சிலிண்டர் மானியம் பெறுவது எப்படி? – Gas Cylinder Maniyam Peruvathu Eppadi
LPG சிலிண்டருக்கு மத்திய அரசு மானியம் வழங்கி வருகிறது. சமையல் சிலிண்டருக்கு அரசு தரப்பிலிருந்து வழங்கப்படும் மானிய தொகையானது பலருக்கும் சரியான நேரத்தில் அக்கவுண்டில் வந்து சேர்வது இல்லை என்ற குற்றச்சாட்டு வழக்கமாக இருக்கும் ஒன்று. இந்த மானியத் தொகையானது மாநிலத்துக்கு மாநிலம் மாறுபடும். இந்த மானியத் தொகை உங்களுக்கு வரவில்லையா? அப்படி என்றால் நீங்கள் அதற்கு செய்யவேண்டியது என்ன தெரியுமா? அது குறித்த வழிமுறைகளை பற்றி தான் நாம் இப்பொழுது பார்க்கப்போகிறோம்.
கேஸ் சிலிண்டர் மானியம் பெறுவது எப்படி?
மத்திய அரசு LPG கேஸ் சிலிண்டருக்கு மானியம் வழங்குகிறது. அதாவது நாடுகளில் இருக்கின்ற கிராம வாசிகள், ஏழை மக்கள், பொருளாதாரத்தில் பின்தங்கியோர் ஆகிய அனைவருக்கும் மத்திய அரசு “பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா” என்ற திட்டத்தின் கீழ் சிலிண்டர்கள் இலவசமாக பயன்படுத்தும் சேவையை செயல்படுத்தி கொண்டிருக்கிறது.
நாம் சிலிண்டர் வாங்கும் போது வாங்கிய சிலிண்டர் தொகையில் இருந்து அந்த வாடிக்கையாளர் வங்கி கணக்கிற்கு அரசு தரப்பில் மானியமாக செலுத்தப்படுகின்றது. இவ்வாறு ஒவ்வொரு முறையும் சிலிண்டர்க்கு முன்பதிவு செய்யும் போது மணியத்தொகை வருகிறதா என்பதை தெரிந்து கொள்ள மிகவும் எளிமையான வழி உள்ளது. ஆன்லைன் மூலம் நீங்கள் தெரிந்து கொள்ளலாம். அதற்கான வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
LPG சிலிண்டர் மானியம் வரவில்லையா? பெறுவதற்கான வழி இதோ..!
ஸ்டேப்: 1
- முதலில் www.mylpg.in இந்த தளத்திற்குள் செல்ல வேண்டும்.
ஸ்டேப்: 2
- பிறகு வலதுபுறத்தில் இருக்கும் ஐகான் மூலம் நீங்கள் பயன்படுத்தும் சிலிண்டர் நிறுவனத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்.
ஸ்டேப்: 3
- இப்போது Sign In அல்லது Sign Up கேட்கும். ஐடி ஏற்கனவே உருவாக்கப்பட்டிருந்தால் அப்படியே Login செய்யலாம்.
- புதிய பயனர் என்றால் ‘New User’ ஆப்ஷனை கிளிக் செய்து Registration செய்ய வேண்டும். அதற்கு உங்களிடம் Consumer Number மற்றும் Registered Mobile Number தெரிந்திருக்க வேண்டும். இவை இரண்டும் தெரியும் என்றால் அவற்றை உள்ளிட்டு Continue என்ற ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள்.
- Continue என்ற ஆப்ஷனை கிளிக் செய்தவுடன் உங்கள் மொபைல் எண்ணிற்கு ஒரு OTP அனுப்பப்படும். அந்த OTP எண்ணினை உள்ளிட்டு Registration செய்து கொள்ளுங்கள்.
இதையும் படியுங்கள் 👉 கேஸ் சிலிண்டர்கள் ஏன் வெடிக்குது தெரியுமா உங்களுக்கு?
ஸ்டேப்: 4
- இப்போது புதிய விண்டோ ஓப்பன் ஆகும். அதில் இருக்கும் ’View Cylinder Booking History’ என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
ஸ்டேப்: 5
- இதில் உங்களுடைய சிலிண்டர் மானியம் குறித்த அனைத்து தகவலும் இடம் பெற்று இருக்கும். அதாவது மானியத் தொகை வந்த கடைசி தேதி போன்ற அனைத்து தகவலும் இருக்கும். ஒருவேளை மானிய தொகை வரவில்லை என்றால் ’Feedback’ என்ற பட்டனை கிளிக் செய்ய வேண்டும். இதன் மூலம் நீங்கள் புகாரை பதிவு செய்யலாம்.
- இதுக் குறித்த மேலும் சந்தேகங்கள் மற்றும் புகார்களுக்கு 18002333555 இந்த நம்பரில் அழைக்கவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today useful information in tamil |