந்துவிட்டால் நமது சுவையான சேமியா மிக்சர் ரெடியாகிவிட்டது வாங்க சுவைக்கலாம்..!

நீங்களும் இந்த சுவையான சேமியா மிக்சரை செய்து சுவைத்து பாருங்கள்..!

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> சமையல் குறிப்புகள்!!!

 

Advertisement