நன்றி வாழ்த்துக்கள் கவிதை | Positive Affirmations in Tamil
Positive Affirmations in Tamil – பொதுவாக தன் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று நினைப்பவர்கள், முன்னேற்றத்தைப் பற்றி சிந்திப்பவர்கள், மனதில் எதையாவது நினைத்து கொண்டு இருப்பவர்கள், அதிக மனம் அழுத்தம் உள்ளவர்கள் என்று அனைவருமே தினந்தோறும் எடுக்க வேண்டிய உறுதிமொழி பற்றி இந்த பதிவில் படித்தறியலாமா? இந்த உறுதிமொழி உங்கள் மனநிலை மற்றும் வாழ்க்கை தரத்தை உயர்த்த கண்டிப்பாக பயனுள்ளதாக இருக்கும். சரி வாங்க தினசரி நாம் எடுக்க வேண்டிய உறுதிமொழிகளை கீழ் படிக்கலாம்.
தினசரி உறுதிமொழி | Daily Affirmation in Tamil
*என் தெளிவான அறிவுக்கும், சரியாக முடிவு எடுக்கும் திறமைக்கும் நன்றி..
* என் நாளை சிறப்பானதாக ஆக்கும் எண்ணம் என்னுடையது..
* என்னுடைய நம்பிக்கை தினமும் அதிகரிக்கிறது..
* என்னுடைய ஆற்றல் நேர்மறையான எண்ணங்களுக்கு மட்டுமே பயன்படுகிறது..
* நான் எப்போதும் சரியான சூழ்நிலையிலேயே இருக்கிறேன்..
* என் துணிவான எண்ணங்கள் நான் தொடர்ந்து வாழ்க்கையில் முன்னேற காரணமாக இருக்கிறது..
* நான் அளவற்ற ஆற்றலை பெற்றேன்..
* நானே என் வாழ்க்கையை உருவாக்குகிறேன்..
* தினமும் அளவற்ற புதிய வாய்ப்புகளை இந்த பிரபஞ்சம் எனக்கு அள்ளித்தருகிறது..
* நான் என் உள்ளுணர்வை முழுமையாக நம்புகிறேன்..
* எப்பொழுதும் நான் எடுக்கும் முடிவுகள் மிக சரியானவை..
* நான் என் இலக்குகள் மீது முழு கவனம் வைத்துள்ளேன்.. அதற்கான வேலைகளை தொடர்ந்து முன்னெடுக்கிறேன்..
* நாம் நேர்மறையான எண்ணங்களை கொண்டுள்ளேன்.. அவை எனக்கு வெற்றிகளை மட்டுமே அள்ளித்தருகிறது..
* என் வாழ்க்கையை நான் உணர்வுபூர்வமாக வாழ்கிறேன்..
* எனக்குள் அனைத்து சூழ்நிலைகளையும் எதிர்கொள்ளும் ஆற்றல் இருக்கிறது..
* எனது ஒவ்வொரு வெற்றிகளையும் மகிழ்ச்சியாக கொண்டாடுகிறேன்..
* எனது முயற்சிகள் அனைத்தும் புதிய வாய்ப்புகளை உருவாக்குகிறது..
* நான் முழுமையான நம்பிக்கையோடு செயல்படுகிறேன்..
* என் வாழ்க்கை மகிழ்ச்சியானதாக அமைய என் நம்பிக்கையே காரணம்..
* என் வாழ்க்கையில் பல நல்ல மாற்றங்களை உருவாக்கும் நம்பிக்கை என்னிடம் உள்ளது..
* நான் எனது ஒவ்வொரு நாளையும் மிக நம்பிக்கையோடு தொடங்குகின்றேன்..
* நான் தெளிவான எண்ணங்களோடு செயல்படுகிறேன்..
* என்னை சுற்றியுள்ள அனைவரும் என் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக உள்ளனர்..
* அனைத்து சூழ்நிலைகளும் என் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கிறது..
* எனது வாழ்க்கையை நானே வடிவமைக்கிறேன்..
* இந்த பிரபஞ்சத்தில் அளவற்ற தன்மையை நான் உணர்கிறேன்..
* இன்று நான் பழைய எண்ணங்களை மறந்து புதிய நல்ல நேர்மறையான எண்ணங்களை மட்டுமே ஏற்கிறேன்..
* என் அறிவுக்கு நன்றி..
* என் திறமைகளுக்கு நன்றி..
* என் மீது நான் வைத்திருக்கும் முழுமையான நம்பிக்கைகளுக்கு நன்றி..
இதையும் கிளிக் செய்யுங்கள்–>தன்னம்பிக்கை பொன்மொழிகள்..! |
வாழ்க்கையை மகிழ்ச்சியானதாக வாழ வேண்டும் என்று நினைப்பவர்கள் உங்கள் மனதில் ஓடிக்கொண்டிருக்கும் தேவையற்ற எண்ணங்கள் அனைத்தையும் மறந்துவிட்டு.. நல்ல எண்ணங்களை விதைத்திட மேல் கூறப்பட்டுள்ள ஒவ்வொரு உறுதிமொழிகளும் தங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.. ஆகவே தினமும் காலை எழுத்தவுடன் இது போன்ற நல்ல உறுதிமொழிகளை சொல்லிவிட்டு அன்றைய நாளை தொடங்குங்கள்.. அன்றைய நாள் உங்களுக்கு மிகவும் அற்புதமான நாளாக மாற்ற வழிவகுக்கும்..
மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள் , ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | பொதுநலம்.com |