மகா சிவராத்திரி ஸ்பெஷல் இனிப்பு பிடி கொழுக்கட்டை செய்முறை..!

Advertisement

பிடி கொழுக்கட்டை எப்படி செய்ய வேண்டும்? | Sweet Pidi Kozhukattai Recipe in Tamil

நாளை மகா சிவராத்திரிக்கு பெரும்பாலோனோர் ஈசனுக்கு படையல் வைக்க பிடி கொழுக்கட்டை, சக்கரைவள்ளி கிழங்கு, சக்கரை பொங்கல் என அனைத்தும் செய்து வழக்கம். அந்த வகையில் இந்த பதிவில் இனிப்பு பிடி கொழுக்கட்டை செய்வது எப்படி? இதனை செய்வதற்கு என்னென்ன சமையல் பொருட்கள் தேவைப்படும் என்பதை பற்றி இப்பொழுது நாம் பார்க்கலாம் வாங்க.

Pidi Kolukattai Recipe in Tamil:

தேவைப்படும் பொருட்கள்:

  • பச்சரிசி – இரண்டு கப்
  • வெல்லம் – ஒன்றரை கப்
  • ஏலக்காய் தூள் – அரை டீஸ்பூன்
  • தண்ணீர் – நான்கு கப்
  • துருவிய தேங்காய் – அரை மூடி

பிடி கொழுக்கட்டை செய்வது எப்படி?

இந்த கொழுக்கட்டை செய்வதற்கு முதலில் ஒரு சுத்தமான பாத்திரத்தில் சிறிதளவு தண்ணீர் மற்றும் வெல்லம் ஊற்றி அடுப்பில் வைத்து வெல்லம் கரைந்ததும் இறக்கி, வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.

பிறகு ஒரு பாத்திரத்தில் பச்சரிசி மாவு, ஏலக்காய் தூள், தேங்காய் துருவல் சேர்த்து நன்றாக கலந்து அதில் வடிகட்டிய வெல்லக்கரைசலை ஊற்றி கைவிடாமல் கெட்டியாக கிளற வேண்டும்.

இவை ஆறியதும், மாவை கையால் கொழுக்கட்டை போல் பிடித்து வைக்கவும்.

பிடித்த கொழுக்கட்டைகளை இட்லி பாத்திரத்தில் வைத்து 5 முதல் 10 நிமிடங்கள் வரை வேகவைக்கவும் பிறகு கொழுக்கட்டை வெந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி பரிமாறலாம். இப்போது சூப்பரான இனிப்பு பிடி கொழுக்கட்டை தயார்.

இதனை மகா சிவராத்திரி அன்று செய்து அசத்துங்கள். மிகவும் சுவையாக இருக்கும்.

 

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> samayal kurippugal in tamil
Advertisement