மதியம் என்ன சமைப்பது என்று ஒரே குழப்பமா? 5 நிமிடத்தில் மோர் ரசம் வைத்து அசத்துங்கள்..!

mor rasam recipe in tamil

Mor Rasam Recipe in Tamil

நண்பர்களே வணக்கம் இன்றைய பதில் அனைவரும் ஈசியா செய்யகூடிய ஒரு உணவை பற்றி தான் இந்த பதிவு. பொதுவாக தினமும் சாம்பார் ரசம், புளிக்குழம்பு மட்டன் சிக்கன் என்று 7 நாட்களும் இதே செய்து அலுத்து போயிருப்பீர்கள். ஆனால் இது கூட கிடைக்காமல் ஆண்கள் வெளியூர் சென்று சம்பாதிக்கிறார்கள். அவர்களுக்கு அவர்களே சமைத்து சாப்பிட்டுவிட்டு வேலைக்கு செல்வார்கள். அதெல்லாம் செய்பவர்களுக்கு அவ்வளவு கடினமாக இருக்கும்.

அப்படி இருக்கும்பட்சத்தில் கடையில் வாங்கி சாப்பிட்டால் அவ்வளவு சுத்தாகவும் இருக்காது. அது  உடலுக்கு கேடு விளைவிக்கும். எதோ ஒரு நாள் வேலைக்கு லேட் ஆகிவிட்டால் உடனே கடையில் வாங்கி சாப்பிடுவோம். ஆனால் அன்று சாப்பாடு வாயிற்குள் செல்லாது. அன்று பட்னிதான். இனி அதனை பற்றிய கவலை வேண்டாம் 5 நிமிடத்தில் மோர் ரசம் வைத்து எடுத்து செல்லலாம் அது உங்களுக்கு நன்மையும் அளிக்கும்.

மோர் ரசம் செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்:

 1. தயிர் – 1/2 லிட்டர்
 2. அரிசி மாவு – 2 ஸ்பூன்
 3. உப்பு – 1 ஸ்பூன்
 4. மஞ்சள் தூள் – 1 ஸ்பூன்
 5. எண்ணெய் – 2 ஸ்பூன்
 6. கடுகு – 1/2 ஸ்பூன்
 7. சீரகம் – 1 ஸ்பூன்
 8. வெந்தயம் –1 ஸ்பூன்
 9. மிளகு – 1 டீஸ்பூன்
 10. வரமிளகாய் – 5
 11. மோர் மிளகாய் – மூன்று
 12. கருவேப்பிலை – ஒரு கொத்து
 13. பெருங்காயத்தூள் – 1/4 ஸ்பூன்
 14. கொத்தமல்லித்தழை – சிறிதளவு

மோர் ரசம் செய்வது எப்படி?

ஸ்டேப் -1

முதலில் கெட்டியாக இருக்கக்கூடிய தயிரை எடுத்துக்கொள்ளவும். பின்பு அதனை கட்டியாக இல்லாமல் நன்றாக கலந்துகொள்ளவும். தண்ணீயாக இருக்கும் வரை கடையவும்.

ஸ்டேப் -2

இப்போது கரைத்து வைத்த மோரில் மஞ்சள் தூள் 1 ஸ்பூன் மற்றும் தேவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும்.

ஸ்டேப் -3

கரைத்ததை தனியாக வைத்துவிட்டு ஒரு கடாயை எடுத்து அடுப்பில் வைத்து தேவையான அளவிற்கு எண்ணெய் விட்டு கடுகு போட்டு பொரிய விடுங்கள். பொரிந்த பின் அதனுடன் மிளகு, சீரகம் சேர்த்து இதனையும் தாளிக்க வேண்டும்.

அதேபோல் இதனுடன் முக்கியமாக ஒரு ஸ்பூன் வெந்தயம் மற்றும் ஒரு கொத்து கருவேப்பிலையை சேர்த்துக் கொள்ளுங்கள்,

கடைசியாக மோரில் ஊறவைத்த மோர் மிளகாய் மற்றும் வரமிளகாய் இரண்டையும் சேர்த்துக்கொள்ளவும். அனைத்து பொருட்களும் வதங்கிய பின் கடைசியாக 1/4 ஸ்பூன் பெருங்காயத்தூள் சேர்த்து அடுப்பை அணைத்துவிடவும்.

பிறகு முதலில் தனியாக கரைத்துவைத்த மோருடன் தாளித்த அனைத்தையும் சேர்த்து. கடைசியாக தேவையென்றால் கொத்தமல்லி தலையை சிறிதாக நறுக்கி அதில் தூவி மதியம் சாதத்தில் பிசைந்து சாப்பிட்டு பாருங்கள் சுவை சும்மா அள்ளும்..!

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Samayal Kurippugal