ஐயர் வீட்டு பூண்டு தொக்கு இப்படி செய்யுங்க இட்லி, தோசை, சப்பாத்தி, சாதமுடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும்..!

ஐயர் வீட்டு பூண்டு தொக்கு இப்படி செய்யுங்க இட்லி, தோசை, சப்பாத்தி, சாதமுடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும்..! Poondu Thokku Recipe in Tamil..!

நண்பர்களுக்கு வணக்கம்.. இன்று நாம் ஐயர் வீடுகளில் செய்யக்கூடிய பூண்டு தொக்கு எப்படி செய்யலாம் என்பதை பற்றி தெரிந்துகொள்வோம். இந்த பூண்டு தொக்கை நீங்கள் இட்லி, தோசை, சப்பாத்தி மற்றும் சாதத்துடன் தொட்டுக்கொள்ள மிகவும் சுவையாக இருக்கும். இந்த பூண்டு தொக்கை உங்கள் வீட்டில் உள்ள சிறியவர்கள் முதல் பெரியவர்கள் அனைவருமே விரும்பி சாப்பிடுவார்கள். குறிப்பாக இந்த தொக்கு ஒரு மாதம் வரை கெட்டு போகாது. சரி வாங்க ஐயர் வீடுகளில் செய்யக்கூடிய பூண்டு தொக்கு செய்வது எப்படி? என்னென்ன பொருட்கள் தேவைப்படும். போன்ற விவரங்களை இப்பொழுது நாம் பார்க்கலாம் வாங்க.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

தேவையான பொருட்கள்:

 1. நல்லெண்ணெய் – குளிக்கரண்டி
 2. காய்ந்த மிளகாய் – 10
 3. பூண்டு – 1 கப்
 4. இஞ்சி – 1 துண்டு
 5. சீரகம் – 1/2 ஸ்பூன்
 6. புளி – 1 எலுமிச்சை அளவு
 7. வெல்லம் – சிறிய துண்டு
 8. உப்பு – தேவையான அளவு
 9. வெந்தயம் – 10
 10. கடுகு – ¼ ஸ்பூன்
 11. கருவேப்பிலை – ஒரு கொத்து

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
இட்லி, தோசை, சாதம், சப்பாத்திக்கு ஏற்ற வெங்காய தொக்கு இப்படி செய்து அசத்துங்கள்..!

பூண்டு தொக்கு செய்முறை – Poondu Thokku Recipe in Tamil:poondu thokku recipe in tamil

ஸ்டேப்: 1

அடுப்பில் ஒரு வாணலியை வைத்து அதில் குளிக்கரண்டி நல்லெண்ணெயை ஊற்றி சூடுபடுத்தவும். எண்ணெயை சூடானதும் அடுப்பை மிதமான தீயில் வைத்து 10 காய்ந்த மிளகாயை சேர்த்து கருக்கவிடாமல் சிவக்க வறுத்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.

ஸ்டேப்: 2

பிறகு அவற்றில் ஒரு கப் தோலுரித்த பூண்டை சேர்த்து நன்கு 5 நிமிடம் வதக்கவும். பிறகு சீரகம் 1/4 ஸ்பூன், சிறிய இஞ்சி துண்டை சிறிது சிறிதாக கட் செய்து அதனுடன் சேர்த்து நன்றாக வதக்கவும். பின்பு புளியை சேர்த்து நன்றாக வதக்கவும்.

ஸ்டேப்: 3

பூண்டானது மேல் படத்தில் காட்டப்பட்டுள்ளது போல் நன்கு நிறம் மாறி வரும் வரை வதக்க வேண்டும். பின் அடுப்பை அணைத்து வதக்கிய பொருட்களை நன்கு ஆறவிட்டு வேண்டும்.

ஸ்டேப்: 4

பிறகு ஒரு மிக்சி ஜாரை எடுத்துக்கொள்ளுங்கள் அதில் முதலில் வறுத்து வைத்த மிளகாய் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் அரைத்துக்கொள்ளுங்கள். பின் அதனுடன் வதக்கி வைத்துள்ள பொருட்கள் மற்றும் சிறிய துண்டு வெல்லம் சேர்த்து அரைத்துக்கொள்ளுங்கள்.

ஸ்டேப்: 5

இவ்வாறு அரைத்த பூண்டு தொக்கை தாளித்து கொள்ளலாம் அல்லது வெறுமென அப்படியே இட்லி, தோசை, சப்பாத்தி, சாதமுடன் சேர்த்து சாப்பிடலாம்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
சுவையான மாங்காய் தொக்கு செய்முறை!

ஸ்டேப்: 6

ஒரு வேளை தாளிக்க வேண்டும் என்று அடுப்பில் வாணலி வைத்து எண்ணெய் ஒரு ஸ்பூன் கடுகு 1/4 ஸ்பூன், 10 வெந்தயம் மற்றும் கருவேப்பிலை சேர்த்து தாளித்து அவற்றில் ஊற்றி கலந்துகொள்ளுங்கள். அவ்வளவு தான் சுவையான ஐயர் வீட்டு பூண்டு தொக்கு தயார்.

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>  சமையல் குறிப்புகள்