சிறுகதை ஆசிரியர்கள் பெயர்கள் | List of Sirukathai Authors in Tamil | தமிழ் சிறுகதைகள் மற்றும் ஆசிரியர்கள்
தமிழ் சிறுகதைகள் மற்றும் ஆசிரியர்கள்: கதை படிப்பது என்றாலே அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். ஒரு சிலர் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளை வைத்தே கதை எழுதுவார்கள். சிறுகதை என்பது சுருக்கமாக, கதைகூறும் புனைவு வகை உரைநடை இலக்கியமாகும். பெரும்பாலும் ஒரு மையக் கருவினை அல்லது நிகழ்ச்சியின் அனுபவத்தை விவரிக்கும் இலக்கிய வகையாகும். சிறுகதை பொதுவாக குறும் புதினம் மற்றும் நாவலை விடச்சுருக்கமாக இருக்கும். அந்த வகையில் இந்த பதிவில் சிறுகதை எழுதிய ஆசிரியர்களையும் அவர்களை பற்றி ஓரிரு வரிகளை தெரிந்துகொள்ளுவோம்..!
பத்துப்பாட்டு நூல்கள் மற்றும் ஆசிரியர்கள் |
சிறுகதை ஆசிரியர்கள் பெயர்கள் | Sirukathai Aasiriyar:
சிறுகதை ஆசிரியர் வண்ணநிலவன்:
sirukathai aasiriyar: வண்ணநிலவனின் இயற்பெயர் உ. ராமச்சந்திரன். இவர் உலக புகழ்ப்பெற்ற கடல்புரத்தில், கம்பா நதி, ரெயினீஷ் அய்யர் தெரு போன்ற சிறப்புமிக்க நாவல்களை எழுதியுள்ளார். வண்ணநிலவனின் சிறுகதைகளை நற்றிணை பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இவருடைய சிறந்த சிறுகதைகள் எஸ்தர், கரையும் உருவங்கள், பலாப்பழம், மிருகம் ,உள்ளும் புறமும்.
சிறுகதை ஆசிரியர் அசோகமித்திரன்:
தமிழ் சிறந்த எழுத்தார்களுள் ஒருவர் தான் அசோகமித்திரன். இவரின் இயற்பெயர் தியாகராஜன். அசோகமித்திரன் எழுதிய கதைகள் அனைத்துமே நகைசுவை சுவை கொண்டது. அப்பாவின் சினேகிதர் என்ற சிறுகதைத் தொகுப்பிற்காக சாகித்ய அகாடமி விருது வாங்கியவர். இவரின் சிறந்த சிறுகதைகள் புலிக்கலைஞன்,பிரயாணம், காலமும் ஐந்து குழந்தைகளும், குழந்தைகள், மாறுதல், பார்வை.
சிறுகதை ஆசிரியர் கிருஷ்ணன் நம்பி:
கிருஷ்ண நம்பியின் இயற்பெயர் அழகிய நம்பி. இவருடைய முதல் சிறுகதையானது 1951-ம் ஆண்டு வெளியானது. கண்ணன் சிறுவர் இதழில் சசிதேவன் என்ற பெயரில் குழந்தைப் பாடல்களை எழுதியுள்ளார். இவரின் புகழ்பெற்ற சிறுகதை “மருமகள் வாக்கு”. இவரின் சிறந்த சிறுகதைகள் , மருமகள் வாக்கு, சட்டை, எக்ஸெண்டிரிக், நீலக்கடல், தங்க ஒரு.., காணாமல் போன அந்தோனி.
சிறுகதை ஆசிரியர் சுஜாதா:
தன் மனைவி பெயரான சுஜாதா என்ற பெயரில் பல சிறுகதைகளை எழுதியுள்ளார். இவருடைய இயற்பெயர் ரங்கராஜன். இவர் எழுதிய கற்றதும் பெற்றதும் தொடர் ஆனந்த விகடனில் மிகவும் பிரபலமானது. நாவல், குறுநாவல், சிறுகதைகள், விஞ்ஞானச் சிறுகதைகள், நாடகம், செவ்விலக்கியங்களின் அறிமுகம் ஆகிய துறைகளில் முத்திரை பதித்தவர். இவரது “என் இனிய இயந்திரா, மீண்டும் ஜீனோ ” மிக சிறப்புமிக்க நாவல்கள். இவரின் சிறந்த சிறுகதைகள் நகரம், ஜன்னல், நிஜத்தை தேடி, திமலா.
சிறுகதை ஆசிரியர் வண்ணதாசன்:
தமிழ் சிறுகதைகள் மற்றும் ஆசிரியர்கள்: வண்ணதாசனின் (வண்ணதாசன் ஆசிரியர் குறிப்பு) இயற்பெயர் சி. கல்யாண சுந்தரம். வண்ணதாசன் என்ற புனைபெயரில் சிறுகதை மற்றும் கல்யாண்ஜி என்ற புனை பெயரில் கவிதைகளும் பல எழுதியுள்ளார். உலகில் சிறந்த எழுத்தாளரான வண்ணதாசன் தீபம் இதழில் 1962 ல் எழுதத் தொடங்கி இன்று வரை தொடந்து சிறுகதைகள் எழுதிவருகிறார். இதுவரை 12 சிறுகதை இவருடைய பெயரில் வெளிவந்துள்ளன.
சிறுகதை ஆசிரியர் கு ப ராஜகோபாலன்:
இவர் எழுதிய சிறுகதையின் சிறப்பினால் கு ப ராஜகோபாலன் அனைவராலும் சிறுகதை ஆசான் என்று அழைக்கப்பட்டார். இவருடைய எழுத்துக்கள் அனைத்துமே ஆண், பெண் உறவுகளை அடிப்படையாக கொண்டே அமைந்துள்ளது. இவரின் பதிப்புகள் விடியுமா?, ஆற்றாமை, கனகாம்பரம், திரை, நூருன்னிசா, சிறிது வெளிச்சம், புனர் ஜென்மம் போன்ற பல சிறுகதைகள் ஆகும்.
சிறுகதை ஆசிரியர் புதுமைப்பித்தன்:
புதுமைப்பித்தனின் இயற்பெயர் சொ.விருத்தாசலம். இவர் 1933-ம் ஆண்டு முதல் ஊழியன், சுதந்திரச் சங்கு, தினமணி, தினசரி ஆகிய பத்திரிகை துறையில் பணியாற்றி வந்துள்ளார். இவர் 15 ஆண்டுகள் மட்டுமே எழுத்துலகில் இருந்து சிறப்பான தமிழ் சிறுகதைகளை பல படைத்துள்ளார். புதுமைப்பித்தன் எழுதிய துன்பக்கேணி, நாசக்காரக் கும்பல், மனித இயந்திரம், பொன்னகரம், கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் போன்ற சிறுகதை இவரின் அற்புத படைப்புகள்.
பதினெண் மேற்கணக்கு நூல்கள் மற்றும் ஆசிரியர்கள் |
பெண் சிறுகதை ஆசிரியர்கள்:
சிறந்த பெண் படைப்பாளிகளுள் ஒருவர் தான் அம்பை என்கிற சி.எஸ்.லட்சுமி. பெண் நிலைகளை வெளிப்படுத்தும் தமிழ் சிறுகதைகளின் முன்னோடியாக விளங்கியவர். அம்பையின் முழுச் சிறுகதைத் தொகுப்பை காலச்சுவடு வெளியிட்டுள்ளது. அம்பை என்கிற சி.எஸ்.லட்சுமியின் அற்புதமான படைப்புகள் அம்மா ஒரு கொலை செய்தாள், வீட்டின் மூலையில் ஒரு சமையலறை, காட்டில் ஒரு மான், சிறகுகள் முறியும், புனர், கருப்பு குதிரை சதுக்கம், மிருத்யு போன்றவை இவருடைய சிறுகதை படைப்புகள்.
சிறுகதை ஆசிரியர் மௌனி:
மௌனி என்பவரின் இயற்பெயர் மணி. மௌனி என்ற புனைப்பெயரில் தான் இவர் சிறுகதைகளை எழுதியுள்ளார். உலகில் குறைந்த அளவே சிறுகதை எழுதி பெரும்புகழை அடைந்தவர். மொத்தமாக இவருடைய சிறுகதை பட்டியல் 24 மட்டுமே. இவரின் சிறந்த படைப்பான சிறுகதைகள் அழியாச்சுடர், பிரபஞ்ச கானம், சாவில் பிறந்த சிருஷ்டி, ஏன்.
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |