புயலுக்கு பெயர் வைப்பதற்கு பின்னால் இவ்வளவு இருக்கிறதா தெரியாமப்போச்சே..!

How do you name a storm in tamil

புயலுக்கு எப்படி பெயர் வைக்கிறார்கள்

பொதுவாக புயல் என்றாலே அனைவருக்கும் பயமாக தான் இருக்கும். நாம் பயப்படும் அந்த புயலில் நிறைய வகைகள் காணப்படுகின்றன. அதுமட்டும் இல்லாமல் அந்த புயலுக்கு நிறைய பெயர்கள் சூட்டப்படுகின்றன. புயலுக்கு பெயர் எப்படி வைக்கப்படுகிறது என்ற குழப்பம் பலருக்கும் இருக்கிறது. ஏனென்றால் குழந்தைகளுக்கு பெயர் வைக்கலாம் என்று முடிவு செய்தாலே என்ன பெயர் வைப்பது என்று யோசனையாக இருக்கும். அப்படி இருக்கும் போது புயலுக்கு எப்படி சற்றென்று பெயர் வைக்கிறார்கள் என்று யோசிக்கிறீர்களா. உங்களுடைய யோசனைக்கு பதில் அளிக்கும் வகையில் இன்றைய பதிவு இருக்கும். இன்றைய பதிவில் புயலுக்கு எப்படி பெயர்வைக்கிறார்கள் என்று தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..!

புயல் எப்படி உருவாகிறது:

கடல்பறப்பின் மேலே உள்ள காற்றின் வெப்பநிலை அதிகரிக்கும் போது வெப்பமடைந்த காற்று மேல் நோக்கி செல்கிறது. இது மாதிரி காற்று மேல் நோக்கி செல்வதனால் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகி அது புயலாக மாறுகிறது.

அதேபோல புயல் மூன்று விதமான நிலைகளை கடந்து செல்கிறது.

  1. புயல் தோன்றும் நிலை
  2. வலுவடைந்து நிலை
  3. வலுவிழந்த நிலை
மழை எப்படி உருவாகிறது என்று உங்களுக்கு தெரியுமா..?

How do You Name a Storm in Tamil:

புயலுக்கு எப்படி பெயர் வைக்கிறார்கள்

புயலுக்கு முதலில் ஆஸ்திரேலியாவும் அதன் பின்பு இரண்டாவதாக அமெரிக்காவும் பெயர் வைத்தன. 

அதன் பின்பு 2000 ஆம் ஆண்டு உலக வானிலை அமைப்பு மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டின் போது இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம், ஓமன், மாலத்தீவு, இலங்கை, தாய்லாந்து மற்றும் மியான்மர் போன்ற 8 நாடுகள் கலந்து கொண்டன.

இந்த மாநாட்டின் போது ஒவ்வொரு நாடுகளும் புயலுக்கு பெயர் வைப்பது பற்றி ஆலோசனை செய்து தனித்தனியாக ஒவ்வொரு நாட்டில் இருந்தும் 8 பெயர்கள் சொல்லப்பட்டன.

கடைசியாக 8 நாடுகளும் சேர்ந்து 64 பெயர்களை உருவாக்கினார். இந்த 64 பெயர்களின் அடிப்படையில் தான் புயலுக்கு பெயர் வைக்கிப்படுகிறது.

அதற்கு பிறகு 2004- ஆம் ஆண்டு 64 நான்கு பெயர்களுடன் 41 பெயர்கள் சேர்த்து 105 புயல் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளன.

ஆகவே வானிலை ஆராய்ச்சியாளர்கள் புயலின் நிலையை நன்கு அறிந்து அதன் பின்னர் புயலுக்கான பெயரை பட்டியலில் இருந்து பெயர் தேர்வு செய்து புயலுக்கு பெயர் வைக்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்⇒ கடலில் அலைகள் எப்படி உருவாகிறது என்று உங்களுக்கு தெரியுமா..?

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Today Useful Information in tamil