பேக்கிங் சோடா Vs பேக்கிங் பவுடர்..! வித்தியாசம் என்ன தெரியுமா..?

Advertisement

Baking Soda Vs Baking Powder 

வணக்கம் நண்பர்களே..! இன்று வாசகர்கள் அனைவருக்கும் ஒரு பயனுள்ள தகவலை கூற போகிறேன் என்பதில் மிக்க மகிழ்ச்சி. நீங்களும் இந்த பதிவை படித்து முடிக்கும் போது ஒரு பயனுள்ள தகவலை தெரிந்து கொண்டோம் என்ற மனத்திருப்தி உங்களுக்கு இருக்கும். இது என்ன பதிவு என்று மேல் படித்து தெரிந்து கொண்டிருப்பீர்கள். இருந்தாலும் இன்னொரு முறை சொல்கிறேன். சரி நீங்கள் பேக்கிங் சோடா அல்லது பேக்கிங் பவுடர் பயன்படுத்தி இருக்கிறீர்களா..? அப்படி பயன்படுத்தி இருந்தால் இது இரண்டிற்கும் என்ன வித்தியாசம் இருக்கும் என்ற கேள்வி உங்களுக்கு வந்திருக்க வேண்டுமே..? அப்படி ஒரு கேள்வி உங்களுக்கு இருந்தால் அதற்கான பதிலை இந்த பதிவின் வாயிலாக தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

பேக்கிங் சோடா Vs பேக்கிங் பவுடர்: 

baking soda and baking powder

பொதுவாக இன்றைய நிலையில் மக்கள் அனைவருமே பேக்கிங் சோடா அல்லது பேக்கிங் பவுடர் பயன்படுத்தி வருகிறார்கள். அப்படி நாம் எவ்வளவு தான் பயன்படுத்தி வந்தாலும் இவை இரண்டிற்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது என்று பலருக்கும் ஒரு கேள்வி இருக்கிறது.

பேக்கிங் சோடா பயன்கள்

பேக்கிங் சோடா: சோடியம் பைகார்பனேட் என்னும் ரசாயனப் பொருள் கலந்த கலவையை தான் நாம் பேக்கிங் சோடா என்று சொல்கின்றோம். சோடியம் பைகார்பனேட் என்பது ஒரு கார உப்பு கலவையாகும். இது மோர், சிட்ரஸ் பழ ஜூஸ்கள் போன்ற அமிலத்தன்மை கொண்ட உணவுப் பொருட்களில்  சேர்க்கப்படுகிறது. அப்படி நாம் பேக்கிங் சோடாவை அமிலத்துடன் கலக்கும் போது, அது கார்பன் டை ஆக்சைடு வாயுவை உருவாக்குகிறது.

பேக்கிங் பவுடர்: சோடியம் பைகார்பனேட் மற்றும் அமிலம் ஆகிய இரண்டின் கலவையை தான் நாம் பேக்கிங் பவுடர் என்று சொல்கின்றோம். இது சோளமாவு, அரிசிமாவு போன்ற அமிலத்தன்மை இல்லாத உணவு பொருட்களில் சேர்க்கப்படுகிறது. ஈரப்பதம் கொண்ட உணவுப் பொருளில் இதை சேர்த்து சூடேற்றம் செய்யும்போது கார்பன் டையாக்சைடு கொண்ட முட்டைகளை வெளியிடுகிறது. இதனால் உணவுப் பொருள்களை மென்மையானதாக மாற்றுகிறது.

பேக்கிங் சோடா மட்டும் போதும் உங்கள் வெள்ளி நகைகளை 5 நிமிடத்தில் புதுசு போல மாற்றிவிடலாம்

இவற்றை எப்படி பயன்படுத்துவது..? 

baking soda and baking powder

  1. பேக்கிங் சோடா மற்றும் பேக்கிங் பவுடர் இவை இரண்டையும் உணவில் பரிந்துரைக்கப்பட்ட அளவு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
  2. அதுபோல நாம் வாங்கும் பேக்கிங் சோடா மற்றும் பேக்கிங் பவுடர் இவற்றின் காலாவதி தேதியை சரி பார்த்து பயன்படுத்துவது அவசியம்.
  3. பேக்கிங் சோடா அல்லது பேக்கிங் பவுடர் இவை இரண்டையும் அளவுக்கு அதிகமாக உணவில் சேர்த்தால், அந்த உணவின் சுவையும், அதன் தன்மையும் அதுபோல உணவின் மனமும் மாறிவிடும்.
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement