Anadheenam Land in Tamil..!
வணக்கம் அன்பான நேயர்களே… இன்றைய பதிவில் அனாதீனம் நிலம் என்றால் என்ன என்பதை பற்றி தெரிந்து கொள்ள போகிறோம். நம் அனைவருக்குமே சொந்தமாக நிலம் இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். நிலம் என்பது நிரந்தரமாக நீரில் மூழ்கியிராத புவியின் திண்ம மேற்பரப்பு ஆகும். நிலம் இருக்கும் தன்மையை பொறுத்து அதற்கு பல்வேறு பெயர்கள் இருக்கின்றன. அந்த வகையில் இன்று நாம் அனாதீனம் நிலம் பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம் வாங்க.
இதையும் கிளிக் செய்து பாருங்கள் ⇒ DTCP என்றால் என்ன..?
அனாதீனம் நிலம் என்றால் என்ன..?
அனாதீனம் நிலம் என்பது அரசாங்கத்தின் கீழ் கையகப்படுத்தி இருக்கும் உரிமையற்ற நிலம் ஆகும். அரசாங்கம் கைப்பற்றிய நிலங்களை அனாதீனம் நிலம் என்று கூறலாம்.
அதாவது, அந்த கால கட்டத்தில் உள்ள மக்கள் 30 ஏக்கருக்கு மேல் நிலங்கள் வைத்திருந்தனர். ஆனால் நில உச்ச வரம்பு சட்டத்தின் அடிப்படையில் 30 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருக்க கூடாது.
30 ஏக்கருக்கு மேல் யாராவது நிலம் வைத்திருந்தால் அது அரசாங்கத்திற்கு சேரும் என்று கூறினர். அப்படி அரசாங்கத்திற்கு கொடுக்கப்பட்ட நிலங்களை அனாதீனம் நிலம் என்று கூறுகிறோம்.
இதுபோல அரசாங்கம் கைப்பற்றிய நிலங்களுக்கு பட்டா கிடையாது. அதுமட்டுமில்லாமல் இந்த அனாதீனம் நிலங்கள் CMDA மற்றும் DTCP அங்கீகாரம் இல்லாத மனைகளாக இருக்கும். இதுபோன்ற நிலங்களை தனி நபர் உரிமை கொண்டாட முடியாது.
நீங்கள் அரசாங்க நிலம் என்று தெரியாமல் அதை வாங்கிவிட்டால் அந்த நிலத்திற்கு பட்டா கிடைக்குமா என்றால் அது கிடைக்காது. அனாதீனம் நிலம் அரசாங்கத்தின் சொத்து என்பதால் அதற்கு பட்டா கிடையாது.
அதேபோல உங்களிடம் இருக்கும் நிலம் அனாதீனம் நிலமாக இருந்தால் அதை நீங்கள் விற்க முடியாது. அதேபோல் நீங்கள் வைத்திருக்கும் நிலத்திற்கு பழைய பட்டா இருந்தாலும் அதை நீங்கள் விற்க கூடாது. நீங்கள் நிலம் வாங்கும் போது அந்த நிலத்தை பற்றி முழுவதுமாக விசாரித்து வாங்க வேண்டும்.
மேலும் அரசாங்கம் இந்த நிலங்களை கைப்பற்றியதற்கு காரணம் நிலமற்ற ஏழைகளுக்கும் மற்றும் பொது பணிக்கும் கொடுக்கும் நோக்கத்தில் தான் இந்த நில உச்ச வரம்பு சட்டம் கொண்டு வரப்பட்டது.
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |