ஒரு முறை வேர்க்கடலை சட்னி இப்படி ட்ரை செய்து பாருங்கள்..!

Advertisement

வேர்க்கடலை சட்னி செய்வது எப்படி? – Verkadalai Chutney Seivathu Eppadi?

ஹாய் பிரண்ட்ஸ் வணக்கம்.. சட்னி வகைகளில் நிறைய வகைகள் உள்ளன.. ஆனால் அவை அனைத்துமே அனைவர்க்கும் தெரியும் என்று சொல்லிவிட முடியாது. பெரும்பாலான வீட்டில் தேங்காய் சட்னி, தக்காளி சட்னி இவை இரண்டு மட்டுமே தான் தெரியும். மற்ற சட்னி வகைகளை ட்ரை செய்துகூட பார்த்திருக்க மாட்டார்கள். அப்படி பட்டவர்கள் நீங்கள் என்றால் கண்டிப்பாக இந்த வேர் கடலை சட்னியை ஒரு முறை ட்ரை செய்து பாருங்கள் மிகவும் அருமையாக இருக்கும். சரி வாங்க வேர்க்கடலை சட்னியை எப்படி பக்குவமான முறையில் அரைப்பது என்பதை பற்றி இப்பொழுது தெளிவாக பார்க்கலாம்.

Peanut Chutney With Coconut in Tamil

தேவையான பொருட்கள்:

  • வறுத்த வேர்க்கடலை – 1/4 கப்
  • புளி – ஒரு சிறிய நெல்லிக்காய் அளவு
  • வரமிளகாய் – 5 (காரத்திற்கு தகுந்தது போல்)
  • கருவேப்பிலை – ஒரு கொத்து
  • தேங்காய் துருவல் – 1/4 கப்
  • உப்பு – தேவையான அளவு
  • எண்ணெய் – ஒரு ஸ்பூன்
  • கடுகு – 1/4 ஸ்பூன்

வேர்க்கடலை சட்னி செய்முறை – Peanut Chutney Recipe in Tamil:

அடுப்பில் ஒரு அகலமான கடாயை வைக்கவும். அதில் 1/4 கப் வேர்க்கடலையை தோல் நீக்கிவிட்டு லேசாக வறுத்துக்கொள்ளுங்கள். பின் அதனை ஒரு பிளேட்டில் மாற்றி கொள்ளுங்கள்.

பின் அதே கடாயில் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றவும் எண்ணெய் சூடேறியதும் புளி, வரமிளகாய், கருவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து வதக்க வேண்டும்.

வதக்கிய பின் இத்தனையும் வறுத்து வைத்துள்ள வேர்கடலையுடன் சேர்த்து சிறிது நேரம் ஆறவிடுங்கள்.

பின் வதக்கி வைத்துள்ள பொருட்களுடன் 1/4 கப் துருவிய தேங்காய், தேவையான அளவு உப்பு செய்து மிக்சியில் நன்றாக மைபோல் அரைத்து எடுத்துக்கொள்ளுங்கள்.

பின் கருவேப்பிலை கடுகை தாளித்து சட்னியில் சேர்த்து கிளறினால் போதும் அருமையான வேர்க்கடலை சட்னி தயார்.

அல்லது இந்த முறையை கூட ட்ரை செய்யலாம் அதாவது வரமிளகாய், கருவேப்பிலை, புளி ஆகியவற்றை வதக்கும் போது சிறிதளவு பூண்டினை சேர்த்து வதக்க வேண்டும். இதனை வறுத்த வேர் கடலையுடன் சேர்த்து மிக்சியில் அரைத்தால் போதும். தேங்காய் சேர்க்க வேண்டும். இந்த முறையும் மிக சுவையாக இருக்கும்.

 

தொடர்புடைய பதிவுகள் 
இட்லி தோசைக்கு ஏற்ற சட்னி வகைகள் தமிழில்..!
தக்காளி இல்லாமல் சட்னி செய்வது எப்படி?
கறிவேப்பிலை சட்னி இப்படி செய்து பாருங்க..!
வித்தியாசமான மிளகு கார சட்னி செய்யலாம் வாங்க..!

 

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Samayal kurippu tamil
Advertisement