Kainilai Nool in Tamil..!
வணக்கம் பொதுநலம்.காம் பதிவின் இனிமையான நேயர்களே… இன்றைய பதிவில் கைந்நிலை நூல்கள் பற்றி தெரிந்து கொள்ள போகிறோம். நம் தமிழ் மொழியில் உள்ள நூல்களைப் பற்றி தினமும் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொண்டு வருகிறீர்கள். அந்த வகையில் இன்று நாம் தெரிந்து கொள்ளும் நூல் கைந்நிலை. இந்நூல் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஓன்று. இந்த கைந்நிலை நூல் பற்றிய தகவல்களை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம் வாங்க.
இதையும் கிளிக் செய்து பாருங்கள் ⇒ பாரதியாரின் பாஞ்சாலி சபதம் நூல்
கைந்நிலை நூல் குறிப்பு:
கைந்நிலை நூல் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும். இந்நூல் அகப்பொருள் சார்ந்த நூல் என்று கூறப்படுகிறது. இந்நூல் ஐந்திணை ஒழுக்கம் பற்றி கூறும் நூல் ஆகும். இந்நூல் ஒவ்வொரு திணைக்கும் 12 பாடல்களாக 60 பாடல்களை கொண்டுள்ளது. இந்நூல் சங்கம் மருவிய காலத் தமிழ் நூல் தொகுதியில் அடங்கிய ஒரு நூல் என்று கூறப்படுகிறது.
இந்நூலில் குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என்ற வரிசை முறையில் ஐந்திணைகளும் அமைந்துள்ளன. இந்நூலில் உள்ள செய்யுள்களில் 18 பாடல்கள் மறைந்துள்ளன. இந்நூலில் உள்ள 3 பாடல்கள் ஒரே சொல் அளவில் பொருள் தருகின்றன. இந்நூல் அறம், பொருள், இன்பம், வீடு எனும் நால்வகை பொருளால் 60 வெண்பா பாவகையை சார்ந்த பாடல்களை கொண்ட நூல் ஆகும். அதனால் இந்நூலுக்கு ஐந்திணை அறுபது என்ற பெயரும் உண்டு.
இந்த கைந்நிலை நூலை இயற்றியவர் புல்லங்காடனார் என்னும் ஒரு தமிழ் புலவர் ஆவார். இந்நூலுக்கு சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் உரை எழுதி உள்ளது. இந்நூலில் “கை” என்பது ஒழுக்கம் என்று பொருள் தருகிறது. “நிலை” என்பது தன்மை என்ற பொருளை தருகிறது.
இதையும் தெரிந்து கொள்ளுங்கள் ⇒ திருமுருகாற்றுப்படை நூல் குறிப்பு
எனவே, இந்நூல் ஐந்திணைகளின் ஒழுக்க நிலையை பற்றி கூறுவதால் இந்நூல் கைந்நிலை நூல் என்று அழைக்கப்படுகிறது. இந்நூலில் ஆசை, பாசம், கேசம், இரசம், இடபம், உத்திரம் போன்ற வடசொற்கள் கலந்து காணப்படுகின்றன. இந்நூலில் நெய்தல் திணைப் பகுதியில் உள்ள பாடல்கள் மட்டும் தான் எந்த ஒரு சிதைவும் இல்லாமல் அமைந்துள்ளன.
இந்நூலை முதன் முதலில் பதிப்பித்தவர் திரு. அனந்தராம ஐயர் எனும் ஆசிரியர் ஆவார்.
கைந்நிலை நூல் ஆசிரியர் குறிப்பு:
கைந்நிலை நூலைச் இயற்றியவர் மாரோகத்து முள்ளிநாட்டு நல்லூர்க் காவிதியார் மகனார் புல்லங்காடனார் எனும் தமிழ் புலவர் ஆவார். இவர் தந்தையார் பெயர் காவிதியார். இவரின் தந்தை அரசரால் காவிதி என்னும் சிறப்பு பெயர் பட்டத்தை பெற்றதால் காவிதியார் என்று அழைக்கப்படுகிறார். மாறோக்கம் என்பது கொற்கையைச் சூழ்ந்துள்ள பகுதியைக் குறிக்கிறது. எனவே, இவர் கொற்கையை அடுத்த முள்ளி நாட்டு நல்லூரைச் சேர்த்தவர் என்று வரலாறு கூறுகிறது.
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |