ஐயங்கார் வீட்டு சுண்ட வத்தல் குழம்பு போல் செய்வது தனி ஸ்டைல் தான்..!

Advertisement

 ஐயர் வீட்டு வத்த குழம்பு | Sundakkai Vatha Kulambu in Tamil

கல்யாண வீட்டு சாப்பாடு சாப்பிட்டால் அங்கு நிறைய உணவுகளை பார்த்திருப்போம்..! அதில் முதலில் சாம்பார், ரசம், அடுத்தகாத வத்தக்குழம்பு, இந்த வத்த குழம்பானது சிலர் ரசத்தை விட வத்த குழம்பு விரும்பி சாப்பிடுவார்கள் அதில் எந்த காய்கறிகளும் இருக்காது. இருந்தாலும் அதில் இருக்கும் சுவை தனி தான் அவ்வளவு அருமையாக இருக்கும். நாம் என்ன சாப்பிட்டாலும் ஐயர் வீட்டு சமையல் போல் இருக்காது. அவர்கள் வீட்டில் ஸ்பெல் என்றால் இந்த வத்த குழம்பு தான். அவர்கள் எப்படி தான் இந்த வத்த குழம்பு வைப்பார்கள் என்று பார்க்கலாம் வாங்க..!

Sundakkai Vatha Kulambu in Tamil:

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl

ஸ்டேப்: 1

vatha kulambu recipe

முதலில் கடாயை எடுத்து அதில் நல்லெண்ணெய் 2 டேபிள் ஸ்பூன் விட்டு அதில் 2 டீஸ்பூன் கடலை பருப்பு சேர்க்கவும். அது பொன்னிறமான மாறிய பின் 2 ஸ்பூன் உளுத்தம்பருப்பு சேர்க்கவும், அது கொஞ்சம் பொன்னிறமாக மாறும் போதே 1/2 டீஸ்பூன் மிளகு சேர்க்கவும். அதனை சேர்த்த பின்பு 1/2 டீஸ்பூன் வெந்தயம் சேர்க்கவும்.

ஸ்டேப்: 2

அதனுடன் 2 டீஸ்பூன் சீரகம் சேர்க்கவும். பிறகு 6 டீஸ்பூன் தனியா போடவும் இது அனைத்தையும் நல்லெண்ணெயில் வறுக்கவும்.

ஸ்டேப்: 3

vatha kulambu recipe

பின்பு அதனுடன் 14 காய்ந்த மிளகாய் சேர்த்து வறுக்கவும். கடைசியாக 2 டீஸ்பூன் பச்சை அரிசி, 1 கொத்து கருவேப்பிலை சேர்த்து வறுக்கவும். வறுத்த பின் அதனை தனியாக எடுத்துவைக்கவும்.

ஸ்டேப்: 4

கடாயை எடுத்து அதில் 3 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் அதில் 30 சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின் 10 பல் பூண்டு போட்டு வதக்கவும்.

ஸ்டேப்: 5

vatha kulambu recipe

3 தக்காளி எடுத்து அதனை அதில் சேரத்து வதக்கவும். அதனுடன் 1 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் இது மூன்றும் நன்றாக வதக்கவும். கெட்டியாக மாறிவிடும் ஆகையால் 5 ml தண்ணீர் ஊற்றவும். பிறகு இதனை ஒரு கிண்ணத்தில் வைத்துக்கொள்ளவும்.

ஸ்டேப்: 6

தனியாக வைத்த பொருட்கள் ஆறியதும் முதலில் வறுத்த பொருட்களையும் சேர்த்து அரைத்து தனியாக வைத்துக்கொள்ளவும்.

செய்து வைத்துக்கொள்ளுங்கள் 👉👉 வத்த குழம்பு பொடி செய்வதற்கு தேவையான அளவுகள் உங்களுக்கு தெரியுமா..?

ஸ்டேப்: 7

இப்போது கடாயை வைத்து அதில் 3 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி அதில் கடுகு 1 டேபிள் ஸ்பூன், 2 மிளகாய் போட்டு பொரிந்தவுடன் அதில் 30 பூண்டு பல்  சேர்க்கவும். பின் 40 சின்ன வெங்காயம் சேர்த்து வறுக்கவும். இரண்டும் வறுத்த பிறகு அதில் 1 கொத்து கருவேப்பிலை போட்டு வறுக்கவும்.

ஸ்டேப்: 8

vatha kulambu recipe

ஓரளவு வறுத்த பின் அதில் 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்க்கவும், மிளகாய் தூள் 1/2 ஸ்பூன் சேர்த்து ஒரு முறை கலந்த பிறகு அதில் 100 கிராம் புளியை கரைத்து அதில் ஊற்றவும்.

பின்பு அதனுடன் 1/2 லிட்டர் தண்ணீர் ஊற்றவும். பின்பு புளி தண்ணீரின் பச்சை வாடை போகும் வரை கொதிக்கவிடவும்.

ஸ்டேப்: 9

பின்பு அதில் 1 டீஸ்பூன் பெருங்காய தூள் போடவும். அத்துடன் தேவையான அளவு உப்பு சேர்க்கவும். பின்பு அதில் 30 கிராம் அளவு வெல்லம் போடவும்.

அது கொதித்த பின்பு அரைத்த வைத்த பொருட்களை அதில் சேர்த்து கலந்துவிடவும். கொஞ்சம் கெட்டியான பிறகு அதில் 1/2 லிட்டர் தண்ணீர் ஊற்றவும். கெட்டியாக மாறிய பின்பு அதில் நீங்கள் எந்த வத்தலை வேண்டுமானாலும் போட்டுக்கொள்ளலாம். இப்போது நாம் சுண்டைக்காய் வாத்தலை வெந்நீரில் போட்டு அதன் பின் அதனை எடுத்து நாம் செய்து வைத்த வைத்த குழம்பில் போட்டுகொள்ளலாம். பிணக்கு நிறைந்து நிமிடம் வேகவைத்து அடுப்பை அணைத்தால் சுவையான சுண்ட வத்தல் குழம்பு தயார்.

இப்படி செய்து சாப்பிடுங்கள் 👉👉 புளி குழம்பு வைப்பது எப்படி?

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> சமையல் குறிப்புகள்
Advertisement