கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் கம கமக்கும் இறால் பிரியாணி செய்வது எப்படி? | Prawn Biryani in Tamil

Advertisement

இறால் பிரியாணி செய்வது எப்படி? | Prawn Biryani Recipe in Tamil

இறால் என்றாலே சிறிய குழந்தை முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள். நாம் வீட்டில் இறாலில் குழம்பு, கிரேவி, வறுவல் இது மாதிரியான டிஷ் தான் செய்து சாப்பிட்டுருப்போம். இறால் பிரியாணி செய்து சாப்பிட்டு இருக்கிறீர்களா? சிக்கன், மட்டன் பிரியாணியை விட இறாலில் பிரியாணி செய்து சாப்பிட்டால் சூப்பராக இருக்கும். இதுவரை யாரும் செய்திடாத இறால் பிரியாணியை வீட்டிலே எப்படி செய்து அசத்தலாம் என்று படித்து நீங்களும் வீட்டில் உள்ள அனைவருக்கும் செய்து அன்புடன் பரிமாறுங்கள்.

சேமியா சிக்கன் பிரியாணி செய்வது எப்படி

இறால் பிரியாணி செய்ய தேவையான பொருள்:

  • இறால் – அரை கிலோ
  • வெங்காயம் – 2
  • தக்காளி – ஒன்று
  • பிரியாணி இலை – ஒன்று
  • எண்ணெய் – தேவையான அளவு
  • மராத்தி மொக்கு – ஒன்று
  • லவங்கம் – 3
  • சோம்பு தூள் – ஒரு தேக்கரண்டி
  • கொத்தமல்லித் தழை, புதினா – ஒரு கைப்பிடி அளவு 
  • கறிமசாலா தூள் – ஒரு தேக்கரண்டி
  • இஞ்சி பூண்டு பேஸ்ட் – ஒரு மேசைக்கரண்டி
  • தயிர் – ஒரு மேசைக்கரண்டி
  • பட்டை – சிறு துண்டு
  • மிளகாய் தூள் – அரை தேக்கரண்டி
  • பச்சை மிளகாய் – 3
  • மஞ்சள் தூள் – சிறிது
  • பிரியாணி மசாலா – அரை தேக்கரண்டி
  • அன்னாசிப்பூ – பாதி
  • ஏலக்காய் – 3

சுவையான இறால் பிரியாணி செய்வது எப்படி:

ஸ்டேப்: 1 இறால் பிரியாணி செய்வதற்கு முதலில் நீங்கள் எடுத்து வைத்துள்ள இறாலை நன்றாக சுத்தம் செய்து அதில் மஞ்சள் தூள், உப்பு, தயிர், சிறிது மிளகாய் தூள் சேர்த்து நன்றாக கலந்து அரைமணி நேரம் ஊற வைக்கவும்.

ஸ்டேப்: 2 அடுத்து வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி, புதினாவை பொடி பொடியாக நறுக்கி தனியாக எடுத்து கொள்ளவும்.

ஸ்டேப்: 3 இப்போது அடுப்பில் நல்ல கனமான பாத்திரத்தை வைத்து கொஞ்சம் எண்ணெய் சேர்த்து எண்ணெய் நன்றாக சூடேறிய பிறகு பட்டை, ஏலக்காய், அன்னாசிப்பூ, சோம்பு தூள், லவங்கம், மராத்தி மொக்கு, பிரியாணி இலை சேர்த்து தாளிக்க வேண்டும்.

ருசியான சேமியா மட்டன் பிரியாணி செய்வது எப்படி?

 

ஸ்டேப்: 4 தாளித்த பிறகு வெங்காயம், பச்சை மிளகாயை சேர்த்து நன்றாக வதக்கிவிடவும். 

ஸ்டேப்: 5 வெங்காயத்தை நன்றாக வதக்கிய பிறகு அதிலே இஞ்சி பூண்டு பேஸ்டை சேர்த்து ஒருமுறை வதக்கிவிடவும்.

ஸ்டேப்: 6 அடுத்து அதில் பிரியாணி மசாலா, மஞ்சள் தூள், மிளகாய் தூள், கறிமசாலா தூள் சேர்த்து வதக்கிவிடவும். வதக்கிய பிறகு தக்காளி, கொத்தமல்லி, புதினா சேர்த்து வதக்கிக்கொள்ளவும்.

ஸ்டேப்: 7 தக்காளி நன்றாக குழைந்த பதத்திற்கு வெந்ததும் ஊறவைத்துள்ள இறாலைச் சேர்த்து ஒரு முறை பிரட்டி விடவும். அதை அதிகமாக அதிகம் வதக்கக் கூடாது.

ஸ்டேப்: 8 இப்போது இதில் 2 கப் அரிசிக்கு 3 1/4 முதல் 3 1/2 கப் தண்ணீர் விட்டு உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும். 

ஸ்டேப்: 9 அடுத்து நன்றாக கொதி வந்ததும் அரிசியை அதில் சேர்த்து மீண்டும் ஒருமுறை கொதிக்க வைக்கவும். அதன் பிறகு மூடியால் மூடி அடுப்பை மிதமான சூட்டில் வைக்கவும். முக்கால் பதம் வெந்ததும் தம்மில் போடவும்.

ஸ்டேப்: 10 டேஸ்டியான இறால் பிரியாணி ரெடியாகிட்டு.. நீங்களும் ட்ரை பண்ணுங்க..!

மீன் பிரியாணி செய்வது எப்படி

 

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Samayal Kurippugal
Advertisement