Durian Fruit Information in Tamil
தினமும் நமது பதிவின் மூலம் அனைவருக்கும் மிகவும் பயனுள்ள ஒரு தகவலை பற்றி அறிந்துக் கொண்டு இருக்கின்றோம். அந்த வகையில் இன்றைய பதிவிலும் ஒரு பயனுள்ள தகவலை பற்றி அறிந்துக் கொள்ள இருக்கின்றோம். அது என்ன தகவல் என்றால் நாம் அனைவருக்கும் தெரிந்த துரியன் பழம் பற்றிய முழு விவரங்களையும் தான் தெரிந்து கொள்ள போகின்றோம். நாம் அனைவருக்குமே துரியன் பழம் தெரியும் ஏன் நம்மில் பலரும் அதனை சுவைத்தும் இருப்போம்.
ஆனால் அதனின் பிறப்பிடம் மற்றும் அதனின் வேறுபெயர்கள் போன்ற தகவல்கள் நம்மில் பலருக்கும் தெரிந்திருக்காது. அதனால் இன்றைய பதிவை முழுதாக படித்து துரியன் பழம் பற்றிய முழு விவரங்களையும் அறிந்துக் கொள்ளுங்கள்.
இதையும் படித்துப்பாருங்கள்=> வெண்ணெய் பழம் பற்றிய தகவல்
Durian Fruit Information in Tamil:
துரியன் என்பது துரியன் என்கின்ற தாவரப் பேரினத்தைச் சேர்ந்த பல்வேறு தாவர சிற்றினங்களைக் கொண்டுள்ள ஒரு மரம் ஆகும். இம்மரத்தின் பழமானது பார்ப்பதற்கு பலாப் பழத்தை போலவே வெளியே கரடு முரடான முள் தோற்றம் கொண்டிருக்கும்.
ஆனால் அதன் உள்ளே உள்ள சுளைகள் மிகவும் சுவையாக இருக்கும். இந்த துரியன் பலம் ஒரு பருவ கால பழம் ஆகும். மழைக் காலங்களில் மட்டுமே இவ்வகைப் பழங்கள் கிடைக்கும்.
பிறப்பிடம் மற்றும் வேறுபெயர்கள்:
துரியன் தென்கிழக்கு ஆசியாவைப் பிறப்பிடமாகக் கொண்டது. இப்பழத்தை மலாய் மொழியிலும் இந்தோனேசிய மொழியிலும் டுரியான் என்றும் டுரேன் என்றும் அழைப்பார்கள்.
மேலும் தமிழ் மொழியில் முள்நாறி என்றும், இலங்கை மொழியில் துரியன் என்றும் அழைப்பார்கள்.
இதையும் படித்துப்பாருங்கள்=> துரியன் பழத்தின் நன்மைகள்
தோற்றம்:
பொதுவாக முள்நாறி பழத்தின் மரமானது ஏறக்குறைய 50 மீட்டர் வரை வளரக் கூடிய ஒரு மரவகை ஆகும் . முள்நாறிப் பழம் அம்மரத்தின் கிளைப் பகுதியில் காய்க்கும்.
இந்த முள்நாறிப் பழத்தின் மேற்பரப்பு பச்சை நிறமும் பழுப்பு நிறமும் கலந்த ஒரு கலவையான நிறத்தில் இருக்கும். அதே நேரத்தில் அதன் உள்ளே இருக்கும் பழத்தின் சுளை பெரும்பாலும் மஞ்சள் நிறத்திலே இருக்கும்.
ஆனால் ஒரு சில நேரங்களில் இளஞ்சிவப்பு மற்றும் நீல நிறச் சுளைகள் அரிதாகக் கிடைப்பதுண்டு. சராசரியாக ஒரு முள்நாறிப் பழம் 30 செமீ நீளமும், 15 செமீ அகலமும் கொண்டிருக்கும்.
இதையும் படித்துப்பாருங்கள்=> ஹாலா பழம் எப்படி இருக்கும் தெரியுமா
பொதுவாக ஒரு முள்நாறிப் பழம் 1 கிலோ முதல் 3 கிலோ வரை எடையை கொண்டிருக்கும். மற்ற பழங்களில் வருவதை போலவே இதிலும் ஒருவகையான மணம் வரும்.
ஆனால் இதனை ஒரு சிலருக்கு ஒவ்வாமை காரணமாக இப்பழத்தின் மணத்தை நாற்றம் என்பார்கள். அதேநேரத்தில் ஒரு சிலர் இதையே நல்ல வாசனை என்பார்கள்.
பயன்கள்:
இந்த துரியன் பழத்தை சாப்பிடுவதால் பல நன்மைகள் உள்ளது. அதில் சிலவற்றை பார்க்கலாம்.
- காய்ச்சல் குணபடுத்த உதவிபுரியும்.
- புற்றுநோயைத் தடுக்கிறது.
- தூக்கமின்மையை போக்க உதவிபுரியும்.
- நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவி செய்கிறது.
- இரத்த சோகை குணமாக பயன்படுகிறது.
- எலும்புகள் வலுப்பெற உதவுகிறது.
- விந்தணு குறைபாடு நீங்க பயன்படுகிறது.
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |