மிகவும் ருசியான சோயா பீன்ஸ் தோசை செய்வது எப்படி..?

soya bean dosai seivathu eppadi

சோயா பீன்ஸ் தோசை

வணக்கம் அன்பான நேயர்களே..! இன்றைய பதிவில் மிகவும் எளிய முறையில் செய்யக்கூடிய ஒரு தோசை ரெசிபி பற்றித் தான் பார்க்கப்போகிறோம். அப்படி என்ன தோசை என்று தானே யோசிக்கிறீர்கள்..! அது வேறு ஒன்றுமில்லை சோயா பீன்ஸ் தோசை தான் பொதுவாக அரிசி உளுந்து சேர்த்து அரைத்த மாவில் தான் தோசை, இட்லி போன்றவற்றை செய்து சாப்பிட்டிருப்பீர்கள்.

ஆனால் இந்த சோயா பீன்ஸ் தோசையை ஒரு முறை செய்து சாப்பிட்டீர்கள் என்றால் மீண்டும் மீண்டும் சாப்பிட வேண்டும் என்று தோன்றும். அப்படிப்பட்ட மிகவும் சுவையான சோயா பீன்ஸ் தோசை செய்வது எப்படி..? என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

சோயா பீன்ஸ் தோசை செய்ய தேவையான பொருட்கள்:

முதலில் சோயா பீன்ஸ் தோசை செய்வதற்கு தேவையான பொருட்களை பார்க்கலாம்.

 • சோயா பீன்ஸ் – 1கப் 
 • வெங்காயம் – 2
 • தக்காளி – 2
 • பச்சைமிளகாய் – 4
 • பூண்டுப்பற்கள் – 4
 • புளி – 1 நெல்லிக்காய் அளவுக்கு 
 • நல்லெண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
 • கடுகு – 1/2 டீஸ்பூன் 
 • சீரகம் – 1/2 டீஸ்பூன் 
 • காய்ந்தமிளகாய் – 1
 • கருவேப்பிலை – தேவையான அளவு 
 • மஞ்சள் தூள் -1/4 டீஸ்பூன்  
 • ரவை – 1/2 கப் 
 • அரிசிமாவு – 1/4 கப் 
 • தண்ணீர் – 2 கப் 
 • உப்பு – தேவையான அளவு

தோசை செய்முறை :

ஸ்டேப் – 1:

முதலில் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு பாத்திரத்தை வைக்க வேண்டும்.  அதில்  2 கப் தண்ணீரை ஊற்றி அதனுடன் நாம் எடுத்துவைத்திருந்த 1கப் சோயா பீன்ஸை சேர்க்கவும்.

அதனுடன் நாம் எடுத்துவைத்திருந்த 2 வெங்காயத்தை இரண்டாக நறுக்கி சேர்த்துக்கொள்ளுங்கள். பின் எடுத்து வைத்திருந்த நறுக்கிய 2 தக்காளி, 4 பச்சைமிளகாய், 4 பூண்டுப்பற்கள் மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து நன்கு வேகவைத்துக் கொள்ளுங்கள்.

ஸ்டேப் – 2:

அவை அனைத்தும் வெந்தவுடன் அதில்  உள்ள தண்ணீரை முழுதாக வடிகட்டவும்.  பிறகு ஒரு மிக்சி ஜாரில் நாம் வேகவைத்த சோயா பீன்ஸை சேர்த்து அதனுடன் 1/2 கப் ரவை, 1/4 கப் அரிசிமாவு, தேவையான அளவு உப்பு மற்றும் சோயாவை வேகவைத்த தண்ணீரில் சிறிதளவு சேர்த்து நன்கு அரைத்து ஒரு பாத்திரத்தில் மாற்றி வைத்துக் கொள்ளுங்கள்.

ஸ்டேப் – 3:

அடுத்து நாம் வேகவைத்து எடுத்து வைத்திருந்த தக்காளி, வெங்காயம், பச்சைமிளகாய், பூண்டுப்பற்களை ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து அதனுடன்  நாம் எடுத்துவைத்திருந்த 1 நெல்லிக்காய் அளவு புளி மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து நன்கு சட்னி போல் அரைத்து கொள்ளுங்கள்.

ஸ்டேப் – 4:

அடுத்து அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு கடாயை வைத்து அதில் 1 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் , 1/2 டீஸ்பூன் கடுகு, 1/2 டீஸ்பூன் சீரகம் மற்றும் தேவையான அளவு கருவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கி விடுங்கள். அவை நன்கு வதக்கிய பிறகு அதனுடன் நாம் அரைத்து வைத்திருந்த சட்னியை சேர்த்து அதனுடன் 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு அடுப்பை நிறுத்திவிடுங்கள்.

ஸ்டேப் – 5:

பின்பு அடுப்பை பற்றவைத்து அதில் ஒரு தோசைக்கல்லை வைத்து அதில் நாம் அரைத்துவைத்திருத்த சோயா பீன்ஸ் தோசை மாவிலிருந்து ஒரு கரண்டியளவு எடுத்து தோசையை ஊற்றுங்கள் அந்த தோசை கொஞ்சம் வெந்தவுடன் அதன் மேலே நாம் அரைத்து வைத்திருந்த சட்னியை சிறிதளவு தேய்த்து விடவும். அது வெந்தவுடன் எடுத்து பரிமாறிவிடலாம்.

நமது சுவையான சோயா பீன்ஸ் தோசை ரெடியாகிவிட்டது வாங்க சுவைக்கலாம். நீங்களும் இந்த சோயா பீன்ஸ் தோசை செய்து சுவைத்து பாருங்கள்..! 

இதையும் பாருங்கள் => நீர் தோசை செய்ய தெரியுமா உங்களுக்கு..?

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>  சமையல் குறிப்புகள்