கல்யாண வீட்டு வத்த குழம்பு செய்வது எப்படி? | Vatha Kulambu in Tamil

Advertisement

வத்த குழம்பு செய்வது எப்படி? | Vatha Kulambu Seivathu Eppadi

Vatha Kulambu in Tamil: நமது உணவு முறைகளில் பாரம்பரியமாக இருந்து வருவது குழம்பு. ஒரு சிலர்க்கு சைவ உணவில் செய்யப்படும் குழம்பு பிடிக்கும், ஒரு சிலருக்கு அசைவத்தில் செய்யும் குழம்பு பிடிக்கும். ஆனால் எல்லோருக்கும் பிடித்த குழம்பு என்றால் அது வத்தக்குழம்பு தான், அதிலும் விஷேச நாட்களில் செய்யப்படும் வத்தக்குழம்பு சுவையில் அல்டிமேட்டாக இருக்கும். சரி வாங்க சூப்பரான சுவையில் வத்தக்குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

வத்தல் குழம்பு பொடி செய்ய தேவையான பொருட்கள்:

  1. தனியா (மல்லி) – 2 கைப்பிடி அளவு
  2. சிவப்பு மிளகாய் – 6
  3. வெந்தயம் – 1 டேபிள் ஸ்பூன்
  4. சீரகம் – 1 டேபிள் ஸ்பூன்
  5. மிளகு – 1 டேபிள் ஸ்பூன்
  6. துவரம் பருப்பு – 2 டேபிள் ஸ்பூன்
  7. பெருங்காயம் – 1 சிட்டிகை

செய்முறை:

  • வத்த குழம்பு செய்வது எப்படி: கடாயில் மல்லி 2 கைப்பிடி அளவு, சிவப்பு மிளகாய் 6, மிளகு 2 டேபிள் ஸ்பூன், வெந்தயம் 1 டேபிள் ஸ்பூன், சீரகம் 1 டேபிள் ஸ்பூன், துவரம் பருப்பு 2 டேபிள் ஸ்பூன், பெருங்காயம் 1 சிட்டிகை சேர்த்து வறுத்து கொள்ளவும் (எண்ணெயில்லாமல் வறுக்கவும்).
  • வறுத்த பின்பு இதனை மிக்சியில் போட்டு நன்றாக பவுடர் போல அரைத்து கொள்ளவும்.

தாளிப்பதற்கு:

  1. கடுகு – 1 டேபிள் ஸ்பூன்
  2. வெந்தயம் – 1 டேபிள் ஸ்பூன்
  3. சிவப்பு மிளகாய் – 5
  4. கருவேப்பிலை – 1 கொத்து

குழம்பு செய்வதற்கு தேவையான பொருட்கள்:

  1. புளி – தேவையான அளவு
  2. மஞ்சள் தூள் – அரை டேபிள் ஸ்பூன்
  3. மிளகாய் தூள் – 2 டேபிள் ஸ்பூன்
  4. வத்தல் – தேவையான அளவு (சுண்டைக்காய் வத்தல், கத்தரிக்காய் வத்தல்)
  5. பூண்டு – 1 கையளவு (உரித்தது)
  6. வெங்காயம் – சிறிதளவு
  7. உப்பு – தேவையான அளவு
  8. கருவேப்பிலை – 1 கொத்து

செய்முறை:

ஸ்டேப்: 1

Vatha Kulambu Recipe in Tamil: ஒரு கடாயில் ஒன்றரை குழி கரண்டி நல்லெண்ணெய் சேர்த்து சூடாக்கவும். எண்ணெய் சூடான பிறகு கடுகு 1 டேபிள் ஸ்பூன், சிவப்பு மிளகாய் 2, வெந்தயம் 1 டேபிள் ஸ்பூன், கருவேப்பிலை 1 கொத்து, வத்தல் தேவையான அளவு சேர்த்து வதக்கவும்.

ஸ்டேப்: 2

Vatha Kulambu in Tamil: வத்தல் நன்றாக கருத்து வரும் வரை வதக்கவும். பின் அதில் வெங்காயம் சிறிதளவு, பூண்டு 1 கையளவு (தோல் நீக்கியது) சேர்த்து வதக்கவும். வெங்காயம், பூண்டு பொன்னிறமான பிறகு புளிக்கரைசலை தேவையான அளவு ஊற்றவும்.

ஸ்டேப்: 3

Vatha Kulambu Recipe in Tamil: பின் அதில் மஞ்சள் தூள் 1 டேபிள் ஸ்பூன், மிளகாய் தூள் 2 டேபிள் ஸ்பூன், உப்பு தேவையான அளவு சேர்த்து மிக்ஸ் செய்து, 1 கொதி வரும் வரை வேக வைக்கவும்.

ஸ்டேப்: 4

வத்த குழம்பு செய்வது எப்படி: கொதித்த பிறகு அரைத்து வைத்திருக்கும் பொடியை 4 டேபிள் ஸ்பூன் சேர்க்கவும். பின் அதில் 1 சிட்டிகை பெருங்காய தூள், நல்லெண்ணெய் 1 டேபிள் ஸ்பூன் சேர்க்கவும்.

இப்பொழுது அடுப்பை அணைத்து விடலாம். சூடான சுவையான, அருமையான வத்தல் குழம்பு தயார்.

கிராமத்து நெத்திலி கருவாட்டு குழம்பு செய்வது எப்படி

 

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>  சமையல் குறிப்புகள்
Advertisement