ஆமை புகுந்த வீடு உறுப்படாது என்று சொல்ல காரணம் என்ன?

Advertisement

ஆமை வீட்டிற்குள் வந்தால் என்ன பலன்? | Tortoise Entering House is Good or Bad in Tamil

பொதுவாக ஆமை வீட்டில் புகுந்து விட்டால் அந்த வீடு உறுப்பிடாமல் போய்விடும் என்று ஒரு பழமொழி இருக்கிறது. இதன் காரணமாகவே ஆமை என்றாலே அபசகுனம் என்று பலரது மனதில் எண்ணம் தோன்றுகிறது. அப்படி என்ன ஒரு சின்ன சிறிய ஆமைக்கு ஒரு மனிதனின் வாழ்க்கையே புரட்டி போடும் அளவிற்கு சக்தி இருக்கின்றதா என்ன? ஆமை புகுந்த வீடு உறுப்பிடாது என்ற பழமொழிக்கு உண்மையான அர்த்தம் என்ன என்பதை பற்றி இந்த பதிவில் நாம் தெரிந்துகொள்வோம் வாங்க..

ஆமை புகுந்த வீடு பழமொழி அர்த்தம் | Aamai Veetil Vanthal Enna Palan

Turtles

விஷ்ணு தசாவதாரத்தில் கூர்ம அவதாரத்தின் வடிவம் தான் ஆமை. ரமணர் போன்ற பெரிய சித்தர்கள் எல்லாம் ஆமையை போன்று அடங்கியிரு என்பார்கள். ஆமை சலனமோ, சத்தமோ, ஆபத்தோ என்றால் கூட தன்னுடைய உடல் உறுப்புகளை அந்த ஓட்டிற்குள் ஒடுக்கிக்கொள்ளும் அதை போன்று மனிதர்களாகிய நாம் ஐம்புலன்களையும் ஆமை போன்று அடக்கமாக வைத்து கொண்டால் நமது வாழ்வில் எந்த ஒரு பிரச்சனைகளும் இல்லாமல் ஆமையை போன்று 120 ஆண்டுகள் நலமாக வாழலாம் என்று சொல்வார்கள்.

அப்படிப்பட்ட ஆமை ஒரு இடத்திற்கு வருகிறது என்றால் அவர்கள் கொஞ்சம் ஒடுங்கப் போகிறார்கள் என்று தான் அர்த்தம். தெய்வத்தினுடைய வருகையும் ஒடுங்கும். ஆயுள் ஒடுங்கும்.  அதற்காகத்தான் அதுபோலக் குறிப்பிடப்படுகிறது. இதற்கு உண்மையான காரணம் என்ன என்பதை இப்பொழுது நாம் படித்தறியலாமா?

ஆமை புகுந்த வீடு உறுப்பிடாது என்று சொல்வதற்கான உண்மையான காரணம் என்ன?

ஆமை புகுந்த வீடு பழமொழி அர்த்தம்:- ஆமை என்பது மிகவும் சாதாரண ஒரு உயிரினம், 150 ஆண்டுகள் வரை வாழக்கூடிய ஒரு உயிரினம். சிலர் இந்த ஆமையை வீட்டில் செல்ல பிராணியாகவும் வளர்த்து வருகின்றன. ஆனால் சிலர் ஆமை புகுந்த வீடு உறுப்படாது என்றும் கெட்ட சகுணமாகவும் கூறுகின்றன. இவ்வாறு கூறுவதன் உண்மையான காரணம் என்னவென்றால் ஆமை இயல்பாகவே மிகவும் மெதுவாக செல்லும் பிராணியாகும்.

ஓர் ஆமை அவ்வளவு எளிதாக ஒரு வீட்டுக்குள் நுழைந்துவிட முடியுமா? அதன் வேகத்துக்கு அது வாசலைக் கடந்து வீட்டுக்குள் வரவே பல மணி நேரம் ஆகுமே! ஒருவேளை இவ்வளவு மெதுவான ஆமை புகுவதைக் கூட கவனிக்க முடியாத அளவு அலட்சியமாக இருக்கும் சோம்பேறித்தனமான வீடு எப்படி உருப்படும். இவ்வாறு மெதுவாக செல்லக்கூடிய பிராணியை கூட தெரியாமல் இருந்தால், அந்த வீட்டிற்குள் அந்நியர்கள் கூட மிக எளிதாக நுழைந்துவிடுவார்களாம். இதன் காரணமாக தான் ஆமை நுழைந்த வீடு உறுப்படாது என்ற பழமொழி கூறப்பட்டது. மற்றபடி ஆமைக்கும் கெட்ட சகுனத்திற்கும் வேறு எந்த ஒரு தொடர்பும் கிடையாது. ஆமை ஒரு சாதுவான பிராணியாகும். இதையெல்லாம் யாரும் கெட்ட சகுனம் என்று நினைத்து கொண்டிருக்க வேண்டாம். வீடு விளங்காமல் போய்விடுமோ என்று நினைத்து பயப்பட வேண்டாம்.

 

நல்ல சகுனம், கெட்ட சகுனம் பார்ப்பது எப்படி?

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today useful information in tamil
Advertisement