வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

ஹோட்டல் ஸ்டைல் பன் பரோட்டா செய்வது எப்படி..! Bun Parotta Recipe In Tamil..!

Updated On: April 6, 2022 11:43 AM
Follow Us:
How To Make Bun Parotta At Home
---Advertisement---
Advertisement

மதுரை பன் பரோட்டா செய்வது எப்படி..! Madurai Bun Parotta Recipe In Tamil..!

Pan Parotta in Tamil: நண்பர்களுக்கு வணக்கம்..! இன்றைய பொதுநலம்.காம் பதிவில் அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய மதுரை பன் பரோட்டா வீட்டிலே சுவையாக எப்படி செய்யலாம்னு பார்க்கலாம். பரோட்டா பிடிக்காதவர்களே யாரும் இருக்க மாட்டார்கள். சிலருக்கு பரோட்டா செய்வது கடினமான விஷயம் என்று நினைத்து பரோட்டாவை  கடையில் மட்டுமே வாங்கி உண்பார்கள். இனி அதை விட்டு விட்டு வீட்டிலே பரோட்டா ஈஸியா எப்படி செய்யலாம்னு தெரிந்து கொள்ளுவோம் வாங்க..!

newசுவையான மதுரை கறி தோசை செய்வது எப்படி ..!

மதுரை பன் பரோட்டா செய்முறை:

தேவையான பொருட்கள்:

  1. மைதா மாவு – 1 கப் 
  2. உப்பு – தேவையான அளவு 
  3. சர்க்கரை – 1 ஸ்பூன் 
  4. காய்ச்சிய பால் – 1 கரண்டி அளவு 
  5. முட்டை – 1 
  6. தண்ணீர் – தேவையான அளவு 
  7. எண்ணெய் – சிறிதளவு 

Steps 1:

முதலில் ஒரு பாத்திரத்தில் மைதா மாவு 1 கப் அளவு எடுத்து கொள்ளவும். மைதா மாவுடன் தேவையான அளவிற்கு உப்புவை சேர்த்து கொள்ளவேண்டும்.

அடுத்ததாக சர்க்கரை 1 ஸ்பூன் அளவு மைதாவுடன் சேர்க்க வேண்டும்.

Steps 2:

சர்க்கரை சேர்த்த பிறகு மாவை நன்றாக மிக்ஸ் செய்துகொள்ள வேண்டும். இதனுடன் காய்ச்சி வைத்து ஆரிய பாலை 1 கரண்டி அளவிற்கு சேர்க்க வேண்டும்.

பால் சேர்த்த பிறகு 1 முட்டையை உடைத்து சேர்த்து கொள்ள வேண்டும்.

இப்போது எல்லாவற்றையும் கையால் மாவினை பிசைந்து கொள்ளவேண்டும்.

Steps 3:

அடுத்து மாவில் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து மாவினை பிசைய வேண்டும். தண்ணீரை நிறைய அளவு சேர்க்காமல் தேவையான அளவிற்கு மட்டும் சேர்க்க வேண்டும்.

10 நிமிடம் நன்றாக அழுத்தி மாவை பிசைந்து வைக்கவும். கையில் ஒட்டாத அளவிற்கு மாவின் தன்மை வந்த பிறகு மாவில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து பிசைந்து 2 மணி நேரம் தனியாக மூடி ஊறவைக்க வேண்டும்.

newஸ்பெஷலான முட்டை சாண்ட்விச் மற்றும் ப்ரெஷ்ஷான புதினா சட்னியும் ரெசிபி !!!

Steps 4:

2 மணிநேரம் கழித்து அதை எடுத்தவுடன் மாவானது மிகவும் மென்மையான தன்மைக்கு இருக்கும். இப்போது இந்த மாவை கையால் பிசைந்து உருண்டை வடிவில் எல்லா மாவையும் உருட்டி எடுத்து கொள்ள வேண்டும்.

உருட்டிய உருண்டையின் மேல் சிறிதளவு எண்ணெயை தடவி கொள்ளவேண்டும். இதையும் 1 மணிநேரம் மூடி போட்டு நன்றாக ஊறவைக்க வேண்டும்.

Steps 5:

1 மணிநேரம் பின்னர் பரோட்டா போடும் இடத்தில் எண்ணெயை தேய்த்து வைத்து கொள்ளவேண்டும். அந்த இடத்தில் உருண்டையாக உருட்டி வைத்துள்ளதை அகலமாக தேய்த்து கொள்ளவேண்டும்.

தேய்த்ததை இரண்டு பகுதியாக மடக்கி வைத்துக்கொள்ள வேண்டும். மடக்கி வைத்த பிறகு விரலால் மாவை சுற்றி எடுத்துக் கொள்ளவும்.

சுற்றி எடுத்து, பிறகு ஒரு தடவை மாவை தேய்த்து கொள்ளவும்.

Steps 6:

இப்போது கடாயில் எண்ணெய் ஊற்றி மிதமான சூட்டில் வைத்து தேய்த்த உருண்டை மாவை கடாயில் பழுப்பு நிறத்தில் வரும் நிலையில் பரோட்டாவை பிரட்டி எடுக்க வேண்டும்.

அவ்ளோதாங்க பன் பரோட்டா ரெடி. பரோட்டாவை சூடான நிலையில் இருக்கும் போதே இரு கைகளால் தட்டி எடுத்து கொள்ளவும். அப்போதுதான் பரோட்டா லேயராக பிரிந்து வரும்.

சுவையான பரோட்டா ரெடி..! வீட்ல எல்லாரும் ட்ரை பண்ணி பாருங்க..!

newரெஸ்டாரண்ட் ஸ்டைல் சிக்கன் 65 ரெசிபி இதோ..!
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> சுவை சுவையான சமையல் குறிப்புகள்!!!

 

Advertisement

Santhiya Annadurai

வணக்கம் என் பேர் சந்தியா, எனக்கு எழுதுவது மிகவும் பிடிக்கும், Pothunalam.com இல் எனக்கு பிடித்த சமையல் குறிப்பு, தமிழ் சார்ந்த தகவல், தொழில் சார்ந்த தகவல்கள், ஆரோக்கியம் மற்றும் அழகு குறிப்பு போன்ற செய்திகளை உங்களுக்காக எழுதுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

beetroot payasam recipe in tamil

வீட்டில் பீட்ரூட் ,சேமியா இருக்கா..? அப்போ இதை செய்து பாருங்கள்..!

potato kari recipe in tamil

புரட்டாசி பொறந்துடுச்சினு கவலை கொள்ள வேண்டாம் சாம்பாருக்கு சைடிஷ் கறிவருவல்போல உருளைக்கிழங்கு வறுவல்

valakkai varuval recipe in tamil

புரட்டாசியில் மீன் வறுவல் சாப்பிட முடியவில்லை என்று கவலை படுகிறீர்களா.! இந்த மாதிரி செய்து செய்து சாப்பிடுங்கள்..!

kalan 65 recipe in tamil

யாரெல்லாம் புரட்டாசி வாங்க சைவ 65 சாப்பிடுவோம்..!

veg omelette recepi in tamil

முட்டை இல்லாமலே ஆம்லெட் செய்ய தெரியுமா.?

புரட்டாசி சனிக்கிழமை

புரட்டாசி சனிக்கிழமை பூஜை பிரசாதங்கள் மற்றும் வழிபடும் முறை..!

Ellu Sadam Recipe in Tamil

புரட்டாசி மாத ஸ்பெஷல் எள்ளு சாதம் இப்படி செய்து பாருங்கள்..!

palapalam kolukattai in tamil

இந்த வருட விநாயகர் சதுர்த்திக்கு ஸ்பெஷலானா பலாப்பழம் பூரணம் கொழுக்கட்டை செய்து பாருங்கள்

potato payasam recipe in tamil

விநாயகர் சதுர்த்திக்கு இப்படி ஒரு பாயசம் செய்து விடுங்கள்