மகளிர் தின பாடல்கள் | Women’s Day Songs Tamil

Women's Day Songs Tamil

மகளிர் தின சிறப்பு பாடல்கள் | Women’s Day Special Song in Tamil

பெண் என்றாலே அனைத்திலும் சிறப்பு வாய்ந்தவள் தான். ஆணாதிக்க சமுதாயத்திலிருந்து பெண்களுக்கான உரிமைகளை மீட்டெடுத்து வென்ற நாள் தான் இந்த மகளிர் தினம். மகளிர் தினத்தை பெண்கள் மட்டும் கொண்டாடாமல் ஆண்களும் பெண்களுக்கு நிகராக பங்கெடுத்து அந்த நாளினை கொண்டாட வேண்டும். பெண்களுக்கு ஆண்களை விட எப்போதும் மனதில் வலிமை அதிகமாக இருக்கும். இதனால் தான் பெண்கள் எந்த கஷ்டத்தினையும் கடந்து வாழ்வில் வெற்றி அடைவார்கள். மகளிர் தினத்தை போற்றும் விதமாக பெண்களுக்கென ஒரு மகளிர் தின சிறப்பு பாடலை இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க..

மகளிர் தினம் பேச்சு போட்டி கட்டுரை

மகளிர் தினம் பாடல்கள்:

பெண்மை போற்றிடுவோம் ….மாதர் மாண்பினையே காப்போம்..!
தாய்மையை வணங்குவோம்….பெருமிதம் கொள்வோம்…
பாரதம் செழிக்க…பெண்கள் சிறக்க…

மகளிர் தினத்தில்… மகிழ்ச்சியில் திளைப்போம்…
சிந்தித்து செயல்பட்டு …சிகரத்தை அடைவோம்..!

வீட்டின் கண்கள்… நாட்டின் இதயமே…
பெண்கள் நினைத்தால்..அனைத்திலும் ஜெயமே…!
—-பெண்மை

மழலைச்செல்வம்… மகிழ்ச்சியாய் வளர….
உறக்கத்தை மறந்த…மெழுகு தீபங்கள்…

உதிரம் அளித்து… உயிரை வளர்த்த…
தியாகத்தை எண்ணி…. பாதம் பணிவோம்…
—-பெண்மை

ஈடில்லா இறைவனின்…. வடிவமே தாய்தான்..
கனிவுடன் பழகும் …ஆளுமை திறத்தால்…

உணவும் படைத்து… பிணிதனை அகற்றும் ..
பெண்ணவள் நாளும்…அமைதியின் அம்சம்..!
—-பெண்மை

இல்லத்தின் அரசி ….எண்ணத்தில் வலிமை..
வையகம் வாழ்த்தும் ..பெண்மையின் மென்மை…

குடும்பம் என்னும்… தேரை நகர்த்தும்..
வடமாய் விளங்கும்… ஆற்றலும் பெண்ணே…
—-பெண்மை

அழகுப்பதுமைகள்….அறிவின் சிகரங்கள்…
படிப்பில் சுட்டி…விளையாட்டிலும் கெட்டி…

கல்வி வேலை …அனைத்திலும் ஏற்றம்…
மங்கையின் இலக்கு….புவியல்ல வானம்….
—-பெண்மை

தமிழன்னை தாய்மொழி …எதிலும் நிறைந்த …
பூமியன்னையாய் …..பொறுமை காப்போம்…

வீரம் பழகுவோம் …விவேகமும் கற்போம் ..
தனித்திறன் வளர்ப்போம் …தரணியை ஆள்வோம்…
—-பெண்மை

சேவையின் சிகரம் …அன்னை தெரசா…
அமைதிக்கு நோபலும் … பெற்ற மலால …

விண்ணில் பறந்த….கல்பனா சாவ்லா …
மகுடம் சூடிய ……ஐஸ்வர்யா ராய்..
—-பெண்மை
தன்னிகரற்ற…. நாட்டை அமைக்க …
சிந்தனை திறத்தால் …பாதை அமைப்போம் …

உடலை பேணிடு….உறுதியைக்காத்திடு…
திடமான மனதுடன்…தீர்க்கமாய் முடிவெடு …
—-பெண்மை

பெண்ணே ஷக்தி…பெண்ணே இயக்கம்..
பெண்ணே அனைத்தும் …உணர்ந்திடு தோழி…

விழித்தெழு இன்றே .. வீறுகொள் நன்றே ..
புறப்படு நீயும்….வெற்றியும் உனதே…!
—-பெண்மை

மகளிர் தின ஸ்பெஷல்

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –>Today Useful Information in tamil