தங்கம் வாங்குவது எப்படி.?
வணக்கம் நண்பர்களே.! இன்றைய பதிவில் அனைவருக்கும் பயனுள்ள தகவல் பற்றி தான் தெரிந்துகொள்ள போகிறோம். முன்னோர்கள் காலத்தில் தங்கம் என்பது பணக்காரனாக உள்ள வீட்டில் தான் வாங்குவார்கள். மற்றும் சில நபர்கள் ஆடம்பரத்திற்காகவும் தங்கத்தை வாங்கினார்கள். இதெல்லாம் மாறி இன்றைய காலத்தில் தங்கம் இல்லாத வீடுகளே இல்லை. இப்பொழுதெல்லாம் சேமித்த பணத்தில் தங்கம் தான் வாங்குகிறார்கள். அதனால் தங்கம் என்பது அத்தியாவசிய பொருளாக மாறி விட்டது. ஆனால் இந்த தங்கத்தை வாங்கும் போது அதனின் தரத்தை எப்படி பார்ப்பது என்று தெரிவதில்லை. தங்கம் வாங்கும் போது எப்படி வாங்க வேண்டும் என்று இந்த பதிவை முழுமையாக படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
இதையும் படியுங்கள் ⇒ உங்கள் வீட்டில் தங்கம் சேர வேண்டுமா? அப்போ ஒரு முறை இந்த நேரத்தில் மட்டும் தங்கம் வாங்கி பாருங்கள்..!
தங்கம் வாங்கும் போது கவனிக்க வேண்டியவை:
ஒரு துணி எடுத்தாலும் அதனை பத்து முறை பார்த்து தான் வாங்குகிறோம். அந்த துணி தரமானதா,, அதிலிருந்து சாயம் போகுமா என்றெல்லாம் பார்த்து தான் வாங்குவோம். துணி வாங்கும் போதே இவ்வளவு கவனிக்கிறோம். ஆனால் தங்கத்தை வாங்கும் போது ஆராய்ந்து வாங்குகிறீர்களா. இது வரைக்கும் நீங்கள் பார்த்து வாங்க வில்லை என்றாலும் இனிமேல் வாங்கும் தங்க நகை தரமானதா, தூய்மையானத என்று பார்த்து வாங்குங்கள். அதனை எப்படி பார்த்து வாங்க வேண்டும் என்று தெரிந்து கொள்வோம் வாங்க..
நீங்கள் நகை கடைக்கு சென்றதும் பிடித்த நகையை கையில் எடுத்து பார்ப்பீர்கள். அப்படி பார்க்கும் பொழுது உங்களின் வியர்வை அந்த தங்கத்தில் மேல் படும் அல்லவா.! அப்போ உங்களின் வியர்வை துளி பட்டதும் நகையின் கலர் மாறாமல் இருந்தால் தூய்மையான தங்கம் அதுவே நிறம் மாறினால் போலியான தங்கம் என்று உறுதிப்படுத்தி கொள்ள வேண்டும்.
அடுத்து தங்கத்தில் ஹால்மார்க் முத்திரை இருக்க வேண்டும். ஹால்மார்க் முத்திரை இல்லாத எந்த நகையும் வாங்க கூடாது. இது இரண்டையும் பார்த்து நகையை வாங்கி கொண்டீர்கள் என்றால் வீட்டிற்கு வந்ததும் சில விஷயங்கள்கவனிக்க வேண்டும். அது என்னவென்று தெரிந்து கொள்வோம் வாங்க..
உங்கள் வீட்டில் காந்தம் இருந்தால் அந்த நகையி மீது காந்தத்தை தொடுங்கள். அதில் இரும்பு கலந்து இருந்தால் நகை ஈர்க்க படும். அதில் எந்த கலப்படமும் கலக்க வில்லை என்றால் காந்தம் ஈர்க்காது.
அடுத்து எதாவது பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொள்ளுங்கள். அதில் வாங்கி வந்த நகையை அதில்போடுங்கள். அந்த நகை அடியில் சென்றுவிட்டால் எந்த கலப்படமும் அதில் இல்லை அதுவே அதில் கலப்படம் செய்ய பட்டிருந்தால் நகை மேலே மிதக்கும். போலியான தங்கமா என்பதை இதை வைத்தும் கண்டுபிடித்து விடலாம்.
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |