உணவு பொருட்கள் கனவில் வந்தால் என்ன பலன் | Food Kanavu Palangal in Tamil

Food Kanavu Palangal in Tamil

சாப்பாடு கனவு பலன் | Sapadu Kanavu Palan

Food Kanavu Palangal in Tamil / சாப்பாடு கனவில் வந்தால்: உங்களுடைய கனவில் அடிக்கடி உணவு பொருள்கள் வருகிறதா? அதற்கு என்ன அர்த்தம் என்று தெரிந்துக்கொள்ளுங்கள். உங்களுடைய கனவுகள் அனைத்திற்கும் ஒவ்வொரு பலன்கள் உள்ளன. சிலருக்கு இயற்கை சம்பந்தமான கனவுகள் வரும், சிலருக்கு இறப்பது போன்று, சுப நிகழ்ச்சிகள் நடப்பது போன்ற கனவுகள், தாய் தந்தையர் பற்றிய கனவு போன்ற பல கனவுகள் வருவது இயல்பு. அந்த வகையில் உங்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது உணவு பற்றிய கனவுகள் வந்தால் என்ன பலன் (food kanavu palangal in tamil) என்று இப்போது படித்து தெரிந்துக்கொள்ளுவோம்..!

கனவில் காகம் வந்தால் என்ன பலன்?

உணவு பொருட்கள் கனவில் வந்தால் என்ன பலன்:

 • பந்தியில் சாப்பிடுவது போல் கனவு வந்தால்: கனவில் பந்தியில் உட்கார்ந்து சாப்பிடுவது போல் வந்தால் அதிகமாக உங்களுக்கு பொருள் சேர்வதற்கு வாய்ப்புள்ளது.
 • உணவு உண்பது போல் கனவு வந்தால்: விருந்தில் உணவு உண்பது போன்று கனவில் வந்தால் திருமணத்தில் இருந்து வந்த அனைத்து தடைகளும் நீங்கும், தொழிலில் பதவி உயர்வு கிடைக்கும்.
 • கனவில் இறைச்சி சாப்பிடுவது போல் வந்தால் உடலில் நோய்கள் ஏற்படப்போகிறது என்று அர்த்தம்.
 • கனவில் இறந்த மீனையோ அல்லது கருவாட்டினையோ கண்டால் பகைவர்களால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும்.
 • அரிசி சாதத்தினை சாப்பிடுவது போன்று கனவில் வந்தால் உங்களுக்கு நோய் வரக்கூடும் என்று அர்த்தம்.
 • கனவில் அரிசி வந்தால் நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டம் நீங்கி லாபம் அதிகரிக்கும்.
 • காரம் போன்ற உணவுகளை சாப்பிடுவது போன்று கனவில் வந்தால் உங்கள் உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும் என்று அர்த்தம்.
 • கனவில் டீ அருந்துவது போல் வந்தால் இழந்த நண்பர்களை மீண்டும் சந்திப்பதற்கு வாய்ப்பு ஏற்படும்.
 • கனவில் காபி குடிப்பது போல் வந்தால் உங்களை தேடி நல்ல தகவல் வரப்போகிறது என்று அர்த்தம்.
 • தானிய வகையான கோதுமை, அரிசி போன்றவைகளை கனவில் வந்தால் செல்வ செழிப்பு உண்டாகும்.
 • கனவில் கோழி முட்டை வந்தால் தொழிலில் ஏதோ விருத்தி வரப்போகிறது என்று அர்த்தம். 
 • உங்களுடைய கனவில் நீங்கள் முட்டை சாப்பிடுவது போல் வந்தால் வறுமையான நிலை காணப்படும்.
 • கனவில் உப்புவை நீங்கள் கண்டால் அதிகமாக பணம், பொருள் சேர்க்கைக்கு வாய்ப்புள்ளது.
 • தயிர் கனவில் வந்தால் என்ன பலன்: கனவில் தயிர் உண்பது போல் வந்தால் வீட்டில் லக்ஷ்மி கடாட்சம் வரப்போகிறது என்று அர்த்தம்.
 • கனவில் வெல்லம் உண்பது போல் கண்டால் வீட்டில் செல்வ செழிப்பு இல்லாமல் வறுமை உண்டாகும்.
 • உங்கள் கனவில் பருப்பு வகைகளை கண்டால் பகைவர்கள் உங்களை கண்டு பயந்து செல்வார்கள் என்று அர்த்தம்.
 • கனவில் புளிப்பு சார்ந்த உணவுகளை சாப்பிடுவது போல் கண்டால் நம்மை பிடித்த அனைத்து துன்பங்களும் நீங்கிவிடும்.
 • கனவில் பட்டாணி வந்தால் வீட்டில் சுப காரியங்கள் நடக்க போகிறது என்று இந்த கனவு மூலம் நமக்கு உணர்த்துகிறது.
 • உங்களுடைய ஆழ்ந்த கனவில் ரொட்டி சாப்பிடுவது போல் கண்டால் வீட்டில் செல்வ செழிப்பு நீங்கி வறுமை வரும்.
 • சூடான உணவுகளை சாப்பிடுவது போல் கனவில் வந்தால் மனதில் பல நாட்களாக இருந்த ஆசை நிறைவேற போகிறது என்று அர்த்தமாகும்.
 • கனவில் ஜாம் உணவுகளை சாப்பிடுவது போல் வந்தால் நல்ல காரியம் உங்களுக்கு நடக்கப்போகிறது என்று அர்த்தம்.
 • பாயசம் உண்பது போல் கனவில் வந்தால் நன்மைகள் பல நாடாகும் என்று அர்த்தம்.
 • கனவில் பால் அருந்துவது போல் வந்தால் வறுமை நீங்கி செல்வம் அதிகரிக்கும்.
 • கனவில் இஞ்சி வந்தால் உடலில் ஏதோ நோய் ஏற்படப் போகிறது என்று அர்த்தம். 
 • இனிப்பு உணவுகள் கனவில் வந்தால் வாழ்க்கையானது துக்கம் நீங்கி மகிழ்ச்சியாக இருக்கும்.
 • கனவில் ஏலக்காயை கண்டால் அடுத்தவர்களால் மதிக்க பெறும் நிலையை அடைவீர்கள்.
 • நீங்கள் ஏலக்காயை உண்பது போல் கனவில் வந்தால் உங்களை தேடி அதிக செல்வம் வரப்போகிறது என்று அர்த்தம்.
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil