தெலுங்கு வருடப்பிறப்பு 2024 தேதி | Telugu New Year 2024 Date in Tamil

Advertisement

யுகாதி 2024 தேதி | Telugu Ugadi 2024 Date in Tamil

வணக்கம் நண்பர்களே இன்றைய பதிவில் தெலுங்கு வருடப்பிறப்பு இந்த 2022-ம் வருடத்தில் எப்போது வருகிறது என்று தெரிந்துக்கொள்ளலாம். ஆந்திரா, தெலுங்கானா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் வாழும் மக்களின் புத்தாண்டு தினம்தான் இந்த யுகாதி பண்டிகை. இந்த யுகாதி பண்டிகையை உகாதி என்றும் வேறு பெயரால் அழைக்கிறார்கள். பங்குனி மாத அமாவாசைக்கு மறுநாளே யுகாதிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. யுகத்தின் ஆரம்பம் இந்தநாளில்தான் தொடங்கியது என்பதால், `யுகாதி’ என்ற பெயர் ஏற்பட்டதாக புராணங்கள் கூறுகின்றன. 

தெலுங்கு வருடப்பிறப்பு வாழ்த்துக்கள் 2024

தெலுங்கு வருடப்பிறப்பு 2024 தேதி:

யுகாதி 2024 தேதி 2024, உகாதி ஏப்ரல் 9 ஆம் தேதி (செவ்வாய்கிழமை) வருகிறது.

யுகாதி பண்டிகை சிறப்புகள்:

 தெலுங்கு வருடப்பிறப்பு 2022

  • யுகாதி பண்டிகையின் போது காலையிலையே எழுந்து எண்ணெய் வைத்து குளியல் செய்து புதிய ஆடைகளை அணிந்து இந்த நாளினை கொண்டாடி மகிழ்வார்கள். 
  • வாசலில் மாவிலை தோரணம் கட்டி, வண்ண கோலமிட்டு வீட்டினை அழகுபடுத்துவார்கள்.
  • இந்த நாளில் அம்பிகை வழிபாடு செய்வது வழக்கமாக உள்ளது. அதோடு ஒரு சிலர் குலதெய்வ வழிபாடுகளையும் செய்வார்கள். பூஜையில் தெலுங்கு இனத்தவர்கள் பாட்டு பாடி வழிபாடு செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.
  • இறைவனுக்கு பணியாரம், பூரன் போளி, பால் பாயசம், புளியோதரை போன்ற உணவுகளை படைத்து வழிபாடு நடத்துவார்கள். 
  • இன்றைய நாளில் தங்களுடைய பணியாளர்களுக்கு பரிசு கொடுப்பது அன்று முதல் இன்று வரை வழக்கமாக உள்ளது.
  • யுகாதி பண்டிகையின் போது முக்கிய சிறப்பு என்னவென்றால் அது பச்சை பச்சடிதான்.
  • இந்த பச்சடியானது இனிப்பு, காரம், உப்பு, கசப்பு, துவர்ப்பு, புளிப்பு என அறுசுவை கலந்த பச்சடியைச் செய்து உண்கிறார்கள். வேப்பம் பூ, வெல்லம், உப்பு, புளி, மிளகாய், மாவடு போன்றவற்றைச் சேர்த்து இந்தப் பச்சடியைச் செய்கிறார்கள்.  இதைக் கன்னட மொழியில் ‘பேவு பெல்லா’ என கூறுகிறார்கள்.
  • யுகாதி பண்டிகை காலங்களில் திருப்பதி வெங்கடாஜலபதி பெருமாள் கோவிலில் 40 நாள்கள் நித்ய உற்சவம் நடைபெறும். 
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com
Advertisement