சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் டயலாக்

Advertisement

பஞ்ச் டயலாக் தமிழ் | Punch Dialogue in Tamil

வணக்கம் நண்பர்களே.. பொதுவாக சினிமாக்களில் பஞ்சம் இல்லாத ஒன்று எது என்றால் கண்டிப்பாக பஞ்ச் டயலாக் என்று தான் சொல்ல வேண்டும். தமிழ் சினிமாக்களில் பலவகையான பஞ்ச் டயலாக் இருக்கிறது. தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்கள் பலவகையான பஞ்ச் டயலாக்கினை கூறியுள்ளன. அவற்றில் பிரபலமான நடிகர் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும். சரி இந்த பதிவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூறியுள்ள பஞ்ச் டயலாக் பற்றி பார்க்கலாம்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் டயலாக்:

”இதெப்டி இருக்கு…”

பதினாறு வயதினிலே படத்தில் ஹீரோ கமல்ஹாசன் என்றாலும் வாயில் பீடியோடு “இதெப்டி இருக்கு…” என சிரித்துக் கொண்டே சூப்பர் ஸ்டார் சொல்லும் டயலாக் அந்த காலத்திலும் சரி, இந்த காலத்திலும் சரி செம ஹிட்டாக இருக்கின்ற ஒரு டயலாக்…

சூப்பர் ஸ்டாரின் பஞ்ச் டயலாக்ஸ்:

தர்மதுரை படத்தில் சோகத்தில் சூப்பர் ஸ்டார் சொல்லும் பஞ்ச் டயலாக்காக இருந்தாலும், அந்த காலத்தில் செம மாஸ் டயலாக் இது.

”நல்லவனா இருக்கலாம்.. ஆனா ரொம்ப நல்லவனா இருக்க கூடாது…”

சூப்பர் ஸ்டாரின் பஞ்ச் டயலாக்ஸ்:

முத்து படத்தில் வரும் இந்த டயலாக்கிற்கு விளக்கமே தேவையில்லை. கழுத்தில் இருக்கும் துண்டை சூப்பர் ஸ்டார் மாற்றிப்போடும் ஸ்டைல், அப்போதைய இளைஞர்களை கழுத்தில் துண்டோடு அலைய வைத்தது.

”நான் எப்ப வருவேன், எப்டி வருவேன்னு யாருக்கும் தெரியாது. ஆனா வர வேண்டிய நேரத்துல கரெக்டா வருவேன்..”

Rajini Dialogue in Tamil:-

அருணாச்சலம் படத்தில் கையில் போட்டிருக்கும் தங்கக் காப்பை வைத்துக் கொண்டு தலைவர் சொல்லும் இந்த டயலாக் அந்தக் கால குழந்தைகளின் ரைம்ஸ்…

”ஆண்டவன் சொல்றான்..அருணாச்சலம் முடிக்கிறான்…”

சூப்பர் ஸ்டாரின் பஞ்ச் டயலாக்ஸ்:

அண்ணாமலை படத்தில், அந்த ஹோட்டல் படிக்கட்டு காட்சி மாஸுக்கெல்லாம் மாஸ்.. அதிலும் கையில் சிகரெட்டோடு ரஜினி சொல்லும் இந்த டயலாக், ரஜினிக்கு வேறு ஒரு பரிணாமத்தை கொடுத்தது எனலாம்.

”நான் சொல்றதையும் செய்வேன்…சொல்லாததையும் செய்வேன்…”

Punch Dialogue in Tamil:

சிவாஜி படத்தில் ரஜினி சொல்லும் இந்த டயலாக்ஸ் ரசிகர்களை அசரடித்த ஒன்றாகும்.

“பேரே கேட்டாலே சும்மா அதிருதில்ல…”
“கண்ணா..பன்னிங்க தான் கூட்டமா வரும்..சிங்கம் சிங்கிளாத்தான் வரும்…”

சூப்பர் ஸ்டாரின் பஞ்ச் டயலாக்ஸ்:

படையப்பா படத்தில் சொல்லும் டயலாக்ஸ் அனைத்தும் நன்றாக இருக்கும்.

”என் வழி…தனி வழி…”

சூப்பர் ஸ்டாரின் பஞ்ச் டயலாக்ஸ்:

பாட்ஷா படம் வெளிவந்து 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டாலும், இன்றும் நாம் நடைமுறையில் பயன்படுத்தி வரும் ஒரு செம பஞ்ச் டயலாக் என்றால் அது இதுதான்.

”நான் ஒரு தடவ சொன்னா…நூறு தடவ சொன்ன மாதிரி…”

 

மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com
Advertisement