செட்டிநாடு மட்டன் கோலா உருண்டை செய்முறை விளக்கம்..!

Advertisement

செட்டிநாடு மட்டன் கோலா உருண்டை செய்முறை விளக்கம் (Mutton kofta recipe)..!

இன்று நாம் அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய சுவையான மற்றும் அனைத்து சைவ பிரியர்களுக்கும் பிடித்த மட்டன் கோலா உருண்டை (mutton kofta recipe) செய்வது எப்படி என்று இங்கு நாம் தெரிந்து கொள்வோம் வாங்க…

மட்டன் கோலா உருண்டை செய்ய தேவையான பொருட்கள்:-

  1. மட்டன் கொத்துக்கறி – 500 கிராம்
  2. எண்ணெய் – தேவையான அளவு
  3. உப்பு – தேவையான அளவு
  4. சோம்பு – 1 தேக்கரண்டி
  5. கச கசா – 1 தேக்கரண்டி
  6. முந்திரி பருப்பு – சிறிதளவு
  7. வறுத்த பொட்டுக்கடலை – 1 1/2 மேசைக்கரண்டி
  8. இஞ்சி – ஒரு துண்டு (பொடிதாக நறுக்கியது)
  9. பூண்டு – 4 பற்கள் (பொடிதாக நறுக்கியது)
  10. கிராம்பு –
  11. பச்சை மிளகாய் – 2 (பொடிதாக நறுக்கியது)
  12. வெங்காயம் – 1 (பொடிதாக நறுக்கியது)
  13. கறிவேப்பிலை – சிறிதளவு
  14. துருவிய தேங்காய் – 1/4 கப்
  15. முட்டை – 1
  16. கொத்தமல்லி இலை – சிறிதளவு

100% KFC சிக்கன் செய்யும் முறை தமிழில்..!

Mutton Kola urundai seivathu eppadi விளக்கம்:-

Step: 1

முதலில் அடுப்பில் ஒரு கடாய் வைத்து ஆற்றில் இரண்டு மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி, எண்ணெய் நன்கு சூடேறியதும் அடுப்பை மிதமான சூட்டில் வைத்து ஒரு ஸ்பூன் சோம்பு, ஒரு ஸ்பூன் கசகசா, சிறிதளவு முந்திரி பருப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

அதன் பிறகு 1/2 கப் பொட்டுக்கடலையை சேர்த்து வதக்க வேண்டும்.

Step: 2

பின் இதனுடன் ஒரு துண்டு பொடிதாக நறுக்கிய இஞ்சி, 4 பற்கள் பொடிதாக நறுக்கிய பூண்டு, 2 பொடிதாக நறுக்கிய பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

பிறகு இந்த கலவையுடன் 4 கிராம்பு, பொடிதாக நறுக்கிய வெங்காயம், சிறிதளவு கருவேப்பிலை, 1/4 துருக்கிய தேங்காய் மற்றும் தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக ஒரு வதக்கி கொள்ளவும்.

நாட்டுக்கோழி குழம்பு வைப்பது எப்படி ?

Mutton kola urundai – Step: 3

இறுதியாக இதனுடன் 500 கிராம் மட்டன் கொத்து கறியை சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் கறியை 15 நிமிடங்கள் வரை கிளறிவிட வேண்டும்.

15 நிமிடம் கழித்த பின்பு அடுப்பை அனைத்து, கறியை ஆறவிடுங்கள் கறி நன்கு ஆறியதும் இந்த கலவையை மிக்ஷி ஜாரில் தண்ணீர் சேர்க்காமல் மைபோல் அரைத்து கொள்ளவும்.

பருப்பு உருண்டை குழம்பு செய்வது எப்படி

Mutton kola urundai – Step: 4

இப்பொழுது அரைத்த கலவையை ஒரு சுத்தமான பவுலில் மாற்றிக்கொண்டு. சிறு சிறு உருண்டைகளாக பொரிப்பதற்கு தயாராக உருட்டி வைத்துக்கொள்ளவும்.

பிறகு அடுப்பில் ஒரு கடாய் வைத்து அவற்றில் உருண்டை பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்றி கொள்ளவும். எண்ணெய் சூடேறியது உருட்டி வைத்துள்ள உருண்டைகளை சேர்த்து பொன்னிறமாக பொரிதெடுக்கவும்.

அவ்வளவுதான் சுவையான மட்டன் கோலா உருண்டை தயார். அனைவருக்கும் சுடசுட அன்போடு பரிமாறவும்.

சுவையான சமையல் சிக்கன் லாலிபாப் செய்முறை விளக்கம்..!

 

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Samayal kurippu tamil
Advertisement