நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களின் காலாவதி தேதி என்ன தெரியுமா.?

Advertisement

Household Items Expiry Date Tamil

வணக்கம் நண்பர்களே இன்றைய பதிவில்  எல்லோருக்கும் ஒரு பயனுள்ள தகவல்களை பற்றித்தான் தெரிந்துகொள்ளப்போகின்றோம். அதாவது நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களின் காலாவதி தேதி என்ன என்பதை பற்றித்தான் தெரிந்து கொள்ளப்போகிறோம். பொதுவாக நாம் பயன்படுத்தும் Face Cream, Tablets,  oil, போன்ற பொருட்களுக்கு மட்டும்தான் காலாவதி தேதி பார்ப்போம்  அல்லவா, அதனை பயன்படுத்தும் தேதி முடிந்த பிறகு அந்த பொருட்களை வீசி விடுவோம். ஆனால் நாம் அன்றாடம் பயன்படுத்த கூடிய சீப்பு, துணிகள்,  காலணிகள்  போன்றவற்றிற்கும் காலாவதி தேதி இருக்கிறது. மேலும் அவை என்ன என்பதை பற்றி தெரிந்துகொள்ளலாம் வாங்க.

ஒரே டூத் பிரெஷை பல மாதங்களுக்கு பயன்படுத்தும் நபரா நீங்கள்.. அப்போ இதை தெரிந்துக்கோங்க..!

நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருளின் காலாவதி தேதி:

நம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களின் காலாவதி தேதி தெரியாமல் அதை உபயோகிக்கும் பொழுது உடலில் பாதிப்புகளும் ஏற்படுகிறத.  மேலும் அவற்றை எப்படி பயன்படுத்துவது  என்றும் இதனால் வரக்கூடிய பிரச்சனைகள் என்னவென்றும் தெரிந்துகொள்ளலாம் வாங்க.

சீப்பு:

நாம் தினமும் தலை முடிகளை அலங்கரிப்பதற்காக  உபயோகப்படுத்தும் சீப்பிற்கும் காலாவதி தேதிகள் உண்டு. இதனுடைய காலாவதி தேதி என்னவென்றால் 8 முதல் 10 மாதங்கள் வரையும் தான், அதற்கு பிறகு அதை உபயோகப்படுத்தும் பொழுது முடி உதிர்வதற்கும் வாய்ப்புகள் இருக்கிறது.

டவல்:

நம் அன்றாடம் குளித்த பிறகு உபயோகிக்க கூடிய ஒரு துணி  டவல், இதனுடைய காலாவதி தேதி 1 அல்லது 2 வருடங்கள் மட்டுமே உபயோகிக்க வேண்டும். அதற்கு மேல் அந்த டவல் துணிகளை உபயோகிக்கும் பொழுது பாக்டீரியாக்களின் தாக்கம் அதிகம் இருப்பதால் உடலில் அலர்ஜி போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்துவதற்கு வாய்ப்பாக உள்ளது.

தலையணை:

நாம் தினமும் உறங்குவதற்கு பயன்படுத்தும் தலையணைக்கு கூட காலாவதி தேதிகள் இருக்கிறது.  இதனுடைய காலாவதி தேதி 2 அல்லது 3 வருடங்கள் மட்டும்தான் உபயோகிக்கவேண்டும். அதற்கு மேல் உபயோகிக்கும் பொழுது கிருமிகள் அதிகரித்து உடலில் பல பாதிப்புகளை ஏற்பட செய்யும்.

Expiry Date of Toothbrush in Tamil:

நாம் தினமும் பயன்படுத்தும் பல் குச்சிக்கும் காலாவதி தேதிகள் இருக்கிறது. இதனுடைய காலாவதி தேதி 7 முதல் 10 மாதம் மட்டும் தான் பயன்படுத்தவேண்டும். அதற்கு மேல் பயன்படுத்தும் பொழுது அதனுடைய தன்மைகள் மாறிவிடும்.

Shoes Expiry Date in Tamil:

தினமும் அதிகமாக நாம்  உபயோகிக்க கூடிய ஒரு பொருளில்  காலணிகளான  Shoes  -வும் ஒன்றாகும். இதனுடைய காலாவதி தேதி ஒரு வருடம் மட்டும் தான் பயன்படுத்த வேண்டும்.   ஆனால் நாம் இதனை பல வருடம் உபயோகிப்போம். இதனால் பாதங்களில் சில பிரச்சனைகளும் வரும்.

பாத்ரூம் கிளீனர்:

பாத்ரூம் சம்மந்தப்பட்ட எந்தவிதமான பொருட்களாக இருந்தாலும் அதை 3 மாதங்கள் மட்டுமே உபயோகிக்க வேண்டும். அதற்கு மேல் அதை பயன்படுத்தும் பொழுது அதனுடைய தன்மைகள் குறைந்து சுத்தம் செய்வதை இழக்கிறது.

தலைக்கவசம்:

நாம் வாகனங்களில் பாதுகாப்பாக போவதற்கு அதிகமாக  பயன்படுத்தும் இந்த தலைக்கவசத்திற்கும் காலாவதி தேதிகள் இருக்கிறது. இதனுடைய காலாவதி தேதி 2 வருடங்கள் மட்டும் தான் பயன்படுத்தவேண்டும்.

உள்ளாடைகள்:

பெண்கள் அணியும் உள்ளாடைகளுக்கும் காலாவதி தேதிகள் இருக்கின்றன. இதனுடைய காலாவதி தேதி ஒன்று அல்லது இரண்டு வருடங்கள் மட்டும்தான் உபயோகிக்கவேண்டும். அதற்கு மேல் அதனை உபயோகிக்கும் பொழுது அதனுடைய தன்மைகள் மாறி சங்கடத்தை ஏற்படுத்தும்.

மாவு வகைககள்:

நாம் சமையல்களில் அதிகமாக உபயோகித்து வரும் மாவு பொருட்களுக்கும் காலாவதி தேதிகள் உள்ளன. பொதுவாகவே நாம் வீட்டில் உபயோகிக்க கூடிய மாவுகளை 6 அல்லது 12 மாதங்கள் மட்டும் தான் உபயோகிக்கவேண்டும். அதற்கு மேல் இதனை உபயோக்கிக்கும் பொழுது உடலில் பலவிதமான பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com
Advertisement