எந்தெந்த வங்கியில் எவ்வளவு நகை கடன் வட்டி விகிதம் தெரியுமா?

Bank Gold Loan Interest Rate 2022

கூட்டுறவு வங்கி நகை கடன் வட்டி விகிதம் 2022 – Bank Gold Loan Interest Rate 2022

நமது சொந்த தேவைக்காக அல்லது எதிர்பாராத அவசர தேவைக்காக நமக்கு பணம் தேவைப்படும். அந்த சமையத்தில் நம்மிடம் ஏதாவது நகை இருந்தால் அந்த நகையி எடுத்துக்கொண்டு வங்கிகளுக்கு செல்வோம். அங்கு நகையை அடகு வைத்து நகை கடன் வாங்குவோம். அவ்வாறு அடகு வைக்கும்பொழுது அந்த நகைகளுக்கு வட்டி வட்டி விகிதம் நிர்ணகிக்கப்படும். நாம் அந்த கடனை அடைக்கும் வரை அவர்களிடம் வட்டி கட்ட வேண்டும். ஆக இந்த நகைகளுக்கு வட்டி விகிதம் எந்தெந்த வங்கியில் எவ்வளவு வசூல் செய்கின்றன என்று அனைவருக்குமே தெரிந்திருக்க அதிக வாய்ப்பு இல்லை. ஆகவே உங்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் இன்றைய கூட்டுறவு வங்கி மற்றும் மற்ற வங்கிகளில் எவ்வளவு நகை கடன் வட்டி விகிதம் என்பதை பற்றி பதிவு செய்துள்ளோம் அவற்றை படித்து பெயன்பெறுங்கள்.  மேலும் முக்கிய அறிவுப்பு நகை கடன் வட்டி விகிதம் வருடத்திற்க்கு வருடம் ஒவ்வொரு வங்கியிலும் வட்டி விகிதம் மாறுபடும்.  இந்த 2022-ஆம் ஆண்டிற்கான வங்கி நகை கடன் வட்டியை பற்றி பார்க்கலாம் வாங்க.

எந்தெந்த வங்கியில் எவ்வளவு நகை கடன் வட்டி விகிதம் 2022 – Bank Gold Loan Interest Rate 2022

வங்கி  ஒரு கிராமிற்கு நகை கடன் வட்டி விகிதம் 2022
கூட்டுறவு வங்கி நகை கடன் வட்டி விகிதம் 2022
7.00% to 12. 60
பஞ்சாப் & சிந்து வங்கி 7.00% to 7.50%
பேங்க் ஆஃப் இந்தியா 5.88%
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா 7.50%
கனரா வங்கி 7.35%
கர்நாடக வங்கி 8.00% to 17.00%
இந்தியன் வங்கி 7.35%
UCO பேங்க்  8.50%
ஃபெடரல் பேங்க்  8.50% ஆண்டிக்குள்  
பஞ்சாப் நேஷனல் பேங்க்  7.00%
யூனியன் பேங்க்  7.25% to 8.25%
ஜே & கே பேங்க்  10.00%
சென்ட்ரல் பேங்க்  9.05%
கோடக் மகிந்தரா வங்கி 8.00% to 17.00%
HDFC பேங்க்  7.75% to 15.75%
பேங்க் ஆஃப் பரோடா 7.75%
தனலட்சுமி வங்கி 8.50%
இந்துசன் வங்கி 9.00% to 17.00%
சிட்டி யூனியன் வங்கி 9.50%
கரூர் வைசியா வங்கி 9.50%
ICICI பேங்க் 10.00% to 19.73%
ஆக்ஸிஸ் பேங்க் 14.00%
முத்து பைனான்ஸ் 22% p.a. with 4% rebate if 100% interest is paid monthly

 

நகையின் மதிப்பில் 75% கடன்:

ரிசர்வ் வங்கி வகுத்துள்ள நெறிமுறைகளின்படி, தங்க நகையின் மதிப்பில் 75% வரை கடனாகக் கொடுக்கலாம். இந்தக் கடன், நகை மதிப்பு சதவிகிதத்துக்கு ஏற்றபடி வட்டி விகிதமும் தீர்மானிக்கப்படும்.

நகைகளுக்கான கடன் வட்டி கணக்கிடுவது எப்படி? என்பதை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் நகை கடன் வட்டி கணக்கிடுவது எப்படி?

நமைகளுக்கான கடன் அளவு எவ்வளவு?

ஒருவர் அதிகபட்சமாக 20 லட்சம் ரூபாய் வரை நகைக் கடன் பெற முடியும். தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துக்கு ஏற்ப கடன் தொகையும் மாறுபடும். தற்போது கிராமுக்கு சுமார் 3000 முதல் 3300 ரூபாய் வரை கடன் வழங்கப்படுகிறது.

வட்டியை செலுத்தாவிட்டால் என்ன ஆகும்?

ஒரு வருட காலம் வரை தங்களது நகை வங்கியில் இருக்கும். நகையை திருப்ப முடியாதவர்கள் தங்களது நகைக்கு வட்டி செலுத்தி Renewal செய்து கொள்ளலாம். வட்டியை செலுத்தவில்லை என்றால் கூடுதல் வட்டி செலுத்த வேண்டி வரும். அத்தனையும் செய்யவில்லை என்றால் உங்கள் நகை ஏலத்திற்கு விடப்படும்.

கூட்டுறவு வங்கிகளில் நகையை அடகு வைத்து கடன்கள் பெற கூட்டுறவு வங்கி கணக்கு இருந்தால் மட்டும் போதுமானது வேறு எந்த கூடுதல் ஆவணங்களும் தேவைபடுவது கிடையாது.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் நகைக்கடையில் தங்கத்தின் விலையை கணக்கிடுவது எப்படி?

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Today Useful Information In Tamil