திணை வகைகள் இலக்கணம் | Thinai Vagaigal in Tamil Ilakkanam
பொதுநலம்.காம் வாசகர்களுக்கு அன்பான வணக்கம்.. இன்றைய பதிவில் இலக்கணம் சார்ந்த விஷயங்களை படித்தறியலாம். நாம் பேசும் வாக்கியங்களை பிழை இல்லாமல் எழுதுவதற்கு இலக்கணம் உதவுகிறது. அந்த வகையில் தமிழ் இலக்கணம் குறிப்பில் பெயர்ச்சொல்லில் வரக்கூடிய திணை பற்றிய சில விளக்கங்களை இங்கு பார்ப்போம். அதாவது திணை என்றால் என்ன? தினை எத்தனை வகைப்படும் போன்ற தகவல்களை படித்தறியலாம் வாங்க.
திணை என்றால் என்ன?
திணை என்பது வகுப்பு அல்லது பிரிவு எனப் பொருள்படும். இத்தகைய தினை இரண்டு வகைகளாக பிரிக்கப்படுகிறது. அவை உயர்திணை, அஃறிணை ஆகும். பொதுவாக ஆறறிவு கொண்ட மனிதர்களை உயர்திணை என்றும், ஏனைய உயிர் உள்ள, உயிர் அற்ற பொருட்கள் அனைத்தையும் அஃறிணை என்றும் தமிழ் இலக்கணத்தில் வகைப்படுத்தப்படுகிறது.
உயர்திணை:
அரசன், அம்மா, அப்பா, ஆசிரியர், தேவர்கள், மாணவன் பகுத்தறிவு கொண்டவர்கள் உயர்திணை என்றழைக்கப்படுகின்றன.
அஃறிணை:
மனிதர்கள் அல்லாத உயிர் உள்ள, உயிர் இல்லாத மரம், புத்தகம், ஆடு, மாடு, நாய், நாற்காலி போன்றவற்றை அஃறிணை என்றும் தமிழ் இலக்கணத்தில் வகைப்படுத்தப்படுகிறது.
பால்:
பெயர்ச்சொற்கள் பால் அடிப்படையில் ஐந்து வகைப்படும். அவையாவை என்று கீழ் காண்போம்.
ஆண்பால்:
உயர்திணை – ஆணைக் குறிக்கிறது.
எடுத்துக்காட்டு: கந்தன், மாமா, தம்பி வந்தான், வருவான், சாப்பிடுகிறான்…
பெண்பால்:
உயர்திணை – (பெண்ணைக் குறிக்கிறது)
எடுத்துக்காட்டு: ரேஷ்மா, உதயா, பிரியங்கா வந்தாள், சாப்பிடுகிறாள்…
பலர்பால்:
உயர்திணை: (ஆண், பெண் என்பவற்றின் பன்மை)
எடுத்துக்காட்டு: அவர்கள், ஆசிரியர்கள், நீங்கள், வருவீர்கள், போனார்கள்…
ஒன்றன்பால்:
அஃறிணை (ஒன்றைக் குறிப்பது)
எடுத்துக்காட்டு: காகம், பூனை வந்தது, சென்றது, மேசை..
பலவின்பால்:
அஃறிணை (பலவற்றை குறிப்பது)
எடுத்துக்காட்டு: காகங்கள், மேசைகள், நாய்கள், சென்றன, தூங்குகின்றன..
எண்:
ஒருமை, பன்மை என்ற அடிப்படையில் பெயர்ச் சொற்களை வகைப்படுத்துதல் எண் எனப்படும்.
ஒருமை:
அவன், பூனை, அது, ரவி, வந்தது, வந்தான்..
பன்மை:
அவர்கள், பூனைகள், புத்தகங்கள், சென்றன, சென்றார்கள்..
இடம்:
தன்மை, முன்னிலை, படர்க்கைப் பெயர்கள் மூவிடம் பெயர்களாகும்.
தன்மை: (பேசுவோனைச் சுட்டும் பெயர்)
எ.கா: நான், நாம்..
முன்னிலை: (கேட்போனைச் சுட்டும் பெயர்)
எ.கா: நீ, நீங்கள், வந்தீர்கள்..
படர்க்கை: (பேசப்படும் பொருளைச் சுட்டும் பெயர்)
எ.கா: அவன், அவள், அது, வந்தது, வந்தான், வந்தாள்..
காலம்:
ஒரு வினை/ செயல் நடைபெற்ற காலத்தை உணர்த்தப் பயன்படுவது காலமாகும். செயலைக் குறிக்கும் சொல் வினைச்சொல் ஆகவே வினைச் சொல்லே காலத்தைக் காட்டும். பெயர்ச்சொல் காலத்தை காட்டாது.
இறந்தகாலம்: ஒரு செயல் நிகழ்ந்து முற்றுப் பெற்றதை குறிக்கும். (செயல் நடைபெற்று முடிவடைந்தது)
எ.கா: வந்தது, போனார்கள், வந்தன, சென்றார்கள்..
நிகழ்காலம்: செயல் தொடங்கி, முற்றுப் பெறாத நிலை (ஒரு செயல் நடைபெற்றுக் கொண்டிருப்பது)
எ.கா: வருகின்றன, சாப்பிடுகிறான், போகின்றனர்…
எதிர்காலம்: செயல் தொடங்கப் பெறாத நிலை (ஒரு செயல் நடைபெற இருப்பது)
எ.கா: வரும், போகும், வருவார்கள், வருவான்..
இலக்கணக் குறிப்பு | Ilakkana Kurippu |
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |