பாரதியார் கவிதைகள் | Bharathiyar Kavithaigal

Advertisement

பாரதியார் கவிதைகள் | Bharathiyar Kavithaigal

Bharathiyar Kavithaigal/ bharathiyar kavithaigal in tamil:- மகாகவி பாரதியார் ஒரு தமிழ் கவிஞர் என்று நம் அனைவருக்கும் தெரிந்திருக்கும். இந்தியாவின் சுதந்தர போராட்ட காலங்களில் கனல் தெறிக்கும் விடுதலைப்போர் கவிதைகள் மூலம் மக்கள் மனதில் விடுதலை உணர்வுகளை நுழைத்தவர். மேலும் மகாகவி பாரதி ஒரு நல்ல கவிஞர் மட்டுமல்ல, நல்ல எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், சமூக சீர்திருத்தவாதி மற்றும் தன்னுடைய பாட்டுகளின் மூலமாக சிந்தனைகளை மக்களிடம் உணர்த்தியவர். இந்திய நாட்டின் சுதந்திரத்திற்காக பல கவிதை எழுதிய நம் பாரதியார் அதே போல் தமிழர் நலன், பெண் விடுதலை, தீண்டாமை போன்றவற்றிற்காக ஒரு நூற்றண்டிற்கு முன்னரே தன் கவிதையால் உரக்க கத்தியவர் மகாகவி பாரதியார் தான். சரி இப்பதிவில் இப்புகழ்பெற்ற மனிதன் எழுதிய கவிதைகளை (bharathiyar kavithaigal) காண்போம் வாங்க.

பாரதியார் கட்டுரை

Bharathiyar Vasana Kavithaigal in Tamil: 

Bharathiyar Vasana Kavithaigal in Tamil

Bharathiyar Quotes Tamil:- 

bharathiyar kavithaigal

பாரதியார் கவிதைகள் | Bharathiyar Kavithaigal in Tamil | Bharathiyar Poems

bharathiyar images

பாமாலை : பக்தி பாடல்கள்

வேதாந்தப் பாடல்கள்

அச்சமில்லை அச்சமில்லை பாடல் பாரதியார் | Achchamillai Achchamillai Bharathiyar Songs in Tamil | Bharathiyar Kavithaigal Achamillai

[பண்டாரப் பாட்டு]

பாரதியார் கவிதைகள் அச்சமில்லை – Bharathiyar Kavithaigal Achamillai

அச்சமில்லை அச்சமில்லை
அச்சமென்ப தில்லையே
இச்சகத்து ளோரெலாம்
எதிர்த்துநின்ற போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை
அச்சமென்ப தில்லையே.
துச்சமாக எண்ணிநம்மைத்
தூறுசெய்த போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை
அச்சமென்ப தில்லையே.
பிச்சைவாங்கி உண்ணும்வாழ்க்கை
பெற்றுவிட்ட போதிலும்,
அச்சமில்லை அச்சமில்லை
அச்சமென்பத் தில்லையே.
இச்சைகொண்ட பொருளெலாம்
இழந்துவிட்ட போதிலும்,
அச்சமில்லை அச்சமில்லை
அச்சமென்ப தில்லையே.                                                                                            1

கச்சணிந்த கொங்கை மாதர்
கண்கள் வீசு போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை
அச்சமென்ப தில்லையே.
நச்சைவாயி லேகொணர்ந்து
நண் பரூட்டு போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை
அச்சமென்ப தில்லையே.
பச்சையூ னியைந்தவேற்
படைகள்வந்த போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை
அச்சமென்ப தில்லையே.
உச்சிமீது வானிடிந்து
வீழுகின்ற போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை
அச்சமென்ப தில்லையே.                                                                                            2

காவியங்கள்: கற்பனையும் கதையும் – bharathiyar kavithaigal in tamil

பாரதியாரின் கண்ணன் என் காதலன் பாடல்கள் – kannan en kadhalan bharathiyar kavithaigal

பாங்கியைத் தூது விடுத்தல்

(தங்கப் பாட்டு மெட்டு)
ரசங்கள்: சிருங்காரம், ரௌத்ரம்

கண்ணன் மனநிலையைத் தங்கமே தங்கம் —
(அடி தங்கமே தங்கம்)
கண்டுவர வேணுமடி தங்கமே தங்கம்;
எண்ண முரைத்துவிடில் தங்கமே தங்கம் — பின்னர்
ஏதெனிலுஞ் செய்வமடி தங்கமே தங்கம்.                                                                    1

Bharathiyar Kavithaigal – சமூகம்

பெண் விடுதலை கவிதை – Tamil Bharathiyar Kavithai

விடுதலைக்கு மகளிரெல் லோரும்
வேட்கை கொண்டனம்; வெல்லுவம் என்றே
திடம னத்தின் மதுக்கிண்ண மீது
சேர்ந்து நாம்பிர திக்கினை செய்வோம்.
உடையவள் சக்தி ஆண்பெண் ணிரண்டும்
ஒருநி கர்செய் துரிமை சமைத்தாள்.
இடையிலே பட்ட கீழ்நிலை கண்டீர்,
இதற்கு நாமொருப் பட்டிருப் போமோ?                                                                        1

புதுமைப் பெண் கவிதை –  Pen Kavithai

புதுமைப் பெண் கவிதை – Puthumai Pen Bharathiyar Kavithai – புதுமை பெண் பாடல்கள்

போற்றி போற்றிஓர் ஆயிரம் போற்றி! நின்
பொன்ன டிக்குபல் லாயிரம் போற்றிகாண்!
சேற்றி லேபுதி தாக முளைத்ததோர்
செய்ய தாமரைத் தேமலர் போலொளி
தோற்றி நின்றனை பாரத நாட்டிலே
துன்பம் நீக்கும் சுதந்திர பேரிகை
சாற்றி வந்தனை மாதரசே எங்கள்
சாதி செய்த தவப்பயன் வாழி நீ!                                                                                  1

மாதர்க் குண்டு சுதந்திரம் என்றுநின்
வண்ம லர்த்திரு வாயின் மொழிந்தசொல்
நாதந் தானது நாரதர் வீணையோ?
நம்பிரான் கண்ணன் வேய்ங்குழ லின்பமோ?
வேதம் பொன்னுருக் கன்னிகை யாகியே
மேன்மை செய்தெமைக் காத்திடச் சொல்வதோ?
சாதல் மூத்தல் கெடுக்கும் அமிழ்தமோ?
தையல் வாழ்கபல் லாண்டுபல் லாண்டிங்கே!

2

பாரதியார் பெண் கவிதைகள் – Barathiyar Kavithaikal

பெண்மை வாழ்கென்று கூத்திடு வோமடா
பெண்மை வெல்கென்று கூத்திடு வோமடா
தண்மை இன்பம்நற் புண்ணியஞ் சேர்ந்தன
தாயின் பெயரும் சதியென்ற நாமமும்.                                                                       1

பாரதியார் கவிதைகள் – Bharathiyar Vasana Kavithaigal in Tamil – Bharathiyar Quotes Tamil

bharathiyar kavithaigal in tamil

கவலையும் பயமும் எனக்கு பகைவர் நான் இப்பகைவரை வென்று தீர்த்தேன் அதனால் மரணத்தை வென்றேன் நான் அமரன்

மகாகவி பாரதியார் கவிதை

பாரதியார் கவிதைகள் அச்சமில்லை – Bharathiyar Kavithaigal Achamillai – Bharathiyar Achamillai Kavithai:

bharathiyar achamillai kavithai

பாரதியார் கவிதைகள் அச்சமில்லை – Bharathiyar kavithai achamillai:- 

bharathiyar kavithai

எவனையும் வெற்று காகிதம் என ஒருபோதும் எண்ணாதே…

ஒரு நாள் அவன் பட்டமாய் பறப்பான் நீயும் அண்ணாந்து தான் பார்க்க வேண்டும்..

பாரதியார் வசன கவிதைகள் – Bharathiyar vasana kavithaigal in tamil:-

Bharathiyar vasana kavithaigal in tamil

இவ்வுலக வாழ்க்கையில் சம்பாதித்து கொள்ள வேண்டிய குணங்கள் எல்லாவற்றிலும் மிகமிக உயர்ந்தது பொறுமை.

மகாகவி பாரதியார் கவிதை

இதையும் கிளிக் செய்யுங்கள் –> பகவத் கீதை பொன்மொழிகள்

 

கண்ணதாசன் கவிதைகள்

 

மேலும் பலவகையான தத்துவங்களை Images மூலம் டவுன்லோடு செய்ய இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்–> Quotes in Tamil
Advertisement