உலர் திராட்சை செய்வது எப்படி.?
உல்ர் திராட்சை உடல் ஆரோக்கியத்திற்கு ரொம்ப நல்லது. இதனை கடையில் காசு கொடுத்து தான் வாங்குவோம். ஆனால் கடையில் வாங்கும் திராட்சைகளில் கெமிக்கல் சேர்த்திருப்பார்கள். இவை நம் உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கினை விளைவிக்கும். அதுமட்டுமில்லாமல் சமையலில் பாயசம், கேசரி போன்ற பல உணவுகளில் சேர்ப்போம். அதனால் இந்த பதிவில் எந்த வித கெமிக்கலும் சேர்க்காமல், ஆரோக்கியமான உலர் திராட்சைகளை குறைந்த விலையில் நம் வீட்டிலேயே எளிய முறையில் எப்படி தயார் செய்வது என்பதைப் பற்றிப் பார்ப்போம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl
உலர் திராட்சை செய்ய தேவையான பொருட்கள்:
- பச்சை திராட்சை- தேவையான அளவு
- உப்பு- 2 தேக்கரண்டி
- இட்லி பானை-1
உலர் திராட்சை செய்முறை:
பச்சை திராட்சையை உதிர்த்து கொள்ளவும். இதனை ஒரு பாத்திரத்தில் சேர்த்து தண்ணீர் மற்றும் உப்பு சிறிதளவு சேர்த்து கழுவி கொள்ளவும். உப்பு சேர்த்து கழுவுவதால் திராட்சையில் உள்ள கெமிக்கல் நீங்கி விடும்.
கழுவிய திராட்சையை இட்லி தட்டில் சேர்க்கவும். இதனை எப்படி இட்லி வேக வைப்போமோ அதே போல் 10 நிமிடத்திற்கு வேக வைக்கவும். 10 நிமிடம் கழித்து பார்த்தால் திராட்சையின் நிறம் மஞ்சள் நிறத்தில் இருக்கும்.
உலர்திராட்சையை ஊறவைத்த தண்ணீரை குடிப்பதால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா..! |
வெயிலில் ஒரு துணி விரித்து வேக வைத்த திராட்சையை சேர்த்து காய வைக்கவும். முதல் நாள் காய்ந்த திராட்சை பழங்களை, 2-வது நாள் திருப்பி விட வேண்டும். அப்போது தான் திராட்சை பழம் நன்றாக காயும். குறைந்த பட்சம் 5 நாட்கள் வெயிலில் காய வைத்து பின்னர் எடுத்தால் உலர் திராட்சை தயாராகி விடும்.
இதனை ஒரு கண்ணாடி பாட்டிலில் அல்லது காற்று உள்ளே புகாத ஏர் டைட் கவரில் ஸ்டோர் செய்து வைத்து கொண்டால் ஒரு வருடம் வரைக்கும் கெட்டு போகாமல் இருக்கும். எந்த விதமான கெமிக்கலும் கலக்காத உலர் திராட்சை, அதுவும் குறைந்த விலையில் ஆரோக்கியமானதாக கிடைத்து விட்டது.
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | samayal kurippugal in tamil |