ஆன்லைன் மூலம் பிறப்பு/இறப்பு சான்றிதழ் பெறுவது எப்படி?

Advertisement

இனி ஆன்லைனில் பிறப்பு இறப்பு சான்றிதழ்கள் விண்ணப்பிக்கலாம்..! How to Get Death Certificate Online in Tamil

How to Get Death Certificate Online in Tamil:- வணக்கம் நண்பர்களே இந்த பதிவில் நாம் ஆன்லைன் மூலம் பிறப்பு / இறப்பு சான்றிதழ் அப்ளை செய்து பெறுவது எப்படி என்று இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம் வாங்க. இருப்பினும் தாங்கள் பிறப்பு இறப்பு சான்றிதழ் ஆன்லைன் மூலம் அப்ளை செய்வதற்கு முன்பு நீங்கள் எந்த அலுவலகத்தில் பதிவு செய்தீர்கள் என்று தெரிந்திருக்க வேண்டும். அதாவது ஊராட்சியில் அல்லது நகராட்சியில் அல்லது மாநகராட்சியில் அல்லது கார்ப்பரேஷன் அலுவலத்தில் பிறந்தீங்களா என்ற விவரங்களை தாங்கள் தெரிந்திருக்க வேண்டும். இந்த விவரம் தங்களுக்கு தெரிந்திருந்தால் போதும் தாங்கள் மிக எளிமையாக பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களை அப்ளை செய்து பெறமுடியும். ஒரு மனிதன், பிறக்கும் போது, அவன் வாழும் காலம் வரை அவனது பிறப்புச்சான்றிதழ் பயன்படும். அதே மனிதன் இறந்த பின்பு, அவனது குடும்பத்தாருக்கு அவனது இறப்புச் சான்றிதழ் பயன்படுகிறது. இதிலிருந்தே பிறப்பு இறப்பு சான்றிதழ்களின் முக்கியத்துவத்தை உணர்வீர்கள்.

சரி வாங்க ஆன்லைன் மூலம் பிறப்பு/இறப்பு சான்றிதழ் பெறுவது எப்படி? (how to get death certificate online in tamil) என்று தெரிந்து கொள்ளலாம்.

newஆன்லைனில் வாரிசு சான்றிதழ் அப்ளை செய்வது எப்படி?

இணையதளம் மூலம் பிறப்பு / இறப்பு சான்றிதழ் விண்ணப்பிப்பது எப்படி? 

பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழை ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து பெறுவதற்கு 3 இணையதள சேவைகள் உள்ளது அவற்றில் நாம் இன்று பதிவு துறை இணையதளத்தில் விண்ணப்பித்து பெறலாம் என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க.

ஸ்டேப்: 1

முதலில் https://tnreginet.gov.in/portal/ என்ற இணையதள முகவரிக்கு செல்லுங்கள். இப்பொழுது இணையதளத்தின் முகப்பு பகுதி OPEN ஆகும். தாங்கள் ஏற்கனவே இந்த இணையதளத்தில் யூஸர் ஐடி மற்றும் பாஸ்வர்ட் கொடுத்து லாகின் செய்திருந்தால், அவற்றை உள்நுழைவு என்ற இடத்தில் தங்களுடைய பெயர், கடவுச்சொல் மற்றும் அவற்றில் கொடுக்கப்பட்டுள்ள கேப்சா கோடினை கொடுத்து லாகின் செய்து கொள்ளுங்கள்.

ஸ்டேப்: 2

பின் இணையதளத்தின் முகப்பு பகுதியில் மின்னணு சேவை என்ற ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள், அவற்றில் சிலவகையான ஆப்ஷன்கள் காட்டப்படும் அவற்றில் சான்றளிக்கப்பட்ட நகல் என்ற ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்.

அதன் பிறகு பிறப்பு / இறப்பு என்ற ஆப்சன் இருக்கும் அதனை கிளிக் செய்தால், இப்பொழுது புதிதாக ஒரு பேஜ் திறக்கப்படும்.

ஸ்டேப்: 3

அந்த பேஜில் ஆவணங்களின் விவரங்களை உள்ளிட வேண்டும். அதாவது ஆவணத்தின் வகைப்பாடு என்ற இடத்தில், சிலவகையான ஆப்ஷன் இருக்கும் அவற்றில் தாங்கள் பிறப்பு இறப்பு சான்றிதழ்களில் எந்த சான்றிதழ் விண்ணப்பிக்க வேண்டுமோ அந்த சான்றிதழை தேர்வு செய்து கொள்ளுங்கள்.

அதன் பிறகு சான்றிதழ் எண், பதிவு எண், விண்ணப்பதாரர் பெயர், தந்தை பெயர், தயார் பெயர், பிறந்த தேதி துணை பதிவாளர் அலுவலர் பெயர் போன்ற விவரங்களை உள்ளிட வேண்டும்.

அதன் பிறகு முக்கியமான ஒன்று இதுதான் தொடக்கம் தொடர்ந்து  தேடவேண்டும் மற்றும் முடிவு தொடர்ந்து தேடவேண்டும் என்ற இடத்தில் விண்ணப்பதாரரின் பிறந்த ஆண்டினை தேர்வு செய்ய வேண்டும்.

பிறகு தேடுக என்ற ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள். உதாரணத்திற்கு விண்ணப்பதாரரர் 1996 பிறந்திருந்தால் அந்த ஆண்டில் பிறந்தவர்களின் பிறப்பு பட்டியல் இப்பொழுது காட்டப்படும். அவற்றில் தங்களுடைய பிறப்பு பதிவினை தேர்வு செய்து கொள்ளுங்கள்.

ஸ்டேப்: 4

பிறகு இணையவழி விண்ணப்பிக்க என்ற ஆப்ஷன் இருக்கும் அதனை கிளிக் செய்யுங்கள். பிறகு மற்றொரு பேஜ் ஓபன் ஆகும். அதாவது தனிப்பட்ட விவரங்கள் என்ற பேஜ் திறக்கபடும் அவற்றில் தங்களுடைய தனிப்பட்ட விவரங்களை உள்ளிட வேண்டும்.

அதாவது பெயர் என்ற இடத்தில் விண்ணப்பதாரரின் பெயரை டைப் செய்யுங்கள், ஆளரி அடையாள அட்டை என்ற இடத்தில் ஆதார அடையாள அட்டையை தேர்வு செய்து கொள்ளுங்கள், ஆளரி அடையாள அட்டை எண் என்ற இடத்தில்  ஆதார அடையாள அட்டையின் எண்ணினை டைப் செய்யுங்கள், பிறகு தங்களுடைய மின்னஞ்சல் முகவரி, கைபேசி எண் மற்றும் தங்களுடைய முகவரி போன்ற விவரங்களை உள்ளிடவேண்டும்.

பிறகு சேமிக்க மற்றும் அடுத்த பக்கம் என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

இப்பொழுது தாங்கள் விண்ணப்பித்த விண்ணப்பங்கள் சரியாக உள்ளது என்றால் சரி என்ற பொத்தானை கிளிக் செய்து உள்நுழையுங்கள்.

பிறப்பு இறப்பு சான்றிதழ் விண்ணப்பிக்கும் முறை ஸ்டேப்: 5

இப்பொழுது கட்டணம் விவரங்கள் என்ற பேஜ் ஓபன் ஆகும் அவற்றில் தாங்கள் செலுத்த வேண்டிய கட்டணம் விவரங்கள் கொடுக்கப்பட்டிருக்கும்.

அதாவது பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து பெறுவதற்கு விண்ணப்ப கட்டணம் ரூ.305.

அந்த கட்டண தொகையை தாங்கள் ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டியதாக இருக்கும்.

எனவே செலுத்துக என்ற ஆப்ஷனை கிளிக் செய்யங்கள் அவற்றில் சில விவரங்கள் கேட்கப்பட்டிருக்கும் அவற்றை சரியாக உள்ளிட்டு தங்களுடைய விண்ணப்ப கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்தலாம்.

ஆன்லைனில் பண பரிவர்த்தனைகளை முடித்தபிறகு Acknowledge Receipt தங்களுக்கு கிடைக்கும் அதில் கீழ் கொடுக்கப்பட்டுள்ள ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள்.

அதன் பிறகு ஒரு டவுன்லோட் ஆப்சன் தோன்றும் அதில் இருக்கும் சிவப்பு கலர் எழுத்தை கிளிக் செய்தவுடன் உங்களுக்கு ஒரு PDF file டவுன்லோட் ஆகும் அதைப் படித்து பார்த்து விவரத்தை தெரிந்து கொள்ளுங்கள்.

How to Download Birth and Death Certificate – ஸ்டேப்: 6

பிறகு இணையதளத்தின் முகப்பு பகுதிக்கு சென்று மின்னணு சேவை என்ற ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள், பிறகு சான்றளிக்கப்பட்ட நகல் என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும், பிறகு கோரிக்கைப் பட்டியல் என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.

இப்பொழுது இந்த பகுதியின் கீழ் தங்களுடைய விவரங்களை காணலாம் அதாவது தங்களுடைய விண்ணப்பத்தின் எண், தங்களுடைய பதிவு எண், ஆவணத்தின் வகைப்பாடு, விண்ணப்ப நாள், தொகை செலுத்தப்பட்ட நிலைப்பாடு, நிகழ்நிலை ஆவணம் மற்றும் கையொப்பமிட்ட ஆவணம் போன்ற விவரங்கள் இருக்கும்.

தாங்கள் ஆன்லைன் மூலம் பணம் செலுத்தி இருந்தால் தாங்கள் விண்ணப்பித்த 1 அல்லது 2 நாட்களுக்குள் தங்களுடைய விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படும்.

எனவே இரண்டு நாள் கழித்து இந்த அதிகாரப்பூர்வ இணையதளத்தை செக் பண்ணுங்கள் அதாவது முகப்பு பகுதியில் மின்னணு சேவை என்ற ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள், பிறகு சான்றளிக்கப்பட்ட நகல் என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும், பிறகு கோரிக்கைப் பட்டியல் என்ற ஆப்ஷனை கிளிக் அந்த பக்கத்தின் கீழ் பகுதியில் கையொப்பமிட்ட இடத்தில் டவுன்லோட் ஆப்சன் இருக்கும். டவுன்லோட் ஆப்ஷன் வந்திருந்தால் டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

அவ்வளவுதாங்க ஆன்லைன் மூலம் பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ் அப்ளை செய்யும் வழிமுறைகள்.

தொலைந்த சொத்து பத்திரத்தை ஆன்லைனில் அப்ளை செய்து பெறுவது எப்படி?

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tamil Tech News
Advertisement