வல்லாரை கீரை சாப்பிடுவீர்கள் என்றால் இதை தெரிஞ்சுக்கிட்டு சாப்பிடுங்க..

brahmi leaves in tamil

Brahmi Leaves in Tamil

பொதுவாக கீரை வகைகள் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது என்று அனைவருக்கும் தெரியும். ஆனால் அதனை அதிகமாக சாப்பிட மாட்டோம். அதிலும் நம் முன்னோர்கள் அனைவரும் கீரை வகைகளை அதிகமாக சாப்பிடுவார்கள். அதனால் தான் எந்த நோய், நொடியும் இல்லாமல் மகிழ்ச்சியாக இருந்தார்கள். இன்றைய காலத்தில் உள்ள குழந்தைகளுக்கு ஒரு விஷயத்தை சொல்லி நாளை கேட்டால் ஞாபகம் இருக்காது. ஆனால் நம் தாத்தா பாட்டி ஞாபகம் வைத்திருப்பார்கள். இதற்கு முக்கிய காரணமாக இருந்தது வல்லாரை கீரை தான். அதனால் தான் இன்றைய பதிவில் வல்லாரை கீரையை பற்றி அறிந்து கொள்வோம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

வல்லாரை கீரை பற்றிய தகவல்:

brahmi leaves in tamil

பிராமி என்று அளிக்கப்படும் வல்லாரை கீரை பல கிளைகளைக் கொண்ட கொடி போன்ற ஒரு தாவர இனமாகும். இது சதைப்பற்றுடன் காணப்படும். இது வேரூன்றி, நிலத்தில் படரும் தன்மை கொண்டது. கடல் மட்டத்திலிருந்து 4400 அடி உயரத்தில் வல்லாரை காணப்படுகிறது.

வல்லாரை கீரை ஈரமான இடத்திலும், நீரை மற்றும் சதுப்பு நிலங்களில் இயற்கையாக வளர கூடியது. இதில் நான்கு அல்லது ஐந்து இதழ்களுக்கு மிகாமல் வெளிர் ஊதா அல்லது வெள்ளை நிறத்தில் சிறிய பூக்கள் காணப்படும்.

உங்க வீட்ல வல்லாரை கீரை இருக்கா..! அப்போ இதை தெரிஞ்சுக்கோங்க..!

சிறிய நீர்த்தேக்கங்களில், இந்தியா, ஆப்பிரிக்கா, ஆசியா, ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்காவின் தென் மாநிலங்களில் வெப்ப மண்டலங்கள் மற்றும் துணை வெப்பமண்டலங்களில் உள்ள சதுப்பு நிலப் பகுதிகளில் வளர்கிறது. இதன் சிறப்பே முழு தாவரமும் மருந்தாக பயன்படுகிறது.

சுவை எப்படி இருக்கும்:

இதன் சுவை சிறிது கசப்பாக இருந்தாலும் இனிப்பூட்டும் சுவையுடனும் இருக்கும். உடலுக்கு குளிர்ச்சியை கொடுக்க கூடியது. மூளையை ஊக்குவிக்கும் ஒரு காரணியாக செயல்படுகிறது.

இவை வல்லாரை கீரை சித்த ஆயுர்வேதத்தில் மூலிகையில் சேர்க்கப்படுகிறது. பெரும்பாலும் இவை ஞாபக சக்திக்கும், முடி வளர்ச்சிக்கும் பெரிதும் உதவுகிறது.

எப்படி உணவில் சேர்க்கலாம்:

வல்லாரை கீரையை சாம்பார், துவையல், கூட்டு, இட்லி பொடி போன்றவை செய்து சாப்பிடலாம்.

நீங்க வில்வ பழத்தை பார்த்திருக்கிறீர்களா.. அப்போ இதை தெரிஞ்சிக்கலனா எப்படி

 

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil