ராஜ்மா கிரேவி செய்வது எப்படி | Rajma Gravy Recipe in Tamil

Rajma Recipe

ராஜ்மா கிரேவி செய்முறை | Rajma Recipe in Tamil 

Rajma Recipe: வணக்கம் நண்பர்களே..! இன்றைய பொதுநலம்.காம்-ல் ராஜ்மா கிரேவி எப்படி செய்யலாம் என்பதை பற்றித்தான் படித்து தெரிந்துக்கொள்ள போகிறோம். இந்த ராஜ்மாவை வட இந்திய மாநிலத்தில் அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர். இப்போது தென்னிந்திய மாநிலத்திலும் அதிகளவு சமையலில் உபயோகிக்கின்றனர். இந்த ராஜ்மாவிற்கு சிவப்பு காராமணி என்று மற்றொரு பெயரும் உள்ளது. ராஜ்மாவை உணவில் அதிகமாக சேர்த்துக்கொண்டால் உடலானது எப்போதும் ஆரோக்கியத்துடன் காணப்படும். இந்த பதிவில் ராஜ்மாவில் என்னென்ன சத்துக்கள் அடங்கியுள்ளது, என்னென்னெ நோய்களை குணப்படுத்தலாம், சத்துக்கள் நிறைந்த ராஜ்மா கிரேவி எப்படி செய்யலாம் என்பதை பற்றியும் இந்த பதிவில் படித்து தெரிந்துகொள்ளுவோம்..!

இப்படி செய்ங்க காளான் கிரேவியை – செம்ம டேஸ்ட்..!

ராஜ்மா கிரேவி செய்ய – தேவையான பொருள்:

 1. ராஜ்மா (சிகப்பு காராமணி) – 1/2 கிலோ 
 2. வெங்காயம் – 4
 3. தக்காளி – 3
 4. பச்சை மிளகாய் – 5
 5. இஞ்சி – ஒரு துண்டு
 6. பூண்டு – 6 பல்
 7. மிளகாய்த்தூள் – 4 மேசைக்கரண்டி
 8. மல்லித்தூள் – 3 மேசைக்கரண்டி
 9. கரம் மசாலா தூள் – ஒரு மேசைக்கரண்டி
 10. சீரகம் – ஒரு தேக்கரண்டி
 11. பிரியாணி இலை – 2
 12. வெண்ணெய் – ஒரு சிறிய துண்டு
 13. கொத்தமல்லி தழை – ஒரு பிடி
 14. எண்ணெய் – 1/4 கப் 
 15. உப்பு – தேவையான அளவு

ராஜ்மா கிரேவி செய்முறை:

Rajma Recipe in Tamil 

Step 1: முதலில் ராஜ்மா கிரேவி செய்வதற்கு ராஜ்மா (சிகப்பு காராமணி) 6 முதல் 7 மணி நேரம் ஊற வைத்த பின்னர் குக்கரில் போட்டு வேக வைத்து அந்த நீரை வடிக்கட்டி எடுத்துக்கொள்ளவும். பிறகு வெங்காயத்தினை பெரிதாக நறுக்கி கொள்ளவும்.

Step 2: இப்போது வெட்டி வைத்துள்ள பெரிய வெங்காயம் பச்சைமிளகாய், இஞ்சி, பூண்டு எல்லாவற்றையும் சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைத்துக்கொள்ளவும்.

Step 3: மிக்ஸியில் அரைத்து வைத்துள்ள விழுதினை தனியாக எடுத்து வைத்து கொள்ளவும்.

Step 4: அடுத்ததாக தக்காளியை மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்.

Step 5: அடுத்து வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி காய்ந்த பிறகு சீரகம், பிரியாணி இலை போட்டு தாளிக்கவும்.

Step 6: இதனுடன் அரைத்து வைத்துள்ள வெங்காய விழுதினை சேர்த்து நன்றாக வதக்கவும்.

Step 7: நன்கு வதங்கிய பிறகு வெண்ணெய், மிளகாய்தூள், மல்லித்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு தேவையான அளவு சேர்த்து வதக்கவும்.

Step 8: நன்றாக கிளறி நிறம் மாறியதும் தக்காளி விழுதை சேர்த்து கிளறி கொதிக்க வைக்க வேண்டும்.

Step 9: கொதித்து நன்றாக கெட்டியான நிலையில் இருக்கும் போது கொத்தமல்லி, வேக வைத்துள்ள ராஜ்மாவினை சேர்த்து கிளறி, 2 நிமிடம் மூடி வைத்து பின் இறக்கவும்.

Step 10: சுவையான ராஜ்மா கிரேவி ரெடி. சப்பாத்தி, பூரி, தோசை போன்றவற்றிற்கு டேஸ்டான சைடிஷ். வீட்டில் செய்து அனைவருக்கும் பகிருங்கள்..!

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> சமையல் குறிப்புகள்