ஜன்னல் தமிழ் சொல் | Jannal Tamil Sol

ஜன்னல் தமிழ் சொல் | Jannal Tamil Sol Enna

ஒரு அந்நிய சொல் தமிழில் நிலை பெறுவது இயல்பான ஒரு விஷயம் தான். ஆனால் நாம் சொல்லும் சொற்கள் தமிழா அல்லது வேற்று மொழி சொல்லா என்று யோசிக்கும் சொற்களையும் நாம் நமது தமிழ் மொழியில் பேசி வருகின்றோம். பெரும்பாலும் நமது தமிழ் மொழியில் வடமொழி சொற்களும் கலந்து காணப்படும். அந்த வகையில் நாம் சன்னல் என்று சொல்லும் சொல் தமிழ் மொழியா அல்லது வேறு மொழியா என்று தங்களுக்கு தெரியுமா? அப்படி தெரியாது என்றால் இந்த பதிவை படித்து தெரிந்து கொள்ளுங்கள்..

ஜன்னலுக்கு தமிழ் சொல்:

நாம் வீடு கட்டுவதற்கோ, கடை அமைப்பதற்கோ, ஏதோ ஒரு பயன்பாட்டிற்கு கட்டிடக்கலை வேலையை நாம் மேற்கொள்ளும் போது ஜன்னலை முக்கியமாக பயன்படுத்துவோம். இந்த ஜன்னல் என்ற பெயர் போர்த்துக்கீசியச் சொல் என்று சொன்னால் தங்களால் நம்பமுடிகிறதா..? ஆம் ஜன்னல் என்பது போர்த்துக்கீசியச் சொல் ஆகும். ஜன்னல் என்பதை நாம் தமிழ்ப்படுத்தி சன்னல் என்று கூறுகிறோம். சில இடங்களில் தமிழ்ப்படுத்தப்பட்ட சொல்லான “சாளரம்” என்று ஜன்னல் அழைக்கப்படுகிறது. சாளரம் என்பதும் வடமொழி வேரையுடைய சொல்.

அப்படினா.. ஜன்னலுக்கு தமிழில் பெயர் இல்லை என்று நினைக்காதீர்கள். ‘காலதர்’ என்பது தான் ஜன்னலுக்கான தூய தமிழ்ச்சொல் என்று சொல்கின்றன.

சங்க இலக்கியத்தில் ஜன்னலுக்கு காலதர் என்று குறிப்பிடப்படுகிறது. கால் என்றால் காற்று. அதர் என்றால் வழி. காற்று நுழையும் வழி என்னும் பொருளையுடையது ‘காலதர்.’

சரி நண்பர்களே ஜன்னலுக்கான சரியான தமிழ் சொல்லை இந்த பதிவு மூலம் படித்து தெரிந்துகொண்டதற்கு நன்றி..

மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –>பொதுநலம்.com