தேங்காய் பால் சாதம் | Coconut Milk Rice in Tamil
தேங்காய் பால் பிடிக்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். ஒரு சிலர் தேங்காய் பாலை கொழுப்பு சத்து நிறைந்த உணவாக நினைத்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் இது தவறான தகவல், தேங்காய் பால் உடலில் உள்ள சூட்டை தணிக்கும், வயிற்று சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளுக்கும் நல்ல தீர்வினை கொடுக்கும். தேங்காய் பாலில் ஈசியாக பல விதமான ரெசிபிஸ்களை செய்து அசத்தலாம். வாங்க அனைவருக்கும் பிடித்த சிம்பிளான தேங்காய் பால் சாதம் எப்படி (thengai paal sadam seivathu eppadi) செய்யலாம் என்று பார்க்கலாம்..!
தேங்காய் பால் சாதம் செய்ய – தேவையான பொருள்:
- அரிசி – 2 கப்
- தேங்காய் – அரை மூடி
- வெங்காயம் – 2
- பச்சை மிளகாய் – 2
- இஞ்சி, பூண்டு பேஸ்ட் – கால் டீ ஸ்பூன்
- பட்டை – 3
- லவங்கம் – 5
- ஏலக்காய் – 3
- பிரியாணி இலை – 2
- கறி மசால் பொடி – கால் டீ ஸ்பூன்
- முந்திரி – 50 கிராம்
- நெய் – 100 கிராம்
- புதினா
- கொத்தமல்லி
- உப்பு – தேவையான அளவு
கோவில் பிரசாத ஸ்டைல் தேங்காய் சாதம் செய்வது எப்படி |
தேங்காய் பால் சாதம் செய்வது எப்படி | thengai paal sadam seivathu eppadi:
ஸ்டேப்: 1 தேங்காய் பால் சாதம் செய்வதற்கு தேங்காயை முதலில் அரைத்து 4 கப் வரும் அளவிற்கு பால் பிழிந்து எடுத்துக்கொள்ளவும்.
ஸ்டேப்: 2 அடுத்து தேங்காய் பால் சாதம் (thengai paal sadam in tamil) செய்வதற்கான அரிசியை நன்றாக கழுவி தனியாக ஒரு பாத்திரத்தில் ஊறவைக்கவும். அரிசியை ஊறவைத்த பிறகு மிளகாய் மற்றும் வெங்காயத்தை நீண்ட வாக்கில் வெட்டிக்கொள்ள வேண்டும்.
ஸ்டேப்: 3 இப்போது தேங்காய் பால் சாதத்திற்கு தேவையான அளவு கொத்தமல்லி, புதினாவை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஸ்டேப்: 4 இப்போது அடுப்பில் குக்கரை வைத்து 100 கிராம் அளவிற்கு நெய் ஊற்றிச் குக்கர் நன்றாக ஹீட் ஆனதும் அவற்றில் பட்டை, லவங்கம், ஏலக்காய், பிரியாணி இலை சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ளவும்.
ஸ்டேப்: 5 அதன் பிறகு பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு பேஸ்ட், வெங்காயம், புதினா சேர்த்துப் பொன்னிறம் ஆகும் வரை நன்றாக வதக்கிவிடவும்.
ஸ்டேப்: 6 வெங்காயம் நன்றாக வதங்கிய பிறகு அதில் தேங்காய்ப் பால், கறி மசால் பொடி, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும்.
ஸ்டேப்: 7 அடுத்து குக்கரில் அரிசியைச் சேர்த்து குக்கரை மூடி 2 விசில் வரும் வரை வேகவைக்கவும். அடுத்து, 10 நிமிடம் மிதமான சூட்டில் வைத்து இறக்கவும். மீதம் உள்ள நெய்யில் முந்திரியை வறுத்து, சாதத்துடன் சேர்த்துக் கிளறவும். இதனுடன் கொத்தமல்லி இலையை சேர்க்கவும். அவ்ளோதாங்க சுவையான தேங்காய் பால் சாதம் ரெடியாகிட்டு.. நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க..
ஏகாதசி குழம்பு செய்வது எப்படி? |
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | சமையல் குறிப்புகள் |