வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

RO வாட்டர் ஆபத்தா? நீங்கள் அருந்துவது எதற்காக? Disadvantages of RO Water..!

Updated On: February 14, 2022 12:34 PM
Follow Us:
Disadvantages of RO Water
---Advertisement---
Advertisement

RO வாட்டர் ஆபத்தா? நீங்கள் அருந்துவது எதற்காக? Disadvantages of RO Water..!

Disadvantages of RO Water:- கேன் வாட்டரை உருவாக்க கூடிய ரிவர்ஸ் ஆஸ்மாசிஸ் (Reverse Osmosis) எனப்படும் RO முறையை தடை செய்வது தொடர்பாக மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறைக்கு (எம்ஓஇஎப்) தேசிய பசுமைத் தீர்ப்பாயம் (என்ஜிடி)  ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளனர்.

நாம் அருந்தும் குடிநீரில் T.D.S அளவு இருக்கிறது. இந்த T.D.S அளவானது ஒவ்வொரு இடத்தை பொறுத்து மாறுபடும். இந்த T.D.S அளவானது எந்தெந்த இடங்களில் எல்லாம் 500-ம் குறைவாக உள்ளதோ, அவற்றை தடை செய்ய வேண்டும் என்றும்  தேசிய பசுமைத் தீர்ப்பாயம் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.

மக்கள் தங்கள் அருந்தும் தண்ணீர் சுத்திகரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும் என்று விரும்புகின்றன. அதாவது ஆழ்குழாய் மூலம் பெறப்படும் நிலத்தடி நீரை சுத்திகரிக்க ஆர்ஓ முறை நாடெங்கிலும் பரவலாக்கப்பட்டுள்ளது.

இதற்காக ரூ.5,000/- முதல் ஆர்ஓ தண்ணீர் சுத்திகரிப்பான்கள் சந்தையில் கிடைக்கின்றன. இதை ஏராளமான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

பான் எண்ணுடன் ஆதார் எண்ணை Link செய்வது எப்படி? How to link aadhaar to pan card in tamil..!

புதிய உத்தரவு:

இந்நிலையில் ஆர்ஓ தண்ணீர் சுத்திகரிப்பான் தொடர்பான ஆய்வு முடிவுகள் குறித்து நிபுணர் குழு, தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் அறிக்கை தாக்கல் செய்தது. இதையடுத்து தீர்ப்பாயம் மத்திய அமைச்சகத்துக்கு ஒரு புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

ஒரு லிட்டர் குடிநீரில், நீரில் கரைந்துள்ள திடப்பொருளின் மொத்த அளவு (TDS-Total Dissolved Solids) 500 மில்லி கிராமுக்கும் குறைவாக இருக்கும் வகையில் குடிநீரை சுத்திகரிக்கும் ஆர்ஓ இயந்திரங்களுக்கு தடை விதிப்பது குறித்த அறிவிப்பாணையை இரு மாதங்களுக்குள் வெளியிட வேண்டும் என்று மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பான உத்தரவை என்ஜிடி தலைவர் நீதிபதி ஆதர்ஷ் குமார் கோயல் பிறப்பித்துள்ளார்.

இந்த வகை ஆர்ஓ முறையால் பெறப்படும் குடிநீர் பொதுமக்களின் சுகாதாரத்துக்கும், சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு ஏற்படுத்துகிறது. எனவே இதை தடை செய்யவேண்டும். இந்த உத்தரவை விரைவாக அமல்படுத்தவேண்டும்.

2 மாதங்களுக்குள் தடை செய்வது தொடர்பாக அறிவிப்பாணையை மத்திய அரசு வெளியிடவேண்டும் என்று நீதிபதி தெரிவித்தார்.

மேலும் அவகாசம் தேவை:

இதையடுத்து இந்த தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் ஆணையை செயல்படுத்த 4 மாத அவகாசம் தேவைப்படுகிறது என்று மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் என கால அவகாசம் கோரியுள்ளது.

இதுதொடர்பாக பசுமைத் தீர்ப்பாயத்தில் சுற்றுச்சூழல், வனத்துறை அமைச்சகம் சார்பில் தாக்கல் செய்துள்ள ஆவணத்தில் கூறும்போது, “சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம்.

கருத்து, ஆலோசனை:

அந்த அறிவிப்பாணையை வெளியிட்டு அதை செயல்படுத்த சிறிது கால அவகாசம் தேவைப்படுகிறது. அனைவருக்கும் தெரியப்படுத்தி, கருத்துகள், ஆலோசனைகளைக் கேட்க 2 மாத கால அவகாசம் போதுமானதாக இருக்காது. மேலும் சட்டம் மற்றும் நீதித்துறையிடமிருந்து ஒப்புதலைப் பெறவேண்டும்.

எனவே, 4 மாத அவகாசம் இருந்தால் இந்த உத்தரவுகளை செயல்படுத்த முடியும். ஆனால் அதே நேரத்தில் 2 மாத கால அவகாசத்திலேயே நாங்கள் அதைச் செயல்படுத்த முயல்கிறோம்” என்று கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து வழக்கை மார்ச் 23-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

செல்வமகள் சேமிப்பு திட்டம் விதிமுறை..! Sukanya Samriddhi Yojana Scheme In Tamil..!

RO வாட்டர் அருந்துவது ஆபத்தா? / Disadvantages of RO Water

சென்னை குடிநீர் வாரிய அதிகாரி விளக்கம்…

Disadvantages of RO Water:-

கேன் வாட்டர் தீமைகள்:- சாதாரண நீரில் சுண்ணாம்பு, மெக்னீஷியம், பாஸ்பேட், இரும்பு, பைகார்பனேட் போன்ற பல்வேறு சத்துக்கள் கரைந்துள்ளன. அதன் அடர்த்தியை டிடிஎஸ் என அளவிடுகிறோம்.

Disadvantages of RO Water:-

கேன் வாட்டர் தீமைகள்:- ஒரு லிட்டர் நீரில் கரைந்துள்ள இந்த சத்துக்களின் மொத்த அளவு 500 மி.கி-க்கு குறைவாக இருக்கக் கூடாது. குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்களில் நீரை சுத்திகரிக்கும்போது, டிடிஎஸ் அளவு 500 மி.கி அளவுக்கு கீழ் சென்றுவிட வாய்ப்புள்ளது.

Disadvantages of RO Water:-

கேன் வாட்டர் தீமைகள்:- இது போன்ற நீரை குடிப்போரின் உடலில் எலும்பு உறுதி தன்மை இழத்தல் போன்ற பல்வேறு உடல்நல பிரச்சினைகள் ஏற்படும். எனவே, எதிர்கால சந்ததியினரின் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு, அந்த இயந்திரங்களுக்கு தடை விதிக்க உத்தரவிட்டிருப்பார்கள் என்று கூறினார்.

Disadvantages of RO Water:-

கேன் வாட்டர் தீமைகள்:- தண்ணீர் மாசடைந்ததால் தான் இன்று R.O என்னும் ஒரு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நீரை சுத்திகரித்து உபயோகப்படுத்தும் சூழலுக்கு தள்ளப்பட்டோம். எனவே இனியும் நீர் நிலைகளை அசுத்தப்படுத்தி ஆறு, குளங்களை நாசப்படுத்தினால் தண்ணீரே இல்லை என்னும் பஞ்சத்திற்கு நம்முடைய தலைமுறை செல்லும் நாள் வெகுதொலைவிலில்லை.

 

மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com
Advertisement

Sathya Priya

வணக்கம்.. நான் சத்திய பிரியா.. நமது பொதுநலம்.காம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பல்வேறு பயனுள்ள பதிவுகளை எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now