தையல் இயந்திரம் பாகங்கள் | Thayyal Machine Parts Name in Tamil
தையல் இயந்திரமானது துணிகளைத் தைக்க பயன்படும் இயந்திரம் ஆகும். தையல் இயந்திரத்தை தாமசு செயின்ட் என்பவர் 1790-ம் ஆண்டில் கண்டுபிடித்தார். பெண்கள் பலர் தையற்கலையைக் கற்று நல்ல லாபம் பெற்று வருகிறார்கள். பண்டைய காலத்தில் வாழ்ந்த மனிதர்கள் தன் உடலை மறைப்பதற்கு தாவர இலைகளையும், விலங்குகளின் தோல்களையும் ஒழுங்கற்ற முறையில் அணிந்து வந்தனர். முதன் முதலில் விலங்குகளின் தோல்களைத் தைப்பதற்காக கருவி ஒன்றைக் கண்டறிந்தனர். அந்த கருவிதான் தற்போதைய தையல் எந்திரத்தின் படிப்படியான வளர்ச்சிக்கு உள்ளது. நாம் இந்த பதிவில் தையல் இயந்திரத்தின் பாகங்களை படித்து தெரிந்துக்கொள்ளுவோம்..
தமிழக அரசு வழங்கும் இலவச தையல் இயந்திரம்..! எப்படி பெறுவது? |
சாதாரண தையல் மிஷினின் பாகம்:
ஹேன்ட் வீல்:
தையல் மெஷினின் வலது புறத்தில் ஹேன்ட் வீல் அமைந்துள்ளது. இது கையால் அல்லது பெல்ட்டால் சுழற்றப்படுகிறது. பவர் தையல் மெஷினில் இது பெல்ட்டினால் இயங்குகிறது. தையல் இயந்திரத்தில் நீடில் பாரின் இயக்கத்தை இது கட்டுப்படுத்தி, மெஷினை சீராக ஓட்ட உதவியாக இருக்கிறது.
இயக்கம் நிறுத்தம் ரவுன்ட்: இது மெஷினின் வலது பக்க ஓரத்தில் சுற்றுர்ம சக்கரத்தை ஒட்டி அமந்திருக்கும். இந்த ஸ்குருவை இறுக்கமாக (இடமிருந்து வலமாக) மூடினால் சக்கரம் சுற்றி மெஷின் தைப்பதற்கு உதவுகிறது. இதை வலமிருந்து இடமாக திருகி தளர்த்தினால் சக்கரம் சுற்றும். ஆனால் தைக்க முடியாது, நூல் சுற்றலாம், இப்படியாக இந்த ஸ்குருவை தளர்த்தியும், தைக்கும் போது இறுக்கமாக மூடியும் தையல் இயந்திரத்தை இயக்கலாம்.
பிரஷர் புட்:
தைக்கும் போது துணியைப் பற்றுவதர்காகப் பயன்படும் ஒரு புட், இதைக் கழற்றி எடுக்கலாம். வெவ்வேறு வேலைகளுக்கு ஜிப்பர் புட் , பிளாஸ்டிக் புட் என்று வெவ்வேறு வகை புட்கள் உள்ளன.
பிரஷர் புட் லிப்ட்டர் (presser foot Lifter):
மேலும் கீழும் துணியை தாங்கி பிடிப்பதற்காக பிரஷர் புட்டுடன் இணைக்கப்பட்ட ஒரு லீவர்.
நீடில் பிளேட்:
இது ஒரு அரை வட்டத் தட்டு, இதில் உள்ள துளை வழியாக நூல் கடந்து செல்கிறது.
நீடில் கிளாம்ப் ஸ்குரு:
தையல் மிஷினில் ஒரு முனையில் ஊசி பொருத்தப்பட்டுள்ள தண்டு. ஒரு ஆயில், அறுந்த நூல், கிழித்த துணி போன்றவற்றை சேகரிக்கும் உலோகத் தட்டு.
நூல் டென்ஷன் யூனிட்:
மேல் நூலின் இறுக்கத்தையும், தையல்களின் தரத்தையும் கட்டுப்படுத்தும் ஒரு அமைப்பு . டிஸ்க் பிரஷரை கட்டுப்படுத்தும் ஸ்பிரிங் மற்றும் நட் உதவியால் நூலின் இறுக்கம் சரி செய்யப்படுகிறது.
நூல் கைடு:
ஒரு முனையில் ஊசி பொருத்தப்பட்டுள்ள ஒரு தண்டு.
திரேட் டேக் அப் லீவர் (thread take up lever):
தையல் இயந்திரத்தில் இது ஒரு முக்கியமான பாகம். இதன் வழியாக நூல் கோர்த்து தைக்கும் போது, நூலை மேலும் கீழுமாக அசைத்து தைப்பதற்கு உதவும்.
பீட் டாக்:
பிரஷர் புட்டுக்கு கீழே உள்ள சிறிய உலோக சாதனம். இதில் தைக்கப்படும் போது துணியை உடனே இழுத்து செல்கிறது. ஒவ்வொரு தையல் முடிந்ததும் இது ஒரு தையல் நீளத்திற்கு துணியை முன்னோக்கி நகர்த்துகிறது.
எலக்ட்ரானிக் தையல் மிஷின் பாகம்:
எலக்ட்ரானிக் தையல் மிஷினில் பைப்பிங், பைண்டிங், ரஃப்ள்ஸ், பிளீட்டிங், டார்னிங், ஹொம்மிங், பட்டன் துளை போடுவது போன்ற பல வேலைகள் கணினி தொழில்நுட்பத்தில் நடைபெறுகிறது.
இயந்திரங்கள் மற்றும் அதன் விலைப் பட்டியல் |
லாக் தையல் மிஷின்:
- உலகம் முழுவதும் பெரும்பாலும் ஒற்றை ஊசி லாக் தையல் இயந்திரம் தான் பயன்படுகிறது. சங்கிலி தையல் மிஷின்களும், ஓவர் எட்ஜ் தையல் மிஷின்களும் பின்னல் வேலைகளுக்காக பயன்படுகிறது.
- சாதாரண லாக் தையல் மெஷினை தட்டை படுகை தையல் மெஷின் என்றும் சொல்கிறார்கள். அது நேராக மட்டுமே தையல் போடுகிறது.
லாக் தையல்:
- இருபுறத்திலிருந்தும் தையலானது ஒரே மாதிரியாக தெரிகிறது. உடைகளை பயன்படுத்தும்போது நூல் பிரிந்தால் கூட தையலானது பிரிவதில்லை.
- ஏனென்றால் நூல்கள் ஒன்றுடன் ஒன்று இணைந்து லாக் ஆகின்றன.
லாக் தையல் மிஷின் வகைகள்:
- லாக் ஸ்டிட்ச் மிஷின்கள் இரண்டு வகையாக இருக்கிறது. ஒன்று சாதாரண தையல் மிஷின், காலால் இயக்க கூடியது.
- மற்றொண்டு லாக் ஸ்டிட்ச் பவர் தையல் மெஷின். சாதாரண கறுப்புக் கலர் லாக் ஸ்டிட்ச் தையல் மெஷினிக்கும், பவர் மெஷினான வெள்ளைக் கலர் லாக் ஸ்டிட்ச் தையல் மெஷினிக்கும் சில முக்கியமான வித்தியாசங்கள் இருக்கிறது.
- வெள்ளை நிற பவர் தையல் மெஷின் மிகவும் வேகமான இயந்திரம். அது சராசரியாக ஒரு நிமிடத்தில் 5000 தையல்கள் போடுகிறது. ஆனால், சராசரி கறுப்பு நிற சாதாரண தையல் மெஷினோ 800 தையல்களுக்கு மேல் போடுவதில்லை. அதே வேளையில் கைத்தையல் மெஷின் ஒரு நிமிடத்தில் அதிகபட்சமாக 300 தையல்கள் மட்டும் தான் போடுகிறது.
- பவர் தையல் மெஷினில், நீடில் லிஃப்ட் மூலம் பிரஷர் ஃபுட் கட்டுப்படுத்தப்படுகிறது. ஆனால், சாதாரண கறுப்பு நிற வீட்டுத் தையல் மெஷினில், நீடில் பாருக்குப் பின்னால் உள்ள ஒரு லீவரைப் பயன்படுத்தி இது கைகளால் இயக்கப்படுகிறது.
- சாதாரண தையல் மெஷினில் உள்ள த்ரோட் பிளேட், ஷீம் கைடுகளுடன் காணப்படுகிறது. ஆனால் இது தொழிற்சாலை தையல் மெஷினில் இருப்பதில்லை.
- பவர் மெஷினில் பிரஷர் ஃபுட்டுக்கு இரண்டு பெரு விரல்களுக்கு இடையே குறுகலான திறப்புதான் உள்ளது. இது துணியை உறுதியாகவும், இறுகவும் செய்கிறது.
- பவர் மெஷினில் உள்ள பிளேட்டில் உள்ள த்ரோட் பிளேட்டில் சிறிய உருண்டையான ஊசித்துளை உள்ளது. சாதாரண தையல் மெஷினில் இது பெரிதாகவும் ஓவல் வடிவிலும் இருக்கிறது. இதனால் அதிகமாக தையல் பிரச்சனைகள் வருவதில்லை.
நவீன விவசாய கருவிகள் பெயர்கள்..! |
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |