ஒரு முறை இப்படி பெப்பர் சிக்கன் வறுவல் செய்து அசத்துங்கள்..! Pepper Chicken Fry Tamil..!
அசைவ பிரியர்களுக்கு சிக்கன் என்றாலே மிகவும் பிடித்த ஒன்று.. சிக்கனில் பல வகையான ரெசிபி செய்யலாம். அனைத்துமே அவ்வளவு டேஸ்ட்டியாக இருக்கும். அதிலும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெப்பர் சிக்கன் வறுவலை விரும்பி சாப்பிடுவார்கள். உங்களுக்கு பெப்பர் சிக்கன் வறுவல் செய்ய தெரியாது என்றால் கவலையை விடுங்க.. இன்றைய பதிவில் அருமையான சுவையில் பெப்பர் சிக்கன் வறுவல் செய்வது எப்படி என்று பார்க்க போகிறோம். இங்கு கூறப்பட்டுள்ள விளக்கங்களை படித்து உங்கள் வீட்டில் பெப்பர் சிக்கனை செய்து அசத்துங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇https://bit.ly/3Bfc0Gl
தேவையான பொருட்கள்:
- கொத்தமலை விதை – ஒரு ஸ்பூன்
- மிளகு – ½ ஸ்பூன்
- கிராம்பு – 5
- ஏலக்காய் – 4
- இலவங்க பட்டை – 2
- சீரகம் – ஒரு ஸ்பூன்
- பெருஞ்சீரகம் – ½ ஸ்பூன்
- காய்ந்த மிளகாய் – 4
- பெரிய வெங்காயம் – 2 (பொடிதாக நறுக்கியது)
- பச்சை மிளகாய் – 3 (நீளவாக்கில் கீறியது)
- சிக்கன் – ½ கிலோ
- உப்பு – தேவையான அளவு
- கருவேப்பிலை – இரண்டு கொத்து
- மஞ்சள் தூள் – ½ ஸ்பூன்
- இஞ்சி பூண்டு விழுது – ஒரு ஸ்பூன்
- எண்ணெய் – தேவையான அளவு
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
மட்டன் பிரியாணி, சிக்கன் பிரியாணி எந்த பிரியாணியாக இருந்தாலும் இது தாங்க ஏத்த சைடிஸ்
பெப்பர் சிக்கன் வறுவல் செய்முறை:
ஸ்டேப்: 1
அடுப்பில் ஒரு வாணலியை வைத்து அதில் கொத்தமல்லி விதை, மிளகு, கிராம்பு, சீரகம், சோம்பு, பட்டை, ஏலக்காய், காய்ந்த மிளகாய் ஆகியவற்றை சேர்த்து வாசனை வரும் வரை வறுக்கவும்.
ஸ்டேப்: 2
பிறகு அடுப்பில் இருந்து இறக்கி நன்கு ஆறவைக்கவும், பின் மிக்சி ஜாரில் சேர்த்து பொடி செய்து கொள்ளவும்.
ஸ்டேப்: 3
பிறகு அடுப்பில் ஒரு வாணலியை வைத்து அதில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடேற்றவும்.
ஸ்டேப்: 4
எண்ணெய் சூடானது நறுக்கிவைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் கருவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.
ஸ்டேப்: 5
வெங்காயம் நன்கு வதங்கியதும் ஒரு ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்டை சேர்த்து அதன் பச்சை வாசனை நீங்கும் வரை வதக்கவும்.
ஸ்டேப்: 6
பிறகு சிக்கனை சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும், பிறகு அதனுடன் ½ ஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கிளறிவிடுங்கள். பின் மூடி போட்டு சிக்கனில் தண்ணீர் பிரிந்து வரும் வரை வேகவைக்கவும்.
ஸ்டேப்: 7
10 நிமிடத்திற்குள் சிக்கனில் இருந்து தண்ணீர் பிரிந்து வந்திருக்கும். இப்பொழுது அரைத்து வைத்துள்ள மசாலா பொடியை சேர்த்து தண்ணீர் வற்றும் வரை நன்றாக கிளறி விடுங்கள்.
ஸ்டேப்: 8
சிக்கனில் தண்ணீர் முழுவதும் வற்றியதும் அவற்றில் கொத்தமல்லி இலையை பொடிதாக நறுக்கி தூவி இறக்கினால் சுவையான மற்றும் அருமையான பெப்பர் சிக்கன் ரெடியாகிவிடும். இதனை நீங்கள் வெறும் ரசத்திற்கு சைடிஷாக தொட்டுக்கொண்டாலும் சம டெஸ்ட்டியாக இருக்கும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
மிகவும் சுலபமான முறையில் வீட்டிலேயே சிக்கன் 65 மசாலா செய்வது எப்படி..?
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | சமையல் குறிப்புகள் |